Abbreviations: (R – Runs, B – Balls, 4s – Fours, 6s – Sixes, SR – Strike Rate, NB – No Balls, WD – Wide Balls, LB- Leg Byes, O – Overs, M – Maidens, W – Wickets, Econ – Economy Rate, NO – NotOut, Mat – Match, Inns – Innings,HS – High Score,Ave – Average, St – Stumped, ct – Catch, wkts – Wickets, BBI – Best Bowling in inning,BBM – Best bowling in Match, SC – Scorecard, Ext – Extra Runs) |
1983ம் ஆண்டுதான் முதல் முறையாக ‘ஹரியானா சிங்கம்’ கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய ‘மகா சிங்கம்’ மேற்கு இந்தியத் தீவுகளை நையப்புடைத்து உலகக் கோப்பையை வென்று வந்த தினம்.
இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக நாடே காத்திருந்தது என 1983-ல் இந்தியாவுக்கு கோப்பையைப் பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வாழ்த்துகள். கோப்பையை வென்றதால் நான் மட்டுமின்றி, நாடு முழுவதும் மகிழ்ச்சியடைந்துள்ளது என்றார்.
யாருமே எதிர்பார்த்திராத ஒரு வெற்றி அது… ஆனால் கபில்தேவும், அவருடைய சில சகாக்களும் அத்தனை பேரையும் ஏறி மிதித்து வந்து கோப்பையைக் கைப்பற்றிய போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கே அளவே இல்லை… இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் அமோகமான வெற்றி அது.
லார்ட்ஸ் மைதானமே அன்று விழாக்கோலம் பூண்டது. ஒரு பக்கம் இந்தியா சாம்பியனா என்ற அதிர்ச்சி அலைகள், மறுபக்கமோ, நம்ம இந்தியாதான் சாம்பியன் என்று மைதானத்திற்குள் வெள்ளமென பாய்ந்து வந்த இந்திய ரசிகர்களின் உற்சாகப் புயல். லார்ட்ஸ் மைதானமே அதை நினைத்து இன்று கூட ஆச்சரியப்படும்.
டேவிட்டுககும், கோலியாத்துக்கும் இடையிலான சண்டை என்றுதான் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி இடையிலான அந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியை வர்ணித்தார்கள். காரணம், அப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு சுண்டெலியாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளோ அசைக்க முடியாத மகா சிங்கமாக வீற்றிருந்தது. ஆனால் கபில்தேவ் தனது அபாரமான புத்திசாதுரியத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை சாய்த்து அனைவரையும் அதிர வைத்தனர் கபில்தேவும், அவருடைய சகாக்களும்.
அது 3வது உலகக் கோப்பையாகும். முதல் இரு கோப்பைகளையும் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்ததால், 3வது முறையும் அதுவே சாம்பியனாகும் என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர். 3வது உலகக் கோப்பைக்கு புரூடென்ஷியல் கோப்பை என பெயரிட்டிருந்தனர்.
1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சனிக்கிழமை நடந்த அந்தப் போட்டியின் முடிவைக் காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்திருந்தது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி தனது அட்டகாசமான ஆட்டத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்திய அந்த தருணம் ஒட்டுமொத்த இந்தியாவும், குதூகலித்தது.
இறுதிப் போட்டியின் சில துளிகள்…
இங்கிலாந்தில் நடந்த 3வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம்8 அணிகள் கலந்து கொண்டன. 27 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் ஆட வேண்டும். நீளமான போட்டிதான்.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தீப்பொறி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்தியத் தரப்பில் முதல் ஆளாக அவுட்டானவர் சுனில் கவாஸ்கர். வெறும் 2 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் என மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை நசுக்கி பிதுக்கி விட்டனர்.
ஸ்ரீகாந்த் சேர்த்த 38
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் மட்டும் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். அவ்வளவுதான் இந்தியா, எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர்.
பலே பலே சந்து
ஆனால் நடந்தது வேறு..இந்தியாவின் பந்து வீச்சை மிக அழகாக திட்டமிட்டு பயன்படுத்தினார் கபில் தேவ். பல்வீந்தர் சிங் சந்து ரூபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சனி வந்து சேர்ந்தது. அபாயகரமான ஓபனரான கார்டன் கிரீனிட்ஜை சந்து அவுட்டாக்கிய விதம் இன்று நினைத்தும் வியப்பைத் தரும்.
ஒரே ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் கார்டன். அதன் பிறகுதான் இந்தியாவுக்கே நம்பிக்கை வந்தது. அதேபோல வி்வ் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி நகர்ந்து கபில் தேவ் கேட்ச் செய்த விதம் அத்தனை பேரையும் அசரடி்ததது.
படு வேகமாக ஆடிக் கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் இப்படி அவுட்டாகிப் போனதால் இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது.
மொஹீந்தரின் ‘மோகினியாட்டம்’
அதன் பிறகு வந்து சேர்ந்தது மொஹீந்தர் அமர்நாத்தின் ‘மோகினியாட்டம்’. அபாரமாக பந்து வீசிய அவர், மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களை நிலை குலைய வைத்தார். 3 முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தியதால் இந்தியாவின் கை ஓங்கியது, ‘கப்’பும் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இறுதியில் ஆட்ட நாயகன் அவரே. வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்தார் அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் மதன்லாலும் தன் பங்குக்கு 3 விக்கெட்களைத் தூக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி சரணடைந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தனது முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
இப்படி கபில் தேவ் தலைமையில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற தினம் அது. அதன் பிறகு இன்னொரு கோப்பையைப் பெற இந்தியா 28 வருடங்கள் காக்க வேண்டியதாகப் போயிற்று.
நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு இது பொன்னாள் – கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களைப் பற்றி கொஞ்சமாச்சும் நினைத்துப் பார்க்க வேண்டிய நன்னாள்…!
லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.இந்த விருதை இந்திய-ஐரோப்பிய வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் கபில்தேவின் பங்களிப்புக்காகவும் குஷீ சொசைட்டி மூலம் ஏழை மற்றும் ஆதரவற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கபில் தேவின் பங்களிப்பை அங்கீகரித்தும் அவருக்கு நேற்று விருது அளிக்கப்பட்டது.
விருதை ஏற்றுக் கொண்டு பேசிய கபில்தேவ் “இந்தியனாக இருப்பதில் பெருமையடைகிறேன், இன்றைய தினம் இந்தியா உலக அளவில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறது” என்றார்.
பிறகு கொஞ்சம் நகைச்சுவை கலந்த ஜாலி மூடில், “எனக்கு இங்கிலாந்தை பிடிக்காது, காரணம் எங்கள் நாட்டை ஆட்சி செய்தார்கள், ஆனால் அவர்களால் சிறப்பாக ஆட முடியாத கிரிக்கெட்டை எங்களுக்கு அவர்கள் அளித்ததில் மகிழ்ச்சி, அதே சமயத்தில் அவர்கள் மூலம் வந்தடைந்த ஆங்கில மொழி, இதனை என்னால் சிறப்பாக பேச முடியாது” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு திருப்பு முனை ஏற்படுத்திய 1983 உலகக் கோப்பை வெற்றி கபில் இல்லையேல் இந்தியாவுக்கு இல்லை என்றே கூறலாம்.
உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு 1982ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி ஒரு நாள் போட்டி ஒன்றில் மேற்கிந்திய அணியைக் காய்ச்சி எடுத்தது. பெர்பைஸில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கவாஸ்கர் 90 ரன்களை விளாச கபில்தேவ் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாச இந்தியா 47 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்தது. கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் எந்த ஒரு அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை அதுவரை எடுத்ததில்லை.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. கபில் கேப்டன்சியில் விழுந்த இந்த அடியை வெஸ்ட் இண்டீஸ் அணி அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. ஆட்டம் முடிந்தவுடன் கிளைவ் லாய்ட் தனது சகாக்களிடம் ‘இனி ஒருபோதும் இப்படி ஒரு தோல்வியை நாம் அடையக் கூடாது” என்று எச்சரித்தார்.
ஆனால்… எச்சரிக்கையால் பயனில்லை. 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் பலமான வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் தோல்வி தழுவி அதிர்ச்சியடைந்தது. இதன் தொடர்ச்சியாக லார்ட்ஸில் இறுதிப் போட்டியிலும் தோல்வி தழுவியது என்பது இப்போது வரலாறு.
ஜிம்பாவேயிற்கு எதிராக 17/5 என்ற நிலையிலிருந்து 175 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்த ஒருநாள் கிரிக்கெட்டின் அதிசயக்கத்தக்க இன்னிங்ஸையும் ஆடினார் கபில் தேவ்.
இன்றைய தினத்தில் சில பல இரட்டைச் சதங்களை இந்திய வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கலாம்,ஆனால் கபில்தேவின் 175 நாட் அவுட் என்பதை எந்த ஒரு இன்னிங்ஸும் தூக்கியடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆக்ரோஷம் என்பது பந்து வீச்சில் இருக்கவேண்டும், என்று செய்து காட்டியவர். திலகரத்னேவை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தியதை லைவாக பார்த்ததை இன்றும் மறக்கவில்லை.
ஆகவே அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து யு.கே. கொண்டாடியதில் வியப்பேதும் இல்லை.