திருக்குறள் கதை
இரண்டு நாளாகவே அந்த வெள்ளைப் பசு சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்தது. மனைவி சொன்னாள் ” என்னங்க ! பக்கத்து தெருவுல உங்க நண்பர் மாணிக்கம் வீட்டிலயும் இப்படித்தான் இருந்ததாம். அவருகிட்ட போய் கேட்டுட்டு வாங்க ! என்றார்.
மாணிக்கத்திடம் போய் கேட்டேன்.
” சார் ! உங்க பசு இரண்டு நாளா சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்ததா ?
ஆமாம் !
நீங்க என்ன செஞ்சீங்க ?
அரை லிட்டர் வேப்பெண்ணையை எடுத்து, லேசா சுட வச்சு வாயிலே ஊத்தினேன்.
தேங்ஸ் ! என்று சொல்லி விட்டு வந்து அதே போல் அரை லிட்டர் வேப்பெண்ணையை லேசாக சுட வைத்து பசு மாட்டு வாயில் ஊற்றினேன்..
அரை மணி நேரம் கழித்து மாடு செத்துப் போனது.
நேரே மாணிக்கத்திடம் போனேன். சார் ! நீங்க சொன்ன மாதிரியே அரை லிட்டர் வேப்பெண்ணையை எடுத்து வாயிலே ஊற்றினேன் மாடு அரை மணி நேரத்தில் செத்துப் போச்சே ? என்றேன்.
அப்படியா ? என் மாடுங்கூடத்தான் அரை மணி நேரத்தில் செத்துப் போச்சு என்றார் மாணிக்கம்.
இதைத்தான் திருவள்ளுவர் 423 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ( 423 )
பொருள் : எந்தவொரு செய்தியையும் யார் சொன்னதாக இருந்தாலும் ஆராய்ந்து அதன் உண்மை நிலையை அறிவது தான் அறிவுடைமை.