மனித இன வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகள் சில நம்மை மற்ற மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி உயர்த்தியது. சக்கரத்தை கண்டுபிடித்ததை விட முக்கியமான திருப்புனைகள் அவை.
அவற்றில் மிக முக்கியமானது மரத்தில் இருந்து இறங்கி ஆபிரிக்க சவானாவில் நடமாட துவங்கியது. இது நடக்கவில்லையெனில் மனித இனமே இன்று கிடையாது. எதாவது மரத்தில் தாவி குதித்துகொண்டிருப்போம்.
அடுத்த முக்கிய திருப்புமுனை உணவை சமைத்து உண்ண துவங்கியது. சமைத்த மாமிசம் விரைவில் ஜீரணமாக உதவியது. இது ஏராளமான ஆற்றலை மனித மூளைக்கு கொடுத்தது. பிராணிகளில் சுமார் 20% அளவு எனெர்ஜி நுகர்வை மூளையின் இயக்கத்துக்கு செலவு செய்யும் ஒரே பிராணி நாமே.
மூன்றாவதாக பேச ஆரம்பித்ததை கூறலாம். மொழி என்பது ஒரு திறமை என கருதபட்டாலும் இப்போது ஒரு ஒரு ஜெனடிக் குறைபாட்டின் விளைவு என கன்டறியபட்டுள்ளது. ஒரு ஜீன் மியூடேஷனால் (குறைபாடால்) பாக்ஸ் 2 எனும் ஜீன் புதிதாக உருவானது.
அதன் விளைவாக மொழி எனும் ஆற்றல் நமக்கு கிடைத்தது. உதாரனமாக தீ எனும் சொல்லை கேட்டால் உடனே கொழுந்து விட்டெரியும் நெருப்பை அதனுடன் இணைத்து பார்த்து புரிந்து கொள்ளும் ஆற்றலே மொழி.
இதே போல் இன்னொரு மியூட்டேஷனால் மோப்பம் பிடிக்கும் ஆற்றலை இழந்தோம். நம்மை விட சின்ன மிருகங்கள் எல்லாம் மிக திறமையான மோப்பம் பிடிக்கும். அந்த ஆற்ரலை இழப்பது தற்கொலைக்கு சமம்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ஆற்ரலை நாம் இழந்த காலகட்டத்தில் நாம் உணவுசங்கிலியில் மிக உயரத்துக்கு வந்துவிட்டோம். அதனால் நம்மை அது பெருமளவு பாதிக்கவில்லை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் அந்த இழப்பை ஈடுகட்ட நாம் ஓநாய்களை பிடித்து டொமஸ்டிகேட் செய்து நாய்களாக மாற்றி வளர்க்க துவங்கினோம்.
வியர்க்க ஆரம்பித்ததும், உடலெங்கும் இருந்த முடியை இழந்ததும் மிக முக்கிய மாற்றங்கள். கரடி, குரங்கு மாதிரி உடலெங்கும் முடியுடன் இருந்த மனிதன் எப்படி முடியை இழந்தான்? இதற்கான விடை கிழக்கு ஆபிரிக்காவில் கிடைத்தது. அங்கே யதேச்சையாக டர்க்கானா பேஸின் பகுதியில் நிகழ்ந்த ஆய்வுகள் அந்த பள்ளதாக்கில் கடந்த 4 மில்லியன் ஆன்டுகளாக வெப்பம் 85 முதல் 95 டிகிரி பாரந்கீட் எனும் அளவிலேயே இருந்ததாக கன்டறிந்துள்ளது.
இந்த பகுதியில் தான் மனித இனம் பெருமளவு உருவாகி வளர்ந்துள்ளது. ஆக இந்த வெப்பத்தை சமாளிக்க மனிதனின் உடலமைப்பு இயற்கையாக முடியை இழந்துள்ளது. வெப்பத்தை சமாளிக்க வியர்வை சுரப்பிகளும் உருவாகின. இந்த இரு மாற்றங்களும் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. ஆனால் இவை மனிதனுக்கு மிகபெரும் அட்வான்டேஜை கொடுத்தன.
மான் போன்ற மிருகங்கள் நம்மை விட வேகமாக ஓடகூடியவை. ஆனால் அவற்றுக்குக்கு வியர்க்காது. மனிதனால் வேகமாக ஓட முடியாது. ஆனால் அவனுக்கு வியர்க்கும்.
ஆக ஆபிரிக்காவில் பல பழங்குடி இனங்களில் வித்தியாசமான வேட்டை முறையை கையாள்வார்கள். கையில் ஈட்டியுடன் ஒரு மானை துரத்துவார்கள். மான் வேகமாக ஓடும்.
இவர்கள் மணிக்கு நாலு மைல் வேகத்தில் அதை துரத்துவார்கள். பத்து நிமிடத்தில் மான் கண்காணாத தொலைவுக்கு ஓடிவிடும். ஆனால் விரைவில் அதற்கு உடல் சூடாகி ஓடமுடியாமல் போகும். அப்போது அது ஓய்வு எடுக்க நின்றாகவேன்டும்.
ஆனால் மெதுவான தூரத்தில் துரத்தி வரும் மனிதன் நிற்காமல் துரத்தி வந்து அதை நெருங்குவான். மான் உடனே மீண்டும் ஓடும். ஆக இப்படியே தொடரும் இந்த கண்னாமூச்சி ஆட்டத்தின் இறுதியில் மான் ஓட முடியாமல் களைத்து விழும். அதை தூக்கி தோளில் போட்டுகொண்டு வீடு திரும்புவார்கள்.
இம்மாதிரி வேட்டைக்கு தேவை மித வேக ஓட்டதிறனும், மோப்ப திறனும்/காட்டில் இருக்கும் தடயங்களை வைத்து மான் சென்ற திசையை கனக்கிடும் திறனும் மட்டுமே.
ஆக இம்முறையிலான வேட்டை மனிதனுக்கு மிக உதவியது. அதனால் தான் இன்னமும் கென்யர்களை யாராலும் மராதான் பந்தயத்தில் தோற்கடிக்க முடிவதில்லை.
நைக்கி ஷூ வாங்க கூட காசு இல்லாத கென்யர்கள் உலகின் அனைத்து மராதான் பந்தயங்களிலும் முதலிடம் பிடிப்பார்கள்.
1960யில் அபீபி பிகிலா எனும் கென்யர் ஒருவர் முதல் முதலாக ரோம் ஒலிம்பிக்ஸ் மரதானில் தங்கபதக்கம் வாங்கியபோது உலகமே அதை வியப்புடன் பார்த்தது.காரனம் அவர் வெறும் காலில் ஓடி ஒலிம்பிக்சில் ஜெயித்தார்.
ஆதிமனிதன் வெறும் காலில் எப்படி ஓடியிருப்பான், காட்டில் முள் குத்தியிருக்காதா என நினைக்கலாம்.
ஆதிமனிதன் காட்டில் வசிக்கவில்லை. அவன் மரத்தை விட்டு இறங்கியபோதே காட்டை விட்டு வெளியேறிவிட்டான். அவன் வசித்தது ஆபிரிக்காவின் சவானா எனப்படும் புல்வெளி பகுதியில் தான்.
ஆபிர்க்காவின் சவானா பகுதிகள் ஆபிரிக்காவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பவை. இந்த சவானா புற்களை நம்பி புல்லுணவு மிருகங்களும் அவற்றை நம்பி மாமிச பட்சிணிகளும் சவானாவில் வசித்தன. புல் தரையின் மேல் வெறும் காலில் ஓடுவது மிக எளிதான விஷயமே.