நடைபயிற்ச்சியின் அவசியம் என்ன ?
உண்மையில் உடற்பயிற்சியின் அரசன் நடைபயிற்ச்சி ஆகும். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் இயல்பாகவே வேண்டுமென்றால், அது மூன்று மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதை நீங்கள் விலைகொடுத்து வாங்க வேண்டுமென்றால் உங்களிடம் இருக்கும் பணம் அதற்கு உதவாது, கால்களால் செல்வதால் மட்டுமே முடியும். என்று மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறார்கள்.
உலகில் காணப்படும் உயிரினங்களில் மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும் தனது சொந்த முயற்சியால் மட்டுமே, அதாவது நடப்பது, ஓடுவது, மற்றும் பறப்பது மூலமாகத்தான் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரவேண்டும் என்பது தான் இயற்கை விதித்த நியதி.
விலங்குகளும், பறவைகளும் இயற்கையின் நியதிக்களுக்கு உட்பட்டு தான் இருந்தும் வாழ்ந்தும் வருகின்றன, என்றாலும்,
மனிதன் மட்டுமே அவசரமான இந்த காலக்கட்டத்தில் நடப்பதற்கு நேரமில்லாமல் ஆகிவிட்டது நாகரீகம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப வாகன வசதிகளையும், வாகனத்தின் வேகத்தையும் பெருக்கிக் கொண்டான் . மரணத்தை விபத்துகள் மூலமாகவும் சந்திக்க தொடங்கினான்.
நீரிழிவு நோய் என்ற ஒன்று தனக்கு வந்த பின்பு தான் உயிர் மேல் பயம் கொண்டு நடைபயிற்ச்சியின் அவசியத்தை மனிதன் உணர்கின்றான் . மருத்துவர் சொல்லி விட்டாரே என்ற கடமைக்காக சிலர் நடைபயிற்ச்சியை மேற்கொள்ளும் போது தனது சொந்தக்கதைகளும், சோகக்கதைகளும், டீ வி மெகா சீரியல் கதைகளும் விவதம் செய்தபடி நடந்து செல்கிறார்கள்.
இசைகேட்டபடியும் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டும் நடந்து செல்கிறார்கள். சிலர் வீட்டுக்குள்ளேயே ஒரு இயந்திரத்தின் மீது ஏறி நின்று, நின்ற இடத்திலேயே வேகமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ஏதோ ஒரு கட்டாயத்திற்காகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ நடைபயிற்ச்சியை மேற்கொண்டு அன்றைய கடமை முடிந்தது என்று திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.
ஒருவர் சாதாரணமாக நடந்து சென்றால் கூட எதிரில் வருபவர், என்ன உங்களுக்கு சுகர் வந்திடுச்சா ? என்று கேட்கும் அகல்நிலையில் தான் இன்றைய நடைபயிற்ச்சி இருந்து கொண்டு இருக்கிறது.
நல்ல காற்றோட்டமான, போக்குவரத்து வாகனங்களின் புகை அதிகம் இல்லாத இயல்பாகவே மனதிற்குத் அமைதிதரும் அதிகாலை அல்லது மாலை வேளைகளில், வேறு எந்தவிதமான சிந்தனையும் இன்றி கை, கால்களை நன்றாக வீசி நடக்க வேண்டும்.
ஏனெனில், கை, மற்றும் கால்களின் அசைவு களின் மூலமாகத்தான் மூளையின் பணியும், நாளமில்லாச் சுரப்பிகளின் செயலும் புத்துணர்வு அடைகின்றது , பொதுவாக நமது உடலில் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது கைகால்களின் அசைவுக்கு ஏற்ப சீராக இருக்கின்றன.
உங்களால் முடிந்த அளவிற்கு அதிக சிரத்தை இல்லாமல் சீரான சுவாசத்தோடு நடைபயிற்ச்சி மேற்கொள்ள வேண்டும். என்ன செய்கின்றோம் என்ற உணர்வோடு, எந்த ஒரு செயலையும் செய்யும் போது மட்டுமே, அதற்கான முழுப்பலனையும் திருப்தியாகவும் முழுமையாகவும் பெறமுடியும்.