Home » பொது » மகேஷ் யோகி!!!
மகேஷ் யோகி!!!

மகேஷ் யோகி!!!

இந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி (பிப்.5- 2008)

ஆழ்நிலை தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ்பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஐக்கிய இராச்சியம், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. மகேஷ் யோகி: ஜனவரி 12.1917 பிறந்தார். இமயமலைச் சாரலில் ஆசிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார். இவரது ஆசிரமத்திற்கு 1968ம் ஆண்டு அப்போது உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழுவினர் இங்கு வந்து ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார். 1955 ம் ஆண்டு முதல் ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார் யோகி. அமெரிக்காவுக்கு 1959ம் ஆண்டு இந்த தியானத்தை அறிமுகப்படுத்தினார். 

ஆனால் பீட்டில்ஸ் குழுவினர் வந்த பிறகுதான் யோகியின் பெருமையும், புகழும் மேற்கத்திய நாடுகளில் வெகு வேகமாக பரவியது. 

1939-ம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி, 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆசிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார். மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958-ல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்.

1960-களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார். 1990-ல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்.

நெதர்லாந்து நாட்டின் விலோடிராப் நகரில் வசித்து வந்த யோகி, 2008-ம் ஆண்டு பிப்ரவரி 5 -தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 91. தூக்கத்திலேயே அவர் இறந்து விட்டார். உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு யோகி மரணமடைந்தார்.

உலகம் முழுவதும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பரவலாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:

விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம்

மனம் தெளிவடையும் அமைதியடையும்

ஆத்ம பலம் அதிகரிக்கும்

மூளையின் செயல் திறன் /அறிவு திறன் அதிகரிக்கும்

செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும்

கிரகிக்கும்/ புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்

ஞாபக சக்தி அதிகரிக்கும்

ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும்

மனோவியாதி சீராகும்

பயம் , கவலை , குழப்பம் , மன உளைச்சல் நீங்குகிறது

ஆளுமை திறன் ஓங்குகிறது

தியானத்தின் போது :

தியானத்தின் போது மனம் மிக நுண்ணியதாகி மேல் மனதிலிருந்து ஆழ் மனதிற்கு ஆல்பா அலைக்கு செல்கிறது , விழிப்புடன் கூடிய ஓய்வு/ தூக்க நிலைக்கு மனமும் , உடலும் செல்கிறது.

அந்த அலையில் இதுவரை மூளையில் உறங்கி கொண்டிருக்கும் கோடிகணக்கான செல்கள் விழிப்படையும்.

குறைந்த நேரத்தில் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது.

இதயம் நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது , இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top