அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்தார்!!! தூய்மையான, தன்னலமற்ற பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் நாயன்மார்கள். நம் மண்ணில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்கள். எத்தனை சோதனை வந்தாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட தொண்டிலும், கடமையிலும் பக்தியிலும் குறை வைக்காதவர்கள். சிவனடியாரும் சிவனும் வேறு வேறு அல்ல என்று கருதி, அடியார்களையே இறைவனாக தொழுதவர்கள். வேதத்தை முழுவதும் கற்று ஓதுவதற்கு இணையானது இவ்வடியார்களின் வரலாற்றை படிப்பது. ஆவணி மூலம். குங்கிலயக் கலய நாயனாரின் குருபூஜை. அவர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள். ... Read More »
Yearly Archives: 2016
குரங்கு கொடுத்த தண்டனை!!!
September 11, 2016
உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுத்து எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் கொடுத்தார்கள் “குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்” என்றனர் சீடர்கள். பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார். அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு…. அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். ... Read More »
சுப்ரமணிய பாரதியார் – ஒரு சிறப்புக் கட்டுரை!!!
September 11, 2016
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த ... Read More »
பூஜ்யம் ஒரு தனி ராஜ்ஜியம்!!!
September 10, 2016
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன. ஆசிரியர், “ஏன் ஒளிந்து கொண்டாய்?” என்று கேட்டார். “நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,” என்று வருத்தமாக கூறியது. புன்னகைத்த ஆசிரியர், “ஒன்று’ என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, “இதன் ... Read More »
சிவபுராணம்!!!
September 10, 2016
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம். மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும். நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு: ந – நடப்பு… ம – மறைப்பு சி – சிறப்பு வ –வனப்பு ய – யாப்பு இதில், நடப்பு: உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் ... Read More »
தற்கொலை – ஒரு பார்வை!!!
September 10, 2016
தற்கொலை – ஒரு பார்வை தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. மதங்கள் தற்கொலையைக் கடவுளுக்கு எதிரான செயலாகவும் மரியாதை அற்றதாகவும் கருதுகின்றன. தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஜப்பானிய சாமுராய் மரபில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இந்தியாவில்இருந்தது. இதனை உடன்கட்டை ஏறுதல் என்பர். தன் கழுத்தை தானே அறுத்துப் பலியிட்டுக் கொள்ளும் மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது. இதற்குப் பெயர் : ... Read More »
இதுதான் வாழ்க்கை!!!
September 10, 2016
கவலையுற்ற மனிதன் ஒருவன் குருவைத் தேடி வந்தான். “குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மகிழ்ச்சி மட்டும் கிடைக்கவில்லை” என்றான். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. “இதோ இவற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்து வா!” –குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். அவனால் எந்தப் பட்டாம்பூச்சியையும் பிடிக்க முடியவில்லை. “பரவாயில்லை. வா, நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்!” ... Read More »
எலுமிச்சையின் பலன்கள்!!!
September 9, 2016
எலுமிச்சை என்ற அந்த மஞ்சள் நிற பழத்தின் பலன்களை கணக்கில்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சுவையை கூட்டுவதற்காக தண்ணீரிலோ அல்லது குளிர் பானங்களிலோ போட்டு பயன்படுத்தலாம் அல்லது சரும பராமரிப்பிற்காகவும் கூட பயன்படுத்தலாம். இப்படியாக எலுமிச்சையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கையில் அடங்கிவிடும் இந்த பழத்தை எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ஏனெனி ல், இந்த பழம் எப்பொழுது தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாது. எலுமிச்சைப் பழத்தையும், அதன் பிற பகுதிகளையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் ... Read More »
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!!!
September 9, 2016
தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் ... Read More »
குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு!!!
September 9, 2016
குழந்தைகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் தந்தை. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம் என பாடல் வரியே உண்டு. தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம்குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச்செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக்கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாகவிட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி,அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும். ‘நீ ராசா அல்லவா? ராசாத்திஅல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம்’ – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வானபண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை… – சிக்மண்ட் ... Read More »