Home » உடல் நலக் குறிப்புகள் » நமது முன்னோர் வழங்கிய மூலிகை..!
நமது முன்னோர் வழங்கிய மூலிகை..!

நமது முன்னோர் வழங்கிய மூலிகை..!

நமது முன்னோர் வழங்கிய மூலிகை..!

கீழாநெல்லி

1) வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.

2) தாவரப்பெயர் -: PHYLLANTHUS AMARUS.

3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை -: இது ஒரு குறுஞ் செடி, 60-70 செ.மீ.வரை உயரம் வளரும். மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புரத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். இலைக்கொத்தின் மேற்புரத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. ஆகவே கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.மிகவும் குறுகிய வயதுடைய இது இந்திய மருத்துவத்தில் அறிய மூலிகையாகக் கருதப்படுகிறது. ஆண்டு முழுதும் பயிரிடப்படும் இது மேல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பயிர்களுள் ஒன்று. இது விதைத்த 3 – 4 மாதத்தில் அருவடைசெய்யலாம். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகறது.

5) பயன் தரும் பாகங்கள் -: செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.

6) பயன்கள் -: மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

தமிழர்கள் பயன்படுத்தும் பொருட்கள், உணவுகள் உட்பட பெயர்கள் அனைத்தும் காரணப்பெயராக விளங்கி வருகிறது. அந்த வகையில் இலையின் கீழ் நெல்லிக்காய் வடிவில் காய் உள்ளதால் கீழாநெல்லி என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது. கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.

கீழாநெல்லியினால் வயிற்று மந்தம், பித்தநோய், கண்நோய்கள் நீங்கும். கெட்டரத்தத்தை நீக்கி நல்ல ரத்தமாக மாற்றும். மதுமேகம் என்ற நீரிழிவு, மேக நோய் எனும் விந்து நட்டம் இவைகளை போக்கும். கீழாநெல்லி ஒரு குறுஞ்செடி. மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்துள்ள இலைகள் கொண்டது. இலையின் அடியில் காய்கள் கொத்து கொத்தாய் வரிசையாய் இருக்கும். நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. காமாலை நோய்க்கு கீழாநெல்லி கொடுப்பார்கள் என்பது பாமரமக்கள் கூட அறிந்ததாகும்.

கீழாநெல்லி சாறு, கரிசலாங்கண்ணிசாறு, தும்பை இலைச்சாறு, ஒரே அளவில் எடுத்து மைய அரைத்து பெரியோர்களுக்கு புன்னைக்காய் அளவும். இளைஞர்களுக்கு கழற்சிக்காய் அளவும், சிறுவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் தொடர்ந்து 10 நாட்கள் பசும் பாலில் கலந்து காரம், புளி, அரை உப்புடன் பால் மோர் ஆகியவற்றில் கலந்து கொடுத்தால் காமாலை குணமாகும்.

கீழாநெல்லியின் இளங்கொழுந்தை குடிநீரில் கலந்து குடித்தால் சீதக்கழிச்சல் தீரும். நீண்ட நாட்கள் ஆறாமல் உள்ள சிரங்குகளுக்கு இலையை மென்மையாக அரைத்து பூச அவை ஆறும்.

இலை, வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து பசுமோரில் கலந்து வடிகட்டி குடித்தால் காமாலை போகும்.

சில இளைஞர்கள் தவறான பழக்கங்களால் இளம் வயதிலேயே வயதான தோற்றத்துடன் உடல் தளர்ந்து காணப்படுவார்கள். இவர்கள் கீழாநெல்லி, ஓரிதழ்தாமரை ஆகியவற்றின் முழுச்செடியும் சமஅளவில் அரைத்து நெல்லிக்காய் அளவில் அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட இளமை பருவத்தில் ஏற்பட்ட முதுமையை நீக்கும்.

அரிசி கழுவிய கழுநீரில் வேரை அரைத்து கலக்கி பெரும்பாடு ஏற்படும் பெண்கள் 200 மிலி அளவில் குடித்து வந்தால் பெரும்பாடு பிரச்சனை தீரும்.

முற்றிய காமாலை நோய் உள்ளவர்களுக்கு வேரை பச்சையாக அரைத்து 17 கிராம் அளவில் பாலில் கலந்து கொடுத்தால் காமாலை போகும்.

கீழாநெல்லி, மூக்கிரட்டை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவில் அரைத்து அதில் கழற்சிக்காய் அளவு மோரில் கலந்து 45 நாட்கள் குடித்துவர மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து பிரச்னைகள் நீங்கும்.

நல்லெண்ணெய் யில் 200மிலி கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு 9 கிராம் சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கி காய்ச்சி வைத்து கொண்டு தலை முழுகிவர நலம் பயக்கும்.

கீழாநெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஒரே அளவாக எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி சடசடப்பு அடங்கியதும் வடித்து வைத்து கொண்டு வாரம் இரண்டு முறை தலை முழுகி வர பார்வைக்கோளாறு அனைத்தும் நீங்கும்.

கீழாநெல்லி தைலத்தால் வாரம் இரண்டு முறை தலைமுழுகி வந்தால் உட்சுரம், வெப்பம், கை, கால், கண் எரிச்சல், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி ஆகியவை தீரும்.பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் நொந்து மெலிந்தவர்களுக்கு கீழாநெல்லியை அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து நாள்தோறும் குடித்து வர உடல் தேறும். கற்ப முறைப்படி குடித்து வந்தால் பித்த நோய்கள் அனைத்தும் போகும். இதைத்தான்

பார்க்கும் இடங்கள் தோறும் முளைத்து இருப்பதால் வேண்டாத செடி என ஒதுக்கிடாமல் மனித வாழ்வை நலமாக்க இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்று உணர்ந்து அதை முறைப்படி பயன்படுத்தி நலமுடன் வாழ்ந்த நமது முன்னோர்கள் காட்டிய வழியில் நாமும் நலமுடன் வாழ்வோம்.

“கீழாநெல்லி” இப்பெயர் அறியாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள் என்றாலும் அது ஏதோ ஒரு செடி என்று பலரும், மஞ்சல்காமாலைக்கு மருந்து என்று சிலருமே அறிந்து வைத்துள்ளனர்.

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட அந்த செடியை அறிந்து அதை பயன்படுத்திக் கொள்ளும் மக்கள் இன்றைய நோய் உலகில் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும்.

இயற்கை வளங்களில் மிக இலகுவாக கிடைக்கும் இச்செடியை நவ நாகரீக உலகில் மக்கள் மறந்து வருகின்றனர். புரியும் வகையில் சொன்னால் இச்செடியை மறந்து அல்லது அழித்து நோயை வரமாக பெற்றுக் கொள்கிறார்கள்.

பரங்கிப்பேட்டை உட்பட தமிகழத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் இந்த அற்புத மூலிகைச் செடியையும் அதன் பலன்களையும் நம் மக்கள் அறிந்து அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இச்செடி பற்றிய முழு விபரங்களையும் பதிக்கிறோம்.

நாம் கண்டுக் கொள்ளாமல் விட்டுச் செல்லும் இச்செடி பயிறிடப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது என்ற உண்மை நம்மில் எத்துனைப் பேருக்கு தெரியும்!

கல்லீரல் குறிப்பு:

கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில்  அமைந்துள்ளது. கல்லீரல் செல்களினால் ஆனது. பல ரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறு சுறுப்பாக இயங்கும் ஒரு ரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். மாரடைப்பை தடுக்கும் நாம் உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல் தான். பொதுவாக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும்.

அதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இரும்புச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறது. நோய்த் தொற்றுதலை எதிர்த்து போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது.

கொழுப்புச் சத்துக்களைச்  செரிக்க வைக்கும்  பித்த நீர்:

பித்த நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச்சுவையுடைய இதில் மூன்று வகை பொருட்கள் உள்ளன. தண்ணீர், பித்த உப்பு, பித்த நிறமிகள். பித்த நிறமிகள் தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின் தாக்கம் இருக்கும். பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப் பதற்கும் உதவுகிறது.

பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்ட மின்களான ஓ மற்றும் கால்சியம் செரித்தலுக்கும் உதவுகிறது. பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லாமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உறுப்புகள்தான்.

உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பித்த நீர் உதவுகிறது. உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்கு சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது.

உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை நாம் சாப்பிடும் போது அது குளுக்கோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் தேவைக்கு அதிகமாக உள்ள போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு அதிகமாக உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

கல்லீரல் பிரச்சனை உட்பட பல்வேறு நோய்களின் அறிகுறிகள்:

உடல் களைப்பு, பசியின்மை, அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.  சிறுசீர் சிவப்பு மஞ்சள் நிறமாகவும், மலம் நிறம் மாறியும் வெளியாகும். மலச்சிக்கல் அல்லது பேதி போன்றவை உண்டாகும்.

இந்த வியாதிகளுக்கு கீழாநெல்லியே சிறந்த மருந்தாகும்.

1. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

2. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

3. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

4. தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

5. இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

6. கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

7. இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

8. கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

9. கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.

10. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம்இது கீழாநெல்லி தைலமாகும்.

11. கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி,விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி,சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நாலில் ஒன்றாகக் சுறுக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.

12. நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.

இன்னும் கூட இதில் மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கலாம்.

எனவே இந்த அற்புத மூலிகையை நாம் பயன்படுத்திக் கொள்வதுடன் அடுத்தத் தலைமுறைகளுக்காக பாதுகாக்கும் பணியையும் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top