பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்:-
பசு மாடு புல்,புண்ணாக்கு போன்றவ்ற்றை உண்ணுகிறது.பசு மாடு கன்று போட்டு பால் தரும் இனத்தைச் சேர்ந்தது.பசு மாடு நமக்குப் பால் தருகிறது.தாயிடம் பால் அருந்த முடியாத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாகிறது.இவ்வாறு பல உயிர்களைக் காப்பதினால்தான் பசுமாட்டை “கோமாதா” என்று அழைக்கிறோம்.(கோ- என்றால் பசு.மாதா- என்றால் அம்மா.)
இந்துக்கள் பசு மாட்டைத் தெய்வமாக மதித்து வழிபடுகின்றனர்.பெண்கள் பசு மாட்டிற்கு பூஜை செய்வது உண்டு.
பசுவின் சிறு நீர் “கோமயம்” என்று அழைக்கப்படுகிறது.இது நல்ல கிருமி நாசினி என்றும் இதனை வீட்டில் தெளித்தால் வீட்டில் உள்ள கிருமிகள் இறந்து போகும் என்றும் நம்புகின்றனர்.
பசுவின் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையை மெழுகுவார்கள்.பசுஞ்சாணமும் நல்ல கிருமி நாசினி ஆகும்.
பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப் படும் “பஞ்ச கவ்யம்” பயிர்களுக்கு சிறந்த உரமாக ஆகிறது.
*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன்
குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
*பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.
*பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம்
லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
*ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
*சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
*ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8
மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத் தேவை.
*அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50
முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
*ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய
மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
*பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.
*மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
*பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால்
அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.
*மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.
*பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
*கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
*உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம்
பசும்பால்.
*உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்
டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
*ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகசாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48
ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்….!!!