Home » உடல் நலக் குறிப்புகள் » நகம் கடிக்கும் பழக்கம்!!!
நகம் கடிக்கும் பழக்கம்!!!

நகம் கடிக்கும் பழக்கம்!!!

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி தெரிந்துகொள்வோம்

நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர்.

இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.  எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார்.

மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். ஆய்வு ஒன்றில் 18 வயதிற்கு மேல் நகம் கடிக்கும் பழக்கம் கணிசமாக குறைவதாக செல்லப்படுகிறது. ஏன், நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரியுமா?

நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோசமானது என்று தெரியுமா? ஏனெனில் நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும். இந்த பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்தாவிட்டால், பிற்காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படுபட அதிக வாய்ப்புள்ளது.

இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும். இப்போது நகம் கடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்.

நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை மொட்டையாகவும் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

நகங்களைக் கடிப்பதால் நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும். நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள்.

இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானம் ஆகாமல், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, ஏதேனும் யோசிக்கும் போதோ அல்லது டென்சனாக இருக்கும் போது, அப்படியே கையை வாயில் வைப்போம்.

இதனால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலி இழக்க செய்துவிடும். எனவே நகங்கள் கடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால், விரைவில் பற்களையும் இழக்க நேரிடும்.

சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது அது பற்களின் எனாமலை பாதித்துவிடும், பற்களில் பக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.

நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா (Salmonella), இ.கோலி(E.Coli) பக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.

நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.

நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top