Home » பொது » ராகுல் திராவிட்!!!
ராகுல் திராவிட்!!!

ராகுல் திராவிட்!!!

ராகுல் திராவிட்

இந்தியாவின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிராவிட். இளம் வீரர்கள் ஒவ்வொருக்கும் நடமாடும் கிரிக்கெட் யுனிவர்ஸிட்டியாக விளங்குபவர்.

 

 

முழுப்பெயர்                 : ராகுல் திராவிட் (Rahul Dravid)

பிறந்தநாள்                   : 11 ஜனவரி 1973

முக்கிய அணிகள்     : இன்தியா,ஸ்காட்லாந்து,அசியா ஜி,பெங்களூர் ராயல் சேலஞ்சர்‌ஸ்,இச்சா உலகம் ஜி,கர்நாடகா,கென்ட்

பேட்டிங் விதம்            : ரைட் ஹேன்ட் பேட்

பந்துவீச்சு விதம்        : ரைட் ஆர்ம் ஆஃப் பிரேக்

டெஸ்ட் அறிமுகம்    : 20 ஜூன் 1996

ஒருநாள் அறிமுகம் : 03 ஏப்ரல் 1996

ஐ.பி.எல் அறிமுகம்  : 18 ஏப்ரல் 2008

 

பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் சராசரி

Mat
Inns
NO
Runs
HS
Ave
100
50
4s
6s
St
Ct
டெஸ்ட் போட்டி 164 284 32 13203 270 51.78 36 62 1648 21 0 57
ஒரு நாள் 344 318 40 10889 153 39.17 12 83 950 42 0 0
இருபதுக்கு-20 1 1 0 31 31 31 0 0 0 3 0 0
IPL 90 83 6 2180 75 28.31 0 11 269 28 0 0

பந்துவீச்சு சராசரி

Mat
Inns
Balls
Runs
Wkts
BBI
BBM
Ave
Econ
SR
5w
10w
டெஸ்ட் போட்டி 164 5 120 39 1 1/18 1/18 39 1.95 120 0 0
ஒரு நாள் 344 8 186 170 4 2/43 2/43 42.5 5.48 46.5 0 0
இருபதுக்கு-20 1 0 0 0 0
IPL 90 0 0 0 0

கேரியர் புள்ளிவிவரம்

டெஸ்ட் அறிமுகம் இங்கிலாந்து எதிராக இந்தியா, லண்டன் , 20 ஜூன் 1996  ஸ்கோர்கார்டு
கடைசி டெஸ்ட் இந்தியா எதிராக ஆஸ்ட்ரேலியா, 24 ஜனவரி 2012  ஸ்கோர்கார்டு
ஒருநாள் அறிமுகம் இந்தியா எதிராக இலங்கை, சிங்கப்பூர் , 03 ஏப்ரல் 1996  ஸ்கோர்கார்டு
கடைசி ஒருநாள் இந்தியா எதிராக இங்கிலாந்து, கார்டிஃப் , 16 செப்டம்பர் 2011  ஸ்கோர்கார்டு
கடைசி டி-20 இந்தியா எதிராக இங்கிலாந்து, மான்செஸ்டர் , 31 ஆகஸ்ட் 2011  ஸ்கோர்கார்டு
ஐ.பி.எல் அறிமுகம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் எதிராக கொல்கட்டா நைட் ரைடர்ஸ், பெங்களூர் , 18 ஏப்ரல் 2008  ஸ்கோர்கார்டு
கடைசி ஐ.பி.எல். மும்பை எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா , 24 மே 2013  ஸ்கோர்கார்டு

போரில், வியூகங்களை அமைத்து, படைகளை சிறப்பாக வழிநடத்தி, தனது நாட்டையும், தலைவனையும் காப்பது ஒரு தளபதியின் தலையாய கடமையாகும். அதே போல், ராகுல் திராவிட், 17 வருடங்கள் இந்திய அணியையும்,  ரசிகர்களின் நம்பிக்கையையும் தளரவிடாமல் காப்பாற்றிய வீரன்.

சுனில் கவாஸ்கரின் ஓய்விற்கு பிறகு, இந்திய அணி, உள்ளூரில் வெற்றி பெறுவதே பெரும்பாடாகிப்போனது. சச்சின் மட்டும் போராடி அணியை அவ்வப்போது உயிர்ப்புடன வைத்திருந்த காலக்கட்டம் அது. 1996க்குப் பிறகு அனைத்தும்  மாறியது. டெஸ்ட் கிரிக்கெட்டில், 3-ஆம் நிலை ஆட்டகாரர்களின் செயல்பாடே அந்த அணியின், வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் சிகப்பு பந்து அடித்து ஆடுவதற்கு ஏற்றதல்ல. 30,40 ஓவர்களுக்கு  பிறகே அடித்து ஆடுவதற்கு ஏற்றதாக அது மாறும். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் விக்கெட்டை இழக்காமல் தடுப்பாட்டம் ஆடி, அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்துவதில் திராவிட் கில்லாடியாக விளங்கினார்.

பந்து வீச்சாளர்களின்  பொறுமையை சோதித்து, அவர்களின் வியூகங்களை முறியடித்து இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித் தந்தார்.

சச்சின், லக்ஷ்மன், கங்குலி போன்றவர்களின் துணையோடு, தனது பொறுமை மற்றும் மதியூகத்தால் திராவிட் நினைத்ததை முடிக்கும் வல்லவரானார். 1996 – 2011 வரை இந்திய அணி மொத்தம் 15 டெஸ்ட் வெற்றிகளை அயல் மண்ணில்  (பங்களாதேஷ் & ஜிம்பாப்வே தவிர்த்து) கோலோச்சியது. அனைத்து வெற்றிகளிலும் திராவிடின் சராசரி 65.77. இதுவொரு இமாலய சாதனை.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் ஒரு போட்டியை டிரா செய்வதே மகத்தான காரியம், அவ்வாறான போட்டிகளில் சராசரியாக 80.77 ரன்களை குவித்துள்ளார். மேலும், திராவிட்டின் ஸ்திரமான தடுப்பாட்ட திறமையால் மற்றவர்களால் அடித்து ஆட முடிந்தது. சச்சின்,  லக்ஷ்மன் போன்றவர்கள் எதிரணியைப் பந்தாடத் துவங்கியதற்கு முக்கிய காரணமே ஒரு பக்கம் திராவிட் இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைதான் என்று சொல்லலாம்.

 

திராவிட், ஒரு நாள் போட்டிகளிலும் பத்தாயிரம் ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பிங் பணியையும் செவ்வனே செய்து, அணியின் வெற்றிக்கும், நிலைத்தன்மைக்கும் பெரிதும் உதவினார். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே, திராவிட் என்று மக்களை நினை க்குமாறு செய்தவர் ஒருநாள் போட்டிகளிலும் முக்கியமான இடத்தை இறுதிவரை தக்கவைத்திருந்தார்.

அடித்து ஆட வேண்டிய 20 – 20 போட்டிகளிலும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளில்ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராகப் பொறுப்புடன் விளையாடி சிறப்பாக வழிநடத்தினார்.

வெறும் சுவர் அல்ல… இரும்புக்கோட்டை!

உள்ளூர் போட்டியொன்றில் எதிரணி பந்துவீச்சாளரின் அபாரமான பந்தில் போல்ட் முறையில் அவுட்டாகிவிட்டார் டிராவிட். அது அவ்வளவு முக்கியமான போட்டி இல்லை. டிராவிட் சரியாக விளையாடாத போதும் அவருடைய அணி வெற்றிபெறவே செய்தது. யாருமே ராகுல் டிராவிடை எந்தக்குறையும் சொல்லவில்லை.

மற்றவர்களைப்போல டிராவிட் இதை சாதாரண விஷயமாக நினைக்கவில்லை. அதற்காக ரூம்போட்டு அவுட்டாகிவிட்டோமே என்று கதறி அழவில்லை. மேட்ச் முடிந்த அன்று மாலைநேரத்தில் உத்தரத்தில் ஒரு பந்தினை கட்டித்தொங்கவிட்டு எந்த தவறான ஷாட்டினால் அவுட்டாக நேர்ந்ததோ அதே ஷாட்டினை பல ஆயிரம் முறை கைகள் வலித்தாலும் இரவெல்லாம் அடித்து அடித்து கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார்! அப்போது டிராவிட்டுக்கு வயது பதினைந்து.

விளையாட்டுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டு அதையே தன் உயிர்மூச்சாக நினைத்து விளையாடுகிறவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த சொற்ப மனிதர்களில் டிராவிட்டும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன.. ‘’டிராவிட் இடத்தை டிராவிட்டால் மட்டும்தான் நிரப்பமுடியும்’’ என்கிறார் சச்சின்! அதுதான் நிதர்சனம்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 95ரன்களில் தொடங்கியது. அப்போதிருந்தே எந்தவித பவுலருக்குமே டிராவிட் என்றால் கொஞ்சம் கிலிதான்.

1996க்கு முன்பு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியென்பதெல்லாம் எட்டாக்கனியாகவே இருந்த நிலையை மாற்றி ஆஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும்,மேற்கிந்திய தீவுகளிலும்,தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி வெற்றிகளை குவிதத்தில் முக்கிய பங்கு டிராவிடுக்கு உண்டு!

டிராவிட் ரொம்ப கட்டை வைப்பாருப்பா? ரன்னே அடிக்க மாட்டாரு! செமபோரு என்று அவர் மீது பொதுவான விமர்சனங்கள் உண்டு. அதற்கெல்லாம் பதில் அவருடைய சாதனைபுத்தகங்களில் கொட்டிக்கிடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 13288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889ரன்கள்! கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர்.

அவர் ஆடிய 164டெஸ்ட் போட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகளில் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை! தோற்கும் நிலையிலிருக்கிற ஆட்டங்களை டிராவாகவும் மாற்றிக்காட்டியிருக்கிறார் டிராவிட்.தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல அதிரடியாகவும் ஆடுகிற திறமையை கொண்டிருந்தவர். ஆனால் அதை அரிய தருணங்களில் மட்டுமே வெளிப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரே வேலை இந்திய அணியின் பேட்டிங் வரிசை தடுமாறும்போதெல்லாம் மைதானத்தில் தோன்றி ஆபத்பாந்தவனாக காப்பாற்ற வேண்டும்!. இந்திய அணியின் மிடில் ஆர்டர் டிராவிடை சுற்றியே இயங்கியது. அதனாலேயே அவரால் பல நேரங்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம்.

டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் குவிப்பதை காட்டிலும் எத்தனை மணிநேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்கிறோம் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். அது டிராவிடுக்கு கைவந்தகலையாக இருந்தது. அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது அத்தனை எளிதாக இருந்திருக்கவில்லை.

‘’அவரை நான் இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதர் என்றுதான் அழைப்பேன்! ஆடுகளத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பேர்ப்பட்ட சிக்கலான நிலையையும் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றிக்காட்டியவர்’’ என புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.

உலகில் எந்த இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக இருந்தாலும் அதற்கு ஒருமாதம் முன்பே தன்னை தயாரிக்கத்தொடங்கிவிடுவார் டிராவிட். இங்கிலாந்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் வேலையாக இங்கிலாந்தின் எந்தெந்த பகுதிகளில் விளையாட இருக்கிறோம் என்கிற தகவல்களை தேடி எடுப்பார்.

அந்தப்பகுதியின் சீதோஸ்ன நிலை, மைதானங்களில் உள்ள ஆடுகளங்களின் தன்மை, எதிரணி பந்துவீச்சாளர்கள் யார் யார்? அவர்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்று சகலவிஷயங்களையும் தெரிந்துவைத்துக்கொள்வார்.

அதற்கு பிறகு தன் பயிற்சியை தொடங்குவார். பங்களாதேஷ் போனாலும் சரி கடினமான ஆடுகளங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஒரே அணுகுமுறைதான். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்யவேண்டும் என்கிற நோக்கம்தான் ராகுல் டிராவிட்.

1999ல் நியூஸிலாந்திலும், 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும், 2002ல் இங்கிலாந்திலும், 2003ல் பாகிஸ்தானிலும், 2006ல் வெஸ்ட் இன்டீஸிலும் அவர் வெளிப்படுத்திய அபாரமான பேட்டிங் திறனை கொண்டாடாத கிரிக்கெட் ஆர்வலர்கள் இருக்கவே முடியாது.

பல முன்னணி வீரர்கள் ‘ஓய்வு தேவை.. ஓய்வு தேவை’ என்று புலம்பி வரும் நிலையில், எந்த நாளும், எந்த நேரமும் களமிறங்க தயங்காதவர் டிராவிட். இதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

டிராவிட் இதுவரை 73 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். இதில் 71 கேட்சுகளும், 13 ஸ்டெம்பிங் உட்பட 84 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாகவும் விளங்கியுள்ளார்.

கங்குலி தலைமையில் கூடுதலாக பந்துவீச்சாளார் தேவை என்பதால் டிராவிட் தற்காலிகமாக கீப்பிங் செய்ய முன்வந்தார். அதுவே பல வருடங்கள் நிலைக்க காரணம், டிராவிட்டின் சிறந்த ஆட்ட முறைதான்.

டிராவிட் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், ஃசிறந்த பீல்டராகவும் சாதித்ததுள்ளார். இதுவரை இவர் ஒருநாள் போட்டிகளில் 196 கேட்ச்கள் பிடித்துள்ளார். இதில் விக்கெட் கீப்பராக 71, பீல்டராக 125 கேட்ச்சுகள் பிடித்துள்ளார்.

பேட்டிங், ஃபீல்டிங்கில் அசத்திய டிராவிட், பவுலிங்கிலும் சாதித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? சுழலில் அசத்திய இவர், நான்கு விக்கெட் வீழ்த்தியுள்ளார். 1999-ல், ஜெய்ப்பூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது சர்வதேச விக்கெட்டை பதிவு செய்தார். அதன்பின், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (2000), மூன்று விக்கெட் கைப்பற்றினார். இதில் கொச்சியில் நடந்த போட்டியில் ஒன்பது ஓவர் வீசிய 43 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடந்த 1999-ல், நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டிராவிட் (153)-சச்சின் (186) சேர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 331 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் சச்சின்-டிராவிட் ஜோடி முன்னிலை வகிக்கிறது.

இதேபோல, கடந்த 1999-ல், இலங்கைக்கு எதிராக டான்டனில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில், முன்னாள் கேப்டன் கங்குலியுடன் (183) சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்தார் டிராவிட் (145).

343   – விளையாடிய போட்டிகள்
317   – பேட் செய்த இன்னிங்ஸ்
10820 – குவித்த ரன்கள்
153   – அதிகபட்ச ரன்கள்
12    – விளாசிய சதங்கள்
82    – அடித்த அரைசதங்கள்
946   – பறந்த பவுண்டிரிகள்
46    – சிக்கிய சிக்ஸர்கள்
196   – பிடிபட்ட கேட்சுகள்

இவ்வாறாக வியத்தகு எண்களால் சூழப்பட்டதே இந்திய கிரிக்கெட் அணியின் ‘சுவர்’ என போற்றப்படும் ராகுல் டிராவிட்டின் ஒருநாள் போட்டி உலகம்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அணிக்கு பக்கபலமாக இருப்பது என முடிவெடுத்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறது இந்தப் பெருஞ்சுவர்.

கடந்த 1996-ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த ராகுல் டிராவிட் இன்று தனது 344-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார் என்பதை நினைக்கையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரது நெஞ்சில் ஏதோ ஓர் இடத்தில் முள் தைப்பதாக உணர்கிறார்கள்.

இதுவரை 343 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 12 சதங்களும் 82 அரைசதங்களும் உட்பட 10,820 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் ஏழாவது இடத்தை வகிக்கிறார்.

பொதுவாக ஒருநாள் போட்டிக்கு இவர் பொருத்தமானவர் இல்லை என்ற கருத்து உண்டு. ஆனால் டிராவிட் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரை சதம் அடித்தார் என்பதை நாம் மறந்துவிட முடியுமா?

பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை அடித்து நொறுக்குவதுதான் டிராவிட்டின் தனித்துவம். இதுவரை ஐந்து கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார். அசாருதீன், ஜடேஜா, சச்சின், கங்குலி, டோனி ஆகியோர் தான் அவர்கள்.

ஒருநாள் போட்டிகளில் டிராவிட் இதுவரை 12 சதம் அடித்துள்ளார். கடந்த 1997ல் சென்னையில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடைசியாக கடந்த 2006ல், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் சதம் அடித்தார். கடந்த 1999ல், நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 153 ரன்கள் எடுத்த டிராவிட், தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த டிராவிட் இங்கிலாந்து தொடருடன் ஒரு நாள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிதிருப்பது நமக்கெல்லாம் சிறிது ஏமாற்றமே!

உள்ளூரில் மட்டும்தான் இந்தியாவின் பருப்பு வேகும்.. வெளிநாடுகளில் எப்போதும் இந்தியா சோப்ளாங்கிதான் என்கிற கம்பராமாயணகாலத்து பாட்டினை தவிடுபொடியாக்கியவர் டிராவிட். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல மிஸ்டர்.இந்தியன் கிரிக்கெட் சென்ற இடமெல்லாம் ரன்களை குவிக்கத் தவறியதேயில்லை.

உள்ளூர் போட்டிகளைவிட வெளிநாடுகளில்தான் டிராவிட் அதிக ரன்களை குவித்தார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரண்டர் ஆன டெஸ்ட் தொடரில் மூன்று செஞ்சுரிகள் அடித்து இளம்வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார் டிராவிட்.

‘’பாரின் டூர் போகும்போது அவருடைய சீருடைகள் தவிர்த்து இரண்டே இரண்டு செட் பேண்ட் ஷர்ட்டுகள்தான் அவருடைய பையில் இடம்பெறும். அதையேதான் மாற்றிமாற்றிப்போட்டுக்கொள்வார்.

என்னங்க ஒருமாசம் வெளியூர்ல இருக்கப்போறீங்க இரண்டுசெட் டிரஸ் போதுமா என்று கேட்டால்.. நான் என்ன ஊர் சுற்றிப்பார்க்கவா போறேன்.. விளையாடத்தானே.. இதுபோதும் என்பார்.

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறபோதெல்லாம் பயிற்சிக்கு மட்டும்தான் முழு நேரத்தையும் ஒதுக்குவாரே தவிர்த்து ஊர் சுற்றுவதை தவிர்க்கவே செய்வார்’’ என்று கூறுகிறார் டிராவிடின் மனைவி விஜிதா டிராவிட்.

அணியின் மிகமுக்கிய மூத்த வீரராக இருந்தாலும் இளம் வீரர்களோடு சகஜமாக உரையாடும் அவர்களுக்கு கற்றுத்தர நினைக்கிற வீரராக டிராவிட் அறியப்படுகிறார். இந்திய டெஸ்ட் அணியின் புதுவரவான அஜிங்க்ய ராஹானே ஒரு பேட்டியில் ‘’நான் பேட்டிங் செய்து முடித்ததும்.. டிராவிடிடம் என்ன எப்படி பேட்டிங் செய்தேன் என கேட்க நினைப்பேன்.. சங்கோஜமாக இருக்கும். அதனால் கேட்க மாட்டேன். ஆனால் டிராவிட் அவராகவே வந்து நான் எப்படி விளையாடினேன் எங்கே சரிசெய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிச்சொல்வார் எனக்கு புல்லரிப்பாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.

டிராவிட் தோல்விகளை சந்திக்காமல் இல்லை. பல நேரங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் தன் பேட்டிங்கால் மட்டுமே பதில் சொன்னவர் டிராவிட். ‘’நான் பல நேரங்களில் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் என் முயற்சிகளை கைவிட்டதில்லை’’ என்று தன்னுடைய ஓய்வு அறிவிப்பின்போது பேசினார் டிராவிட். பதினாறு ஆண்டுகள் நாம் பார்த்த டிராவிட் அப்படித்தான் விளையாடினார்.

தன் வாழ்நாள் முழுக்க அதீத விளம்பர வெளிச்சங்கள் இல்லாமல், பாராட்டு மழையில் நனையாமல் தன்க்கு பிடித்த வேலையை சமயங்களில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தே வந்திருக்கிறார் டிராவிட். சின்ன சின்ன சாதனைகளை செய்துவிட்டு உடனடி அங்கீகாரத்துக்கு ஏங்குகிற இளைஞர்கள் டிராவிடிடம் கற்றுக்கொள்ள அநேக விஷயங்களுண்டு!

ஆனால்ராகுல் திராவிட்டைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்.

ராகுல் திராவிடின் வெற்றிகளைவிட அவருடைய தோல்விகளிலிருந்தே அதிகம் கற்றுக்கொள்ள முடியும். எத்தனையோ தினங்கள் அவருடைய கையும் காலும் நினைத்த திசைக்குப் போகாமல் இருக்கும்.

அப்போதெல்லாம் அவருடைய முகத்திலிருந்து கொட்டும் வியர்வையும் அவருடைய முகத்தில் தெரியும் ஆழ்ந்த கவனமும் ஆச்சரியம் தரும். அது தன்னுடைய நாள் இல்லை என்றாலும் அன்று தன் விக்கெட்டை எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நின்று போராடும் அந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது.

ராகுல் திராவிட் ஆட்டக்காரர். அதற்கான சரியான டெம்பரமண்ட் – மனநிலை வாய்த்தவர். அவருடைய ஆரம்பக் காலங்களில் அவர் அடிக்கும் ஸ்ட்ரோக்குகள் நேராக தடுப்பாளர்கள் கைக்குப் போய்க்கொண்டே இருக்கும். பிளேஸ்மெண்ட் கிடைக்க மிகவும் கஷ்டப்படுவார். பின்னர் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதில் வெற்றி கண்டார்.

தடாலடியாக நான்கு ஷாட்கள் அடித்து ஃபோரும் சிக்ஸுமாக ஜனங்களுக்குக் கிளுகிளுப்பூட்டும் ஆசாமி அல்லர் திராவிட். அவருடையது காபி புக் கிரிக்கெட் என்று சொல்லப்படுவது. இப்படித்தான் ஒருவர் இந்த ஆட்டத்தை, இந்த ஸ்ட்ரோக்கை ஆடவேண்டும் என்று புத்தகத்தில் எழுதிவைத்திருந்தால் அது எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஆட்டம் திராவிடுடையது.

திராவிடின் ஃபிட்னெஸ் அபாரமானது. ஆனால் பல ஆட்டங்களில் 400 பந்துகளுக்குமேல் நின்று ஆடும்போது கிராம்ப்ஸ் வந்து திண்டாடியுள்ளார். ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு எப்படியாவது நின்று ஆடி முடித்துவிட்டுத்தான் உள்ளே வருவார்.

ஒரு நாள் ஆட்டம் அவருக்குப் பிடிபட நாளானது. தெண்டுல்கர் போல இயல்பான ஜீனியஸ் அல்லர் ராகுல் திராவிட். எனவே ஆரம்பத்தில் அவருக்கு ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக இடம் தரப்படவில்லை. பின்னர் சிறிது சிறிதாக ஒரு நாள் போட்டிகளிலும் தன் இடத்தை வலுப்படுத்திக்கொண்டார்.

ஆனாலும் பல நேரங்களில் அவரால் ஒரு நாள் போட்டிக்குத் தேவையான அதிரடி ரன் சேகரிப்பைத் தர முடியாமல் போயுள்ளது. அப்போது அணியிலிருந்து நீக்கப்படுவார். பின்னர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் வரும். அங்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட பிற flat wicket bullies-ஆல் முடியாது என்பதால் மீண்டும் திராவிடை ஒரு நாள் போட்டிக்கான அணியில் சேர்த்துவிடுவார்கள்.

கிரிக்கெட் ஒரு  கல்லூரி, அதில் டெஸ்ட் ஆட்டங்கள் என்பது ஒரு கடினமான பாடம், ராகுல் திராவிட் அதில் தலைசிறந்த மாணவன். அவரின் ஆட்ட நுணுக்கங்கள், பொறுமை ஆகியவை இன்றைய வீரர்களுக்குக் கையேடு.

அவர் ந்ல்ல பேட்ஸ்மேன் என்பதை மறைக்க நினைத்தாலும் , மறைக்க முடியவில்லை..
ஆனால் அவர் நல்ல கேப்டனும்கூட என்பது பலருக்கு நினைவு இருக்காது.

தோனி போன்ற பலரை , அவர் தலைமையின் கீழ்தான் உருவாக்கினார். அவர் கேப்டன்ஷிப் சாதனைகள் சில…

  • அவர் தலைமையில்தான், இந்திய அணி தர வரிசைப்பட்டியலில் , ஏழாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது ( 04/16/06)
  • பின் வரிசை ஆட்டக்காரர்களான தோனி , இர்ஃபான் பதான் போன்றோரை டாப் ஆர்டரில் இறக்கி பரிசோதனை செய்தார். அணிக்கும் வெற்றி கிடைத்தது. வீரர்களின் திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது
  • தொடர்ந்து எட்டு போட்டிகளில் வென்றது முன்பு சாதனையாக இருந்தது. இவரது அணி அந்த சாதனையை சமன் செய்தது
  • தொடர்ந்து  14 போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீஸ் செய்த சாத்னையை இவர் அணி முறியடித்தது
  • ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு சராசரி வெற்றி விகிதம் வைத்துள்ள இந்திய கேப்டன் இவர்தான் .( 62.16% )

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டார் டிராவிட். அவருடைய சாதனைகளுக்கு முன்னால் நம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோகின்றன. எத்தனை பாராட்டினாலும் புகழ்ந்தாலும் ராகுல் டிராவிட்டின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் எல்லாமே தூசுதான்! சல்யூட் ஜாம்மீ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top