ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே :
சப்த ரிஷிக்கள்
தீயின் ஏழு நாக்குகள்
சப்த சிந்து (ஏழு நதிகள்)
பிருஹஸ்பதியின் ஏழு வாய்
சூரியனின் ஏழு குதிரைகள்
ஏழு புனித இடங்கள்
ஏழு குருக்கள்
வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள்
ஏழு புண்ய தலங்கள்
ஏழு புனித பாடகர்கள்
சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்)
ஏழு ஆண் குழந்தைகள்
எழு சூத்திரங்கள்
ஏழு சந்தஸ்கள்
ஏழு ஸ்வரங்கள்
விதை கருவில் உள்ள ந்ந்ழு சத்துப் பொருட்கள்
சப்த வத்ரி
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் ‘௭’ என்று குறிக்கபடுகிறது.
ஏழு சிரஞ்சீவிகள்
மகாபுராணங்கள் அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் .
வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார்.
ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள்.
சிரஞ்சீவிகள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று பொருள் படும்.
அனுமன்
விபீஷணன்
மகாபலி
மார்க்கண்டேயர்
வியாசர்
அஸ்வத்தாமன்
பரசுராமர்
ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் ஆவர்”.
அழிவின்றி வாழ்பவர்கள் பட்டியிலில் இரண்டாவதாக வேதவியாசர் குறிப்பிடப்படுகிறார்.
இவர்கள் எழுவரும் சிவாலயங்களையும் சிவனையும் பாதுகாப்பவர்கள். நாம் சிவாலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம். அப்போது அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம். அதனால் கோயிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஏழு வள்ளல்கள்
வள்ளல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் கர்ணர், தர்மர்,
அவர்களுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருபவர்கள் கடையேழு வள்ளல்களாகவர்.
பேகன்
பாரி
காரி
ஆய்
அதிகன்
நள்ளி
ஓரி
ஆகிய ஏழு வள்ளல்கள் செய்த கொடையை இந்நாளில் நல்லியக் கோடன் ஒருவனே செய்கிறான் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
1.பருவமழை தவறாது பொழிவதால் காட்டு மயில் அகவியதைக் கேட்டு அது குளிரால் நடுங்கியது என எண்ணி இரக்கமுற்று தம் போர்வையைக் கொடுத்தான் பேகன்.
மயிலுக்குப் போர்வையைத் தருவது அறிவுடைமையா?
அது சரியா? தவறா?
போர்வை கீழே விழுந்தால் மயில் அதனை மீண்டும் எடுத்துப் போர்த்திக் கொள்ளுமா?
எனப் பல ஐயங்கள் தோன்றுவது இயற்கையே….
தோகை விரித்து ஆடுவது என்பது இயற்கை என்று பேகனின் அறிவு சொல்கிறது..
இல்லை அது தன்னைப் போலக் குளிரால் நடுங்குகிறது……….
என்கிறது பேகனின் உணர்வு….
உணர்வு ,அறிவை வெல்கிறது……
இதையே கொடை மடம் என்கிறோம்…..
2.முல்லைக் கொடி படர தம் பெரிய தேரினை ஈந்தான் பறம்பு மலைக்கு அரசனான பாரி.
முல்லைக் கொடி படர சிறுபந்தல் போதுமே….
ஆனால் அந்த கண்ணோட்டத்தில் முல்லைக் கொடியைப் பாரியால் பார்க்க முடியவில்லை.
முல்லைக் கொடி, தான் படர்வதற்கு வழி இல்லையே என்று வாடுவது போல பாரிக்குத் தோன்றுகிறது.
அடுத்த நொடியோ அக்கொடியின் துயர்நீக்க,தன்னால் என்ன செய்ய இயலும் என்று சிந்திக்கிறான்..
தன்னிடமிருந்த தேரினை அக்கொடி படர்வதற்காக அவ்விடத்தே விட்டுச்செல்கிறான்..
3.வலிமை மிக்க குதிரையையும்,நல்ல சொற்களையும் கொடையாக இரவலர்க்கு வழங்கியவன் காரி.
துன்பத்துடன் வாடிவரும் கலைஞர்களுக்கு வலிமைமிக்க குதிரையும் நல்ல சொற்களும் வழங்கியதால் வள்ளல் எனப்பட்டவன் காரி…
பொருள் கொடுத்துத்து துயர் நீக்குதல் ஒரு வகை,
நல்ல துயர் நீக்கும் சொற்களால் துயர் நீக்குதல் இரண்டாவது வகை..
அவ்வகையில் நல்ல சொற்கள் வாயிலாகவே கலைஞர்களைக் கவர்ந்தவன் காரி.
4.ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய்.
தான் மிகவும் உயர்வாகக் கருதும் நீலமணியையும், நாகம் தனக்குத் தந்த கலிங்கம் என்னும் ஆடையையும் இரவலர்களுக்கு அளித்து மகிழ்வித்தவன் ஆய்.
5.அமிழ்தம் போன்ற நெல்லிக் கனியையும் தாம் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தவன் அதியன்.
நீண்ட நாள் உயிர் வாழ்க்கையளிக்கும் அரிய நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தபோது…
சிந்தித்தான் அதியன்…
இக்கனியைத் தான் உண்டால் இன்னும் தன் நாட்டின் பரப்பு அதிகமாகும்.. பல உயிர்கள் மேலும் அழியும்..
ஆனால் இக்கனியை ஔவையால் உண்டால் நீண்ட காலம் அவர் உயிர் வாழ்வார் …
தன்னை விட இவ்வுலகில் அதிக காலம் வாழ வேண்டியவர் புலவரே…
அவரால் தமிழ் மேலும் சிறப்புப் பெறும்…
என்று கருதிய அதியன் கனியை ஒளைக்குத் தந்து வள்ளள் என்னும் பெயர் பெற்றான்…
6.இரவலர்க்கு வேண்டிய பொருள்களை அதிகமாக வழங்கி ஆவர்கள் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.
பசிப்பிணியோடு வாடி வந்த இரவலர்களுக்கு அதிகமாகப் பொருள் வழங்கி அவர்களின் மன நிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி..
7.கூத்தாடுவோருக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்தவன் ஓரி.
கூத்தாடும் கலைஞர்களின் கலைத்திறனை மதித்து வளமான பல நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.
மண்ணில் எத்தனையோ பேர் வள்ளல்களாக வாழ்ந்து மறைந்திருந்தாலும். இன்றளவும் கடையேழு வள்ளல்கள் என நாம் இவர்களை மதிக்கிறோம் என்றால் அதற்கு அவ்வள்ளல்களிடம் இருந்த சிறந்த பண்புளான,
அஃறிணை உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதல்,
கலைஞரைப் போற்றுதல்
இரவலரை ஓம்புதல்
ஆகியவையே காரணமாகும்.
ஏழு சக்கரங்கள்
வாழ்வின் ஏழு பரிமாணங்கள் அல்லது வாழ்வை உணரும் ஏழு பரிமாணங்களை குறிக்கும் வகையில் உடலுக்குள், ஏழு அடிப்படையான மையங்கள் இருக்கின்றன.
இந்த ஏழு சக்கரங்கள்:
மூலாதாரம் – ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது;
ஸ்வாதிஷ்டானம் – பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது;
மணிபூரகம் – தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது;
அனாஹதம் – விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது;
விஷுத்தி – தொண்டை குழியில்;
ஆக்னா – புருவ மத்தியில்;
சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் – உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது.
ஏழு கொடிய பாவங்கள்
உழைப்பு இல்லாத செல்வம்
மனசாட்சி இலாத மகிழ்ச்சி
மனிதம் இல்லாத விஞ்ஞானம்
பண்பு இல்லாத படிப்பறிவு
கொள்கை இல்லாத அரசியல்
நேர்மை இல்லாத வணிகம்
சுயநலம் இல்லாத ஆன்மிகம்
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
ஆணவம்
சினம்
பொறாமை
காமம்
பெருந்துனி
சோம்பல்
பேராசை