Home » பொது » மோதிலால் நேரு!!!
மோதிலால் நேரு!!!

மோதிலால் நேரு!!!

மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

மோதிலால் நேரு இணையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். பிள்ளைப்பாசம் கூட ஒரு மனிதரை விடுதலைப்போரில் ஈடுபட வைக்கும் என்பதற்கு உதாரணம் அவர்.

இவரின் தாத்தா கிழக்கிந்திய கம்பெனியில் வக்கீலாக இருந்தார். இவரின் தந்தை இவர் பிறப்பதற்கு முன்னரே தவறிவிட போராடி வாழ்க்கையில் முன்னுக்கு வந்தார் இவர். வக்கீலாக தாத்தாவை போல மாறி ஒரு வழக்குக்கு பத்தாயிரம் பீஸ் வாங்குகிற அளவுக்கு சிறப்பாக வழக்காடினார்.

ஆனந்த பவனம் என்று தான் வாங்கிய வீட்டுக்கு பெயரிட்டார். அதிலே நீச்சல் குளம் கட்டினார். மின்சார வசதியை ஏற்படுத்தினார். சைக்கிள் பிரிட்டனில்
அறிமுகமானதும் இந்தியாவிற்கு அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

புலால் உணவு,மது வகைகள் என்று வீட்டில் எப்பொழுதும் நூற்றுக்கணக்கான பேருக்கு அனுதினமும் விருந்து வேறு வீட்டில் உண்டு. இரண்டு கார்கள்,அதை ஓட்ட ஐரோப்பியர்கள் என்று ஆடம்பரத்தின் உச்சமாக இருந்தார் அவர்.

ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார். ஆனால் பல விஷயங்களை செய்ய முடியாமல் திணறினார். நூல் நூற்க வேண்டும் என காந்தி
சொன்னதை செய்யமுடியாமல் நான்கு அணா அபராதம் கட்டும் முறை இவருக்காக வந்தது. காந்தியுடன் முரண்பட்டு இடையே சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்து
சட்டப்பேரவைகளிலும் நுழைந்தார் இவர்.

சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர் வீட்டு சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார் . அதைக்கொண்டு வர சொன்னார் ,நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு ,”அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள். என கடிந்து இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார்.

வெறுந்தரையில் பிள்ளைப்பாசத்துக்காக படுத்து நாட்டு
விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர். நாடு விடுதலை பெறுவதை பார்த்துவிட்டு இறந்துவிட வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்கு முன்னரே
கண்மூடினார்.

இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.தன்னுடைய 70 – வது வயதில் 1931-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் 5 தேதியில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top