பரிணாமக் கொள்கையை உலகுக்கு தந்த டார்வின்
சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பிப்ரவரி 12,1809 – ஏப்ரல் 19,1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப் படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.
இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859ம் ஆண்டில்உயிரினங்களின் தோற் றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒருநூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ்பெற்ற, புரட்சி ஏற்படுத்திய நூல்.இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில், உலகில் பலஇடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவு களுக்குச் சென்றுநிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.
மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர்அஞ்சாமல் கூறிய கருத்துகள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாடவைத்தது. எனினும், இவருடைய கருத்துகள் இன்று அறிவியல் உலகில்பெரு மதிப்புடையவையாகும்.
“மனிதன், குரங்கிலிருந்து பரிண மித்தவன்,உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கனபிழைக்கும்‘ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. அதாவதுவலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது“என்பன போன்ற புதிய அறிவியல் கோட் பாடுகளை இவர் கண்டறிந்தார்.
டார்வின் 1809 ம் ஆண்டு பெப்ரவரி 12ம் திகதி இங்கிலாந்தில் உள்ள ஷ¤ரூஸ்பெரி (Shrewsbury) என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ரொபர்ட்டார்வின் ஒரு மருத்துவர். அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின்மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். ஷ¤ரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறு வயது முதற்கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம்காட்டி வந்தார்.
தந்தையின் ஆலோசனையை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்சேர்ந்தார். டார்வின் படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம்உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. தமது 22ம்வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதேபல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜோன்ஹென்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.
அவர் மூலமாக கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராய் என்பவரின் நட்பு கிட்டியது.தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்றகப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராயின் தலைமையில்செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்து கொள்ளுமாறு டார்வினுக்குஅழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு 1831ம் ஆண்டு டிசம்பர் 27ம் திகதிகேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர்.
இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத்தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.
அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22. ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையேஒரு தடவை வலம் வந்தது. இடர் மிகுந்த கடற்பயணத் தைச் சார்ள்ஸ்டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவ லைப்படாமல், தற்போது காணக் கிடைக்காத பலஉயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார்.
ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும்இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்று மையும் கொண்டிருப்பதைக் கண்டுடார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறுமாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும்தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது.“உயிரினங்களில் ஏற் படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்றவினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.
இந்நாளில் காணவியலாத, மறைந் துவிட்ட உயிரினங்களையும், மற்றும்இப்போது உயிரோடிருக்கின்ற உயிரி னங்களையும் அவற்றின் எலும்புகளின்துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான்சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்துபோயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்தவிலங்குகளி லிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள்தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் தீவுகளில்புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக்கண்டு அதிசயித்தார்.
இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர்வந்தார். இப்படி பல்வேறு ஆராயச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836 ம் ஆண்டுஇங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும்ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்துஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், தமது கண்டுபிடிப்புகளையும்ஆய்வுக் கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில்வெளியிட்டார். 1859ம் ஆண்டு பரிணாமக் கொள் கையை, டார்வின் உலகைவியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளி யிட்டார்.
‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்‘ என்ற அந்த புத்தகம்கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன் படிஉயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். இது புதியஇனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பயணத் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார்.
ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார்.
இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்து கொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம் என்று அவருக்குத் தோன்றியது.
“உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” – இவ்வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. எனவே இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார்.
இவ்வாய்வின் பயனாக “பரிணம வளர்ச்சிக் கொள்கை”முடிவுக்கு அவர் வர நேர்ந்தது. அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கெண்டு வந்த டார்வின் தமது கண்டுபிடிப்புகளை யெல்லாம். ஆய்வுக் கட்டுரையாக எழுதி லண்டனில் வெளியிட்டார்.
1839ம் ஆண்டு டார்வின் எம்மா வெட் ஜ்வுட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார்.
இந்நிலையில் சார்லஸ் டார்வினுக்கும், ஆல்ஃபிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திருட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார்.
1858ம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புக ளும், அவரது நண்பர் வாலஸின் கட் டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் வாசிக்கப்பட்டன.
மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே பரிணாம வளர்ச்சிக் கொள்கை ஆகும். 1859 ம் ஆண்டு இக் கொள்கையை, இயற்கையில் உயிரினங்க ளின் தோற்றம் என்ற தலைப்பில் வெளியிட்டார். இக்கருத்துப்படி உயிரின ங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் சாதகமான மாற்றங்கள் நிலைத்து நிற் கும், பாதகமான மாற்றங்கள் அழிந்து போகும்.
இதை வேறுவகையாகக் கூறவேண்டுமெனில், உயிரினங்களில் தகுதியும் வலிமையும் உள்ளவை வாழும், அற்றவை வீழும் எனக் கூற லாம். இக்கருத்துகளின் அடிப்படையி லேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப் போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர்.
டார்வினின் கொள்கைகளை பெரு ம்பாலான இயற்கையிலாளர் வரவேற்றனர். ஆனால் அவரது கருத்துக்களுக்கு எதிர்ப்பும், மாறுபாடும் இல்லாமலில்லை. டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபு வழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்ந்த திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார்.
அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒறோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளங்குவதாகும். டார்வினின் “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” என்னும் நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது. என்பது உண்மையே; ஆனால் தனிமனிதர் என்று முறையில், சார்லஸ் டார்வின் அனைவரின் போற்றுதலுக்கும் உரியவராக விளங்கினார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆம். டார்வின் மிகச் சிறந்த மாமனிதராக விளங்கியவர்; தம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவை பற்றிய ஆய்வில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; இயற்கையின் ஆற்றலையும், ஒழுங்கு முறையான ஒத்துழைப்பையும் கண்டு பெரிதும் வியப்படைந்தார்.
சார்லஸ் டார்வின் 1882ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அனைவராலும் போற்றப்பட்ட ஓர் இயற்கையியல் அறிஞரின் புகழ் அவரது கோட்பாடான “பரிணாம வளர்ச்சிக் கொள்கை”யால் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதில் மிகயேதுமில்லை.
சார்ள்ஸ் டார்வினின் முட்டை கண்டுபிடிப்பு
“இயற்கைத் தேர்வுக் கொள்கை” எனப்படும் பூமியில் உயிரின கூர்ப்புத் தொடர்பான கொள்கையை உலகுக்குத் தந்த சார்ள்ஸ் டார்வின் தனது கொள்கைக்கு ஆதாரம் தேடி HMS Beagle எனப்படும் கப்பல் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் சென்று மாதிரிகளைச் சேர்த்த போது கண்டெடுத்த முட்டையொன்று பிரித்தானிய கேம்பிரிட்ஷ் பல்கலைக்கழக தொல்பொருள் சேமிப்பிடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டையை டார்வின் அதற்கு அளவில்லாத சிறிய பெட்டி ஒன்றுக்குள் அடைத்து வைத்ததால் அதில் வெடிப்பு உருவாகி இருக்கிறது. இந்த முட்டை மீது டார்வின் தனது பெயரை தன் கைப்பட எழுதி இருக்கிறார். (இந்த இடத்தில் இந்தளவு பெரிய அறிஞருக்கு முட்டைக்கு அளவான பெட்டியை தேர்ந்தெடுக்க முடியவில்லையே ஏன்.. என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.)
கேம்பிரிட்ஷ் பல்கலைக்கழக தொல்பொருள் சேமிப்பிடத்தில் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் மத்தியில் இம்முட்டை எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிவதில் சிரமம் நிலவியது. இந்த நிலையில் ஒரு அன்பரால் பல்கலைக்கழகத்தில் இருந்த தொல்பொருட்கள் சேமிப்பிடத்தில் பல தொல்பொருட்கள் மத்தியில் இருந்து ஊதியமற்ற ஊழிய அடிப்படையில் இந்த முட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது.