Home » சிறுகதைகள் » பூனையும் பாலும்!!!
பூனையும் பாலும்!!!

பூனையும் பாலும்!!!

பூனையும் பாலும்

ஒரு ஊரில் இரண்டு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புக்கு இலக்க‍ணமாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளுக்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு வளர்த்து வந்தார்கள். மேலும் பழைய வீடுகள் என்பதால், அங்கு எலிகளும் அதிகம் இருக்கும். அதனால், அந்த எலிகளை வேட்டையாடி அவற்றை உண்டும் வந்தன. திடீரென் அவ்வூரில் ஏற்பட்ட‍ பஞ்சத்தின் காரணமாக ஊர்மக்க‍ள், பிழைப்புக்காக அந்த ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு செனறு விட்ட‍னர்.

அதுவரை எந்தவிதமான தடங்களும் இல்லாமல் உணவு கிடைத்து உண்டு மகிழ்ந்து வந்த பூனைகளுக்கு, உணவளிக்க‍ அவ்வூரில் யாரும் இல்லை. பசியால் வாடின. இதனால், அவைகளும் ஊரை விட்டு செல்ல‍ தீர்மானித்து, அந்த ஊரில் இருந்து சில மைல்கள் தள்ளி இருக்கும் டவுனுக்கு குடிறின.

அங்கு அந்த பூனைகளை பார்த்த‍ ஒரு சிறுவன் அவற்றின்மேல் இறக்க‍ம் கொண்டு, அவைகளுக்கு பாலும், சிறிது ரொட்டியும் கொடுத்தான். அந்த உணவை பார்த்த‌தும், இந்த இரண்டு பூனைகளுக்கும் கொண்டாட்ட‍ம், மனமகிழ்ச்சியும் அந்த உணவினை இரு பூனைகளும் உண்டு மகிழ்ந்தன. சிறுவன் கிளம்புச் செல்லும் போது, இந்த பூனைகளும் அவன் பின்னாலேயே சென்றன. இதனை கவனித்த‍ அந்த சிறுவன், அப்பூனைகளை அன்போடு தூக்கிக்கொண்டு, தனது வீட்டிற்கு சென்றான்.

அந்த சிறுவன் அந்த பூனைகளை அன்போடு வளர்க்க‍த் தொடங்கினான். அவனது வீட்டில் இருந்து சிற வீடுகள் தள்ளி, ஒரு மசாலா பால் விற்பனை செய்யும் கடை இருந்தது. வீட்டில் பால் இல்லாத சமயங்களில் அங்கிருந்து பால் வாங்கி வந்து அப்பூனைகளுக்கு கொடுப்பான்.

ஒருசமயம், அந்த கடைக்கு அந்த பூனைகளை தூக்கிக் கொண்டு சென்றான். அங்கே, ஒருபெரிய அகண்ட வாணலியில் பால் கொதித்துக் கொண்டிருந்தது. அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கண்ணாடி தம்ளரில் பாலை ஊற்றி விற்பனை செய்து கொண்டிருந்தார் அந்த கடையின் உரிமையாளர்.

அந்தக் கடைக்கு பூனைகளை தூக்கிச் சென்ற சிறுவன், அந்த வாணலியில் இருந்து சற்று தொலைவில் இருந்தே, பால் வாங்கினான். வாங்கிய பாலை, அந்த கடையில் இருந்து சில அடி தூரம் சென்று, அப்பூனைகளுக்கு ஊற்றினான். அவைகளும் உண்டு மகிழ்ந்தன.

அன்றிரவு, இருபூனைகளும் பேசிக்கொண்டன. முதல் பூனை இரண்டாவது பூனையை பார்த்து, இந்த சிறுவன் நம்மை இன்று ஒரு கடைக்கு தூக்கிச் சென்றானே! அந்த கடையில் பார்த்தாயா, ஒரு அகண்ட பெரிய வாணலியில் எவ்வ‍ளவு பால் இருக்கிறது.  இதுநாள் வரை, ஒன்றிரண்டு தம்ளரில் தான் பால் கிடைத்து வந்த்து. ஆனால் அங்கே பார்த்தால், எவ்வ‍ளவு பால், அந்த பால் முழுவதையும் குடித்தால், எப்ப‍டி இருக்கும் என்றது.

அதற்கு இரண்டாவது பூனை, உனக்கெதற்கு இந்த வீண் ஆசை, நமக்கு போதுமான அளவு உணவினை இந்த சிறுவன் நமக்கு கொடுக்கிறானே! அது போதாதா? எதுக்கு இப்ப‍டி பேராசைபடுற, இந்த பேராசையெல்லாம் வேண்டாம்…என்றது.

இதைக்கேட்ட‍ அந்த முதல் பூனையோ, போடா, நீ ஒரு சரியான சோப்ளாங்கி, இன்னொரு முறை அந்த கடைக்கு செல்லும் போது அந்த வாணலியில் இருக்கும் அவ்வ‍ளவு பாலையும் நானே குடித்து விடுகிறேன்பார் என்றது.

முதல் பூனையில் பதிலைக்கேட்ட‍ இரண்டாவது பூனையோ,  நீ சொன்னா கேக்கற ஆளா, உனக்கு பட்டாதான் புத்தி வரும் என்று தனது மனதுக் குள்ளே நினைத்து அமைதியானது.

மறுநாள், அந்த சிறுவனை தங்களை அழைத்துப்போவான் என்று நினைத்திருந்த அந்த முதல் பூனைக்கு ஏமாற்ற‍மே மிஞ்சியது. காரணம், அந்த சிறுவன், பள்ளிக்கு செல்லும் முன் அந்த பூனைகளுக்கு அவனே சென்று அந்த கடையில் இருந்து பாலை வாங்கி வந்து பூனைகளுக்கு ஒரு தட்டில் ஊற்றி வைத்திருந்தான்.

இரண்டாவது பூனையோ, சந்தோஷமாக அந்த பாலை குடித்த‍து. ஆனால் முதல் பூனையோ, தன்னை அந்த கடைக்கு அந்த சிறுவன் அழைத்துச்செல்லாததால், கோவத்துடனும், ஏமாற்றத்துடனும் அந்த பாலை உண்ணாமல் பட்டினி கிடைந்தது. இரண்டாவது பூனை, தன் பங்கு பாலை குடித்து விட்டு, அந்த முதல் பூனையை பால் குடிக்க‍ அழைத்த‍து. ஆனால் அந்த முதல் பூனை வர மறுத்த‍து. பொறுத்திருந்து பொறுத்திருந்த பார்த்த‍ அந்த இரண்டாவது பூனை, மீதமிருந்த பாலையும் குடித்து முடித்துவிட்ட‍து.

அடுத்த‍ நாள் அரசு விடுமுறை என்பதால், அந்த சிறுவனுக்கும் பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்து. அந்த சிறுவனை பார்க்க‍ வந்த நண்பன், இந்த பூனைகளை பார்த்தான், ஐ எவ்வ‍ளவு அழகாக இருக்கிறதே! என்று பூனைகளை தூக்கி வைத்துக்கொண்டு அதனோடு விளையாட ஆரம்பித்த போது அந்த சிறுவனும் வந்தான். வா வெளியில் போய்ட்டு வருவோம் என்று சொல்லி, இருவரும் ஆளுக்கொரு பூனையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள‍ கடைக்கு சென்றனர். வழக்க‍ம் போல் அந்த பூனைகளுக்கு அந்த சிறுவன் பாலை வாங்கிக் கொண்டிருந்தான். தனது நண்பனுக்கும் தனக்கு வாங்கினான். அவ்விருவரும் கொதிக்கும் பால் என்பதால் அ வ்வ‍ருவரும் தாங்கள் வைத்திருந்த அந்த பூனையை கீழே விட்டுவிட்டு, பாலை வாங்கிக் கொண்டு அருந்திக் கொண்டிருந்தனர்.

கீழே விட்டுவிட்ட‍ பூனைகளில் முதலாவது பூனைக்கோ ஆசை விடவில்லை, அந்த வாணலியில் இருக்கும் அத்தனை பாலையும் குடித்து விட வேண்டும் என்று வெறியோடு, அனைவரும் ஏமாறும் சமயத்தில் அந்த கடைக்குள் புகுந்து அங்கிருந்த அலமாரியில் ஏறி, அந்த வாணலியில் குதித்தது. வாணலியில் கொதித்துக் கொண்டிருந்த அந்த பாலில் குதித்ததால், அதன் உடல் வெந்து போனது அதனால் ஏற்பட்ட வலியினால் பூனை அலறித்துடித்த‍து. உடனே கடை உரிமையாளர், ஒரு நீண்ட கரண்டியில் அந்த பூனையை தூக்கி தரையில் போட்டு விட்டு, அந்த சிறுவர்களை, பார்த்து ஏன் இப்ப‍டி பூனைகளை இந்தகடைக்கு கொண்டுவந்தீர்கள் என்று திட்டிக் கொண்டிருந்தார். அவ்வ‍ழியே வந்த அந்த சிறுவனின் தந்தைக்கு விவரம் தெரியவர, சிறுவனை அடித்துவிட்டு, அந்தபாலுக்குரிய நஷ்டத்திற்கு ஈடுசெய்யும் பணத்தை கொடுத்துவிட்டார். பூனை விழுந்த அந்த பாலை கடைக்காரர் கீழே கழிவு நீர் தொட்டியில் ஊற்றிவிட்டார்.

சரி, அந்த பூனை என்னானது என்றுதானே நினைக்கிறீர்கள், வாணலில் இருக்கும் கொதிக்கும் பாலில் குதித்த‍ பூனையோ தனது உடலில் ஏற்பட்ட‍ காயங்களாலும் வலியினாலும் துடித்துக்கொண்டிருந்தது. அந்த பூனையை பார்த்த‍ இரண் டாவது பூனை மெதுவாக வந்து, நான் அப்போதே சொன்னேன் நீ கேட்டாயா! நமக்கு போதுமான உணவினை அந்த சிறுவன் மூலமாக நமக்கு கிடைத்து வந்ததே! இப்போது பார் நீ பேராசை பட்டு, அந்த வாணலியில் விழுந்து இப்ப‍டி, உன் உடலை ரணப்படுத்திக்கொண்டாயே! என்றது.

அப்போது, முதல் பூனை, நீ சொனனது சரி தான் நண்பா! நமக்கு கிடைத்த‍து வைத்துக் கொண்டு மன நிறைவோடு இல்லாமல் இப்ப‍டி பேராசைப்பட்டேனே! என்று கூறிய போதே! அதன் உயிர் பிரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top