நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??
தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.
கொத்தமல்லி கீரை – மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை – நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை – நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை – மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை – பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி – இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல் – இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை – மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை – பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை – நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை – இருமல் குணமாகும்
புதினா கீரை – மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை – சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.
எலும்பு வலுப்பெற – கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.
நாக்கில் புண் ஆற – அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
குடல் புண் ஆற – வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
உடல் வலிமை பெற – அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
அஜீரணம் சரியாக – ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
மூட்டு வலி குணமாக – அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.
இரும்புச் சத்துக்கு – மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.
சிறுநீரக கோளாறு – முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.
படர்தாமரை, முகப்பரு – சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.
இயற்கை முறை வைத்திய குறிப்புகள்:
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.