நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய இடம் வகிக்கிறது.
வெங்காயத்தில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெ- உள்ளது இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கார தன்மைக்கும் காரணம் ஆகும்
பெல்லாரி வெங்காயம், சிறிய வெங்காயம் இரண்டு ஒரே தன்மையை உடையது . ஒரே பலனைத்தான் தருகிறது .
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.
இதயத்தை பலப்படுத்த வெங்காயம்
இதயம் சம்பந்தமான பல நோய்களுக்கு காரணம் அதிகபடியான கொலஸ்ட்ரால். தற்பொழுது வயதில் குறைந்தவர்களுக்கு கூட இதய சம்பந்தமான நோய்கள் வருகின்றது என்றால் அதற்கு காரணம் கொலஸ்ட்ரால் தான். எனவே இதை கட்டுப்படுத்துவது என்பது நம் தலையாய கடமையாகும். இப்படி அதிகப்படியான கொழுப்பைக் கட்டுப்படுத்த வெங்காயம் உதவுகின்றது. வெங்காயத்தின் தன்மையினால், உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். எனவே வெங்காயம் எடுத்து கொண்டு இதய நோயில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.
எதிர்ப்பு சக்தி கொடுக்கும் வெங்காயம்
வெங்காயத்தில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முக்கியமாக வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வெங்காயத்தால் கொடுக்க முடியும். வெங்காயம் உட்கொள்வதால் மருத்துவர் உதவி இல்லாமல் நம்மை பாதுகாக்க முடியும். பலவித தொற்று நோய்கள் மற்றும் கிருமிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்க வெங்காயம் போதுமானது.
மன அழுத்தத்தை போக்கும் வெங்காயம்
க்யூயர்சிடின் என்ற மருத்துவ தன்மை வெங்காயத்தில் உள்ளது. இதனால் மன அழுதத்தை கட்டுப்படுத்த முடியும். ஆகையால் அதிகப்படியான வேலை உள்ள நேரத்திலும் மன அழுத்தம் அதிகமுள்ள நிலையிலும் வெங்காயத்தை உட்கொள்வதால் மன அழுத்தம் நேராமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
புற்றுநோயை தடுக்கும் வெங்காயம்
புற்றுநோயை கண்டு அனைவரும் பயந்து நடுங்குகின்றனர். இந்நோய் வந்தால் செல்கள் வலுவை இழந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றது. இந்த நோயை தடுக்கும் தன்மை வெங்காயத்துக்கு உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்று நோயில் இருந்து நம்மை காத்துகொள்ள உதவுகின்றது.
சருமத்திற்கு அழகு சேர்க்கும் வெங்காயம்
வெங்காயம் உட்கொள்வதற்கு மட்டுமல்ல அழகை பாதுகாக்கவும் தான். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முகம் பொலிவு அடையவும், சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகின்றது. தழும்புகளையும் வடுக்களையும் போக்க வெங்காயம் உதவுகின்றது. வயதானால் சருமத்திற்கு வரும் பாதிப்பு அனைத்தையும் வெங்காயத்தால் விரட்ட முடியும்.