விளாம்பழம் ஆங்கிலத்தில் இதை WOOD APPLE என்று சொல்வார்கள்
இது இந்தியாவிலும் அதை சுற்றிய நாடுகளிலும் அதாவது பங்களாதேஷ் , பாகிஸ்தான் ,
ஸ்ரீலங்காவிலும் தான் அதிகம் பயிராகிறது
இது பழுப்பு நிறத்தில் கிரிகெட் பந்து வடிவில் இருக்கும்
இது செப்டெம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கிடைக்கும்
இதில் விட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது
பழம் மட்டுமல்லாது இதன் வேரும் இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை
நன்றாக பழுத்த பழம் அதன் ஓட்டிலிருந்து விடுபட்டு இருக்கும்
குலுக்கிப் பார்த்தால் பழம் ஆடுவது தெரியும்
தமிழில் ஒரு பழமொழி உண்டு விட்டதடி உன் ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு என
நன்கு பழுத்த பழம் புளிப்பு கலந்த இனிப்பாக இருக்கும்
இதில் எண்ணற்ற விதைகள் இருக்கும்
இந்த விதைகளும் தனி சுவையாக இருக்கும்
இது மலச்சிக்கலை தீர்க்கும்
காயாக இருந்தால் கொஞ்சம் கசப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்
இது வயிற்றுப் போக்கையும் , சீதபேதியையும் கட்டுப்படுத்தும்
இதன் ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்
இந்த பழத்தை வெய்யிலில் காய வைத்து பொடி செய்து சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்
அதிக இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்
இது மூளையையும் இருதயத்தையும் பலப்படுத்தும்
இதன் இலைகள் வாந்தி பேதி காய்ச்சல் இவைகளை குணப்படுத்த உதவும்
இதன் இலைகளை அரைத்து மூட்டுகளின் மேல் தடவ மூட்டுவலி குணமாகும்
இளம் துளிர் இலைகளை கொதிக்க வைத்து அருந்தினால் இருமல் குணமாகும்
இதன் வேரும் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது
இது கசப்பு சுவையுடன் இருக்கும்
இது சோர்வையும் இரத்த சோகையும் குணமாக்கும்
வாந்தி வயிற்று மந்தம் வாயுத்தொல்லைகலையும் நீக்கும் குணமுடையது
இத்தனை சுவையான மருத்துவ குணங்கள் நிறைந்த விளாம்பழத்தை அளவோடு
உண்டு வளமாக இருப்போம்.
- விளாம்பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.
- இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
- இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
- பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.
- விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களைச் சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.
- அஜீரண குறைபாட்டை போக்கிப் பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.
- முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.