ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் ... Read More »
Yearly Archives: 2016
நாகரத்தினத்தை திருடியது நியாயமா?
October 12, 2016
விக்கிரமாதித்தன் கதை நாகரத்தினத்தை திருடியது நியாயமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் ... Read More »
கந்தபுராணம்!!!
October 12, 2016
ஓம் முருகா சரணம் கந்தபுராணம் சம்ஸ்க்ருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன: சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மஹாபுராணமும் ஒன்று. “முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்” என்று நூற்பயனை ... Read More »
அழகில் வீழ்ந்த மீன்!!!
October 12, 2016
ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு… என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து “ஏய் சோமு, அங்கே பார் அவன் ... Read More »
மாயூரம் வேதநாயகம்பிள்ளை!!!
October 11, 2016
கீர்த்தனைகள், செய்யுள்கள் செய்வதிலும் புகழ்பெற்ற வரான மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நாவலுக்குரிய அடிப்படை இயல்பாகிய உரைநடையைப் பயன்படுத்தி மேற்கத்திய பாணியும் நாட்டுப்புறக் கதை சொல்லல் மரபும் இணைந்த வடிவத்தில் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். நாவல் என்பதற்குச் சில கறாரான வரையறைகளை வைத்திருப்போர் பிரதாப முதலியார் சரித்திரத்தில் நாவலுக்குரிய அம்சங்கள் குறைவு என்று கூறினாலும் இன்றைய வாசகரும் சுவாரஸ்யமாக வாசிக்கக்கூடிய அளவுக்கு வாசிப்புத்தன்மை கொண்டதாகவே அந்நாவல் விளங்குகிறது. நாவல் வாசிப்போர் சிரிக்கவே கூடாது என்று ... Read More »
உலகம் யாரை கொண்டாடும்?
October 11, 2016
அந்த ஊரில் ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனது கருமித்தனத்தால் ஊரார் அவனை அடியோடு வெறுத்தனர். ஒரு நாள் ஊராரிடம் அவன் சொன்னான்…. “உங்களுக்கு என்னை பற்றி இப்போது தெரியாது. கடவுளுக்கு தெரியும். நான் போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. அது எனக்கு தெரியும். எனவே என் சொத்துக்களில் கணிசமான ஒரு பகுதியை இந்த ஊருக்கும் பல தர்மகாரியங்களுக்கும் உயில் எழுதி வைத்துவிட்டுத் தான் செல்வேன்!” என்றான். அவன் இப்படி சொன்னதும்… ஊராரின் கேலி ... Read More »
உயர்ந்த நட்பு!!!
October 11, 2016
உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.? கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? தன் நண்பணுக்காக உயிரையே தந்தானே?. மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா? துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்… அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்.. அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டுச் சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம் ... Read More »
வாழ்க்கைக்கான மந்திரம்!!!
October 11, 2016
வாழ்க்கைக்கான மந்திரம்.. ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார். துறவி கிளம்பும்போது… மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார். மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பல காலங்கள் கழிந்தன. ... Read More »
நல்லதே நினை!!! நல்லதே நடக்கும்!!!
October 10, 2016
தியாகசீலர்களின் பெருமையை சுலபத்தில் அறிய முடியாது. மற்றவர்களால்அறிய முடியாதது மட்டுமல்ல! அவர்களின் சந்ததியாலேயே அறிந்து கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்திற்குவேறுவிதமாகப் பொருள் கொண்டு, விபரீதமாக எண்ணிப் பழிக்குப்பழிஎன்று கிளம்புவதும்உண்டு.அப்படிக் கிளம்பிய ஒருவரின் கதை தான் இது. ததீசி முனிவர் என்பவர், தேவர்கள் நல்வாழ்வு பெற தன் முதுகெலும்பையே ஆயுதமாகக் கொடுத்து உயிர் தியாகம் செய்தவர். அவர் அந்த தியாகத்தைப் புரிந்தபோது, அவரது மகன்பிப்பலாதன் சிறுவனாக இருந்தான். அவன்இளைஞனான பிறகு, அவன் தாயார் நடந்ததையெல்லாம் விவரித்தார். அதைக் கேட்டு ... Read More »
சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்!!!
October 10, 2016
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சில நாடுகளில், இத்தண்டனை வழங்கப்படுவதில்லை. உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty) என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச ... Read More »