விதைகள் செய்யும் விந்தைகள் விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம் உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுபவை… விதைகளின் மருத்துவப் பயன்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்பிரமணியம். தர்பூசணி விதை பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது. இந்த ... Read More »
Monthly Archives: February 2017
சிந்திக்க வேண்டிய விசயங்கள்
February 28, 2017
சிந்திக்க வேண்டிய விசயங்கள் சில சிந்தனைகள்… நடத்தை உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் நடத்தைதான் அந்த இடத்தை நீங்கள் தக்கவைத்துக்கொள்ளத் துணைநிற்கும்! சிரிப்பு உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை நீயும் சிரிக்க வை!உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை! பிறப்பும் இறப்பும் நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்! நீ சாதனைபுரிய வேண்டுமா? இன்றோடு நீ இறந்துபோவாய் என எண்ணிக்கொள் காரணங்கள் நம் ... Read More »
தேசிய அறிவியல் நாள்!!!
February 28, 2017
இன்று தேசிய அறிவியல் தினம் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987 – ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாறு இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் ... Read More »
இராசேந்திர பிரசாத்!!!
February 28, 2017
டாக்டர் இராசேந்திர பிரசாத் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்ட குடியரசு தலைவர் பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் ... Read More »
நளதமயந்தி பகுதி – 5
February 27, 2017
பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் விதிப்பலன். நடப்பது நடக்கட்டும். வாருங்கள். இந்த இடத்தை விட்டு கிளம்புவோம், என்றாள். நளனும் கிளம்பினான். காட்டுப்பாதையில் அவர்கள் நீண்டதூரம் சென்றனர். மாலை நேரமானது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. அந்தக் கரிய இருளில் தன் மனைவியுடன் நடந்தான் நிடதநாட்டு மன்னன். தமயந்தியோ தடுமாறினாள். பேய்களுக்கு கூட ... Read More »
உண்மை விளம்பி!!!
February 27, 2017
சிந்து நதி தீரத்தில் சச்சிதானந்தா என்ற யோகி, ஒரு ஆஸ்ரமத்தை ஸ்தாபித்து தன் சிஷ்யர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் உண்மைதான் தேசத்தை முன்னேறச் செய்யும் என்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் மக்கள் அவரை, “யோகி உண்மை விளம்பி’ என வர்ணித்தனர். “மெய் உயர்வைத் தரும்; பொய் தாழ்வைத் தரும்’ என்பதுதான் அவரின் தாரக மந்திரம். ஆகவே, அதையே உபதேசித்தும் வந்தார். ஒருசமயம் நதி ஓரத்தில் தன் சிஷ்யர்களோடு செல்லும்போது, ஒருவன் தான் பிடித்த ஆமையைக் கொல்ல அதன் முதுகின் ... Read More »
இளமையுடன் வாழ்ந்திட..!!!
February 27, 2017
என்றும் இளமையுடன் வாழ்ந்திட..! என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு. உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம். உணவில் கட்டுப்பாடு நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ... Read More »
எழுத்தாளர் சுஜாதா!!!
February 27, 2017
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. வாழ்க்கைக் குறிப்பு ஸ்ரீரங்கம் ஆண்கள் ... Read More »
நளதமயந்தி பகுதி – 4
February 26, 2017
சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்…நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. ... Read More »
கனவு!!!
February 26, 2017
கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்று ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார்.கனவுகள் தான் நினைவுகளை உண்டாக்கும்…புதிய புதிய ஆய்வுகளைக் கண்டறியவும், புதிய புதிய உத்திகளை கையாளவும், புதிய புதிய பாதைகளை வழிவகுக்கவும் செய்யும். அந்த வகையில்தான் எத்தனையோ விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட கனவுகளின் மூலம் மனித இனத்திற்கே மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். கனவு என்பது புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி கதைகள் எழுதவும் சிலருக்கு உதவியிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பர்ரோ. இவர் ஆரம்ப ... Read More »