Home » படித்ததில் பிடித்தது » இந்திய ராணுவ தினம்!!!
இந்திய ராணுவ தினம்!!!

இந்திய ராணுவ தினம்!!!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 15ஆம் தேதி  இந்திய ராணுவத் தினம் (Indian Army Day, January 15 ) ஆக கொண்டாடப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களே ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1948, ஜனவரி 15 ஆம் தேதி ஆங்கில ராணுவ தளபதி ஜெனரல் சர். எஃப்.ஆர்.ஆர். புச்சரியிடம் இருந்து, இந்திய ரர்ணுவத்தின் உயர் தலைமைப் பொறுப்புகளை, அப்போதைய முப்படைகளின் தளபதியான கே.எம். கரியப்பா (K. M. Cariappa) ஏற்றுக் கொண்டார்.

 

 

 

 

 

 

இந்த வரலாற்று நிகழ்ச்சிதான் ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவத் தினம் ஆக கொண்டாடப்படுகிறது.

அப்போது

தரைப்படை

கடற்படை

விமானப்படை

ஆகிய முப்படை வீரர்களின் தியாகம்,  தீரச் செயல்கள் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படுகிறது.

உயிர் தியாக செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு நல உதவி வழங்கப்படுகிறது.

38 லட்சம் வீரர்கள்…!

உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் சீனாவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இந்திய ராணுவம் இருக்கிறது.

இந்திய ராணுவத்தில் சுமார் 37,73,300 வீரர்கள் இருக்கிறார்கள். இதில் 13,25,000 பேர் களத்தில் இருந்து நம் நாட்டை காத்துக் கொண்டிருக்கிறார்கள். துணை ராணுவத்தில் (பாரா மிலிட்டரி) 12,93,300 பேரும், ரிசர்வ் ராணுவத்தில் 12,93,300 பேரும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்திய ராணுவத்தில் மொத்தம் ஐந்து பிரிவுகள்.

தரைப்படை

கடற்படை

விமானப் படை

கடரோர காவல்படை மற்றும்

துணை ராணுவப்படை

67,000 வீரர்களை கொண்ட இந்திய கடற்படை உலகின் மூன்றாவது பெரிய கடற்படையாக இருக்கிறது.

இந்திய கடற்படையில் சிறிதும் பெரிதுமாக 170 கப்பல்கள் இருக்கின்றன. 1,70,000 வீரர்களை கொண்ட இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படை.

நீண்ட நெடிய கடற்கரையை கொண்ட இந்தியாவை பாதுக்காக்க 1978, ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்திய கடலோர காவல்படை தனியாக உருவாக்கப்பட்டது. கடலோரத்தில் கடத்தல், ஊடுருவல் போன்றவற்றை தடுக்கும்பணியில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தல், உள்நாட்டு கலவரம் போன்றவற்றின் போது மாநில அரசின் போலீசாரால் கட்டுப்படுத்த இயலாத நிலையில் துணை ராணுவம் பாதுக்காப்பில் ஈடுபடுத்தப்படுகிறது.

இந்திய ராணுவம் தன்னை நவீன காலத்துக்கு ஏற்ப தன்னை நவீனப்படுத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள், நவீன பீரங்கிகள், ஆளில்லா போர் விமானங்கள், உளவு விமானங்களை இந்திய ராணுவம் வசம் இருக்கிறது.

இந்திய ராணுவத்தின் தலையகம் புதுடெல்லியில் இருக்கிறது. தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை என்ற முப்படைகளின் தளபதியாக இந்திய ஜனாதிபதி இருக்கிறார். இது பதவி வழி பதவியாக இருக்கிறது. ராணுவத்துக்கு உத்தரவு போட பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் ராணுவ அமைச்சகத்துக்கும் மட்டுமே அதிகாரம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top