தீரன் சின்னமலையின் முன்னோர்கள்: கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய ... Read More »
Yearly Archives: 2016
ஒற்றை குழந்தை வரமா? சாபமா?
August 3, 2016
இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளும் போக்கு நிலவி வருகிறது. சமூக – பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த சாதக பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஒற்றை குழந்தை என்பதால் நிறைய சொத்து சேர்த்து வைக்க முடியும் என்ற ஒரே ஒரு சாதகம் மட்டும் இருக்கும்வேளையில் அதன் பாதகங்களை பட்டியலிடுவோம். – ஒரு வேளை சந்தர்ப்ப வசத்தால் குழந்தை இறக்க நேரிட்டால், அதுவும் 15-20 ... Read More »
என்ன விசேஷம் இந்த ஆடி பதினெட்டுக்கு?..!!!
August 3, 2016
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் 18ஐக் கூட்டினால் 9. ஒன்பது என்பது நல்ல எண் என சொல்லுவார் ஒரு எண்ணிக்கை நிபுணர். ஆனால், பதினெட்டின் சிறப்பும், இந்த நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணமும் தெரியுமா? பார்வதிதேவி ருதுவான மாதம் ஆடி. ஆடி முதல் தேதியில் வயதுக்கு வந்ததாகச் சொல்வதுண்டு. வயதுக்கு வந்த பெண்களை இக்காலத்தில் தீட்டு என்ற காரணத்துக்காக 16 நாட்கள் வரை வீட்டிலிருந்து விலக்கி வைப்பார்கள். அக்காலத்தில் 18 நாட்கள் விலக்கி வைத்துள்ளனர். அதன்பிறகு ‘சடங்கு’ என்ற இனிய நிகழ்ச்சியை நடத்துவர். ... Read More »
தீரன் சின்னமலை!!!
August 3, 2016
தீரன் சின்னமலை !! ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை. இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவரருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம். இளவயதிலேயே ... Read More »
வரலாறு: மிளகாய்!!!
August 2, 2016
‘அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?’னு கேட்டா… சட்டுனு ‘கொலம்பஸ்’ பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, ‘மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?’னு கேட்டாக்கா… மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ... Read More »
சிவலிங்கமாக மாறிய கொள்ளுப் பை!!!
August 2, 2016
திருவாரூர் மாவட்டம் திருப்பள்ளி முக்கூடல் என்ற தலத்தில் திருநேத்திரநாதர் என்ற பெயரில் சிவபெரு மான் அருள்பாலித்து வருகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த தலம், தேவாரப் பாடல் பெற்ற காவேரியின் தென்கரைத் தலங்களில் 88–வது தலம் இதுவாகும். திருநாவுக்கரசர் இத்தல இறைவனை துதித்து தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார். ஜடாயு வழிபாடு காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தலத்தில் அமர்ந்து ... Read More »
வியட்நாமில் மிகப்பழமையான சிவாலயம்!!!
August 2, 2016
வியட்நாமில் 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பழமையான சிவாலயம் தலவரலாறு: வியட்நாமின் மைச ன் நகரில் உள்ள சிவன் கோயில் 4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கட்டிடங்களும் தூண்களும், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக , வியட்நாமின் சம்பா நாகரீகத்தை பறைசாற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கின. கலாச்சார கொண்டாட்டங்களின் போது, அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், மத குருமார்களும் வந்து வழிபடும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இக்கோயில் திகழ்ந்தது. இக்கோயிலின் சிவ வழிபாட்டு அறை, கி.பி. 381 – ... Read More »
ஆடிப்பெருக்கு வாழ்வை வளமாக்கும்!!!
August 2, 2016
தமிழகத்தின் நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். நதிகளும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் கொண்டாடப்படுகிறது. காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, சிலர் மூவாறு பதினெட்டு என்று கூறுவார்கள். தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் ... Read More »
பூதம் நிறைவேற்றிய ஆசை!!!
August 1, 2016
ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே ... Read More »
நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில்!!!
August 1, 2016
நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள் அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி,விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண்நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி,இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், ... Read More »