Home » 2016 (page 76)

Yearly Archives: 2016

ஜப்பான்!!!

ஜப்பான்!!!

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார். 4. ... Read More »

தமிழகத்தின் வரலாறே மாறிய போர்கள்!!!

தமிழகத்தின் வரலாறே மாறிய போர்கள்!!!

வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது ” தெள்ளாற்றுப் போர் “. இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. “தெள்ளாறு”, இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் ... Read More »

இரத்த தானம் செய்வீர்!!!

இரத்த தானம் செய்வீர்!!!

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம். இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று ... Read More »

உடலில் தீ வைத்தல் – இது சீன வைத்தியம்!!!

உடலில் தீ வைத்தல் – இது சீன வைத்தியம்!!!

புற்றுநோய், மன அழுத்தம் நீங்க வேண்டுமா? உடலில் தீ வைத்தால் போதும்- இது சீன வைத்தியம் பீஜிங்: சீனாவில் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்த தீயால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மீண்டும் அங்கு பிரபலமடைந்து வருகின்றது. இந்த பழமையான சிகிச்சை முறையால் மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய் போன்ற எல்லாவகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று இந்த சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். 3000 ரூபாய் கட்டணம்: நெருப்பு சிகிச்சைக்கு ஒரு மணி நேரத்திற்கு 300 யுவான் ... Read More »

எலி தொல்லையில் இருந்து விடுபட!!!

எலி தொல்லையில் இருந்து விடுபட!!!

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் ... Read More »

முந்திரிப் பருப்பு!!!

முந்திரிப் பருப்பு!!!

சத்துப் பட்டியல்: முந்திரிப் பருப்பு அதீத சுவையுடன் அதிக ஆற்றலும் தரக்கூடியது முந்திரி பருப்பு. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களும், தாது உப்புகளும் கூட இதிலுள்ளன. முந்திரிப் பருப்பின் சத்துக்களை அறிவோம்… முந்திரி, பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளை தாயகமாகக் கொண்டது. கொஞ்சம் பசுமையும், கொஞ்சம் வெப்பமும் கொண்ட பகுதிகளில் முந்திரி நன்கு விளையும். பழத்திற்கு வெளியே விதை இருப்பது முந்திரியின் வினோதமாகும். சிறுநீரக வடிவில் தடித்த உறையுடன் முந்திரிப் பருப்புகள் சூழப்பட்டிருக்கும். முந்திரிப்பருப்பு அதிக ஆற்றல் தரக்கூடியது. ... Read More »

மகாவீரர்!!!

மகாவீரர்!!!

மகாவீரர் இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 ... Read More »

பலாப்பழம்!!!

பலாப்பழம்!!!

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது. பலாவின் தாவரவியல் பெயர்: “ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்” (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது. தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் ... Read More »

கத்தரிக்காய்!!!

கத்தரிக்காய்!!!

கத்தரிக்காய்:- கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள். நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது. ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது. இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும். ... Read More »

நிறங்கள் அதன் இயல்புகள்!!!

நிறங்கள் அதன் இயல்புகள்!!!

நிறங்கள் அதன் இயல்புகள்:- வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். சந்தோஷம் தரும் மஞ்சள் மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ... Read More »

Scroll To Top