ஜபம் செய்யும் திசையும் பலனும்:
கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம் கிடைக்கும்.
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்.
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை விளையும்
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வறுமை வரும்.
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும்.
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்.
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும்.
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.
ஜபம் செய்யும் இடமும் பலனும் :
எந்த இடத்தில் அமர்ந்து ஜபம் செய்கிறோமோ அதை பொருத்து பலன் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்..
வீடு- பத்து மடங்கு பலன் பலன் கிடைக்கும்.
கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன் கிடைக்கும்.
குளம்- ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.
ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன் கிடைக்கும்.
மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன் கிடைக்கும்.
சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
ஹோமம் தரும் பலன்
ஹோமங்கள் பல உண்டு. ஒவ்வொரு ஹோமமும் எத்தகைய பலன் கிடைக்க செய்யப்படுகிறது என்று பார்ப்போம்.
1. ஸ்ரீவாஞ்ச கல்ப கணபதி ஹோமம் – நினைக்கும் காரியம் தடையின்றி நடைபெற
2. நவக்கிரக ஹோமம் – கிரக தோஷங்கள் விலகுவதற்கு
3. ஸ்ரீவித்யா ஹோமம் – நாட்டில் அமைதியும், சுபிட்சமும் உண்டாவதற்கு
4. அம்ருத ம்ருத்யஞ்செய ஹோமம் – ஆயுள் விருத்திக்கு
5. ஸ்ரீசூக்தி ஹோமம் – செல்வம் பெருக
6. சுதர்சன ஹோமம் – எதிரிகள் நீங்க
7. ஆவாஹந்தி ஹோமம் – ஏவல், பில்லி, சூனியம் விலக
8. வருண ஹோமம் – மழை பொழிய.