Home » 2016 (page 44)

Yearly Archives: 2016

அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!

ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்துகொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது.ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார். “”சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது.இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும்,அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?” என்று கேட்டார். மகான் சிரித்தபடி, “”சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?” “”சுவாமி… ... Read More »

இன்று: செப்டம்பர் 23!!!

இன்று: செப்டம்பர் 23!!!

நிகழ்வுகள் 1529 – ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான். 1641 – ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களுடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற கப்பல் மூழ்கியது. 1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது. 1821 – திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர். 1846 – நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1848 – அமெரிக்காவில் ஜாண் கார்ட்டிஸ் விற்பனைக்காக முதன்முதலில் சேவிங் கிரீம் தயாரித்து வெளியிட்டார். 1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது. 1884 – ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார். 1889 – நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. ... Read More »

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »

அறிஞர் அண்ணாத்துரை

அறிஞர் அண்ணாத்துரை

அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர்,ஆங்கிலத்திலும் வல்லவர் !!! ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க ... Read More »

அப்பா

அப்பா

எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்..? கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது.. முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… சொல்லிக் ... Read More »

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்!!!

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்!!!

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்:- அதிக நிழல் தரும் மரமாகிய ஆலமரம் இந்தியாவின் தேசிய மரம் . பல தலைமுறைகளையும் கண்டு கம்பீரமாக நிற்கக் கூடிய ஆலமரத்திற்கு நிகர் ஆலமரம் தான். ஆலமரம் என்றால் Ficus benghalensis எனும் இனத்தை குறிக்கும். ஆலமரத்தின் பழங்களை தின்னும் பறவைகளின் மூலம் இதன் விதைகள் பரப்பப்படுகிறது. ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பேருதவி புரியும் ஆலமரத்திற்கு ... Read More »

குருவுக்கு காணிக்கை!!!

குருவுக்கு காணிக்கை!!!

விக்கிரமாதித்தன் கதை குருவுக்கு காணிக்கை தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! உன்னுடைய ராஜ்யத்தின் ஏதோ மிகக் கடினமான பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறாய் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் மிக அறிவாளிகள் என்று நாம் நனைக்கும் சிலர் சாதாரண பிரச்சினையைக் கூட ... Read More »

விளக்கெண்ணெய்!!!

விளக்கெண்ணெய்!!!

விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் ... Read More »

நல்லாயிருக்கு!!!

நல்லாயிருக்கு!!!

சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்…”போயிட்டுவாறன்” என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். ‘ஏதாவது சொல்லுவான்’ என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. ‘தன் சமையல் சரியில்லையோ?’ ... Read More »

புரிந்து கொள்ளாத மக்கள்	!!!

புரிந்து கொள்ளாத மக்கள் !!!

விக்கிரமாதித்தன் கதை புரிந்து கொள்ளாத மக்கள்!! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “”மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ... Read More »

Scroll To Top