Home » 2016 (page 36)

Yearly Archives: 2016

மெக்ஸிக்கோ!!!

மெக்ஸிக்கோ!!!

மெக்ஸிக்க மணித்துளிகள் மெக்ஸிக்கோ. மாயன் மற்றும் ஆஸ்டெக் என்னும் பழம்பெரும் செவ்விந்திய நாகரீகங்கள் தழைத்த நாடு. ஸ்பானிஷ் காலனீய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு. வெகுமக்களின் புரட்சி கண்ட நாடு. ஆக்டேவியோ பாஸ் எழுதிய நாடு. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் முதலிய பல தளங்களிலும் தனக்கான அடையாளங்களைத் தக்க வைக்க முயலும் நாடு. பழையதும் புதியதும் வறுமையும் வளமையும் இயற்கை எழிலும் சூழல் மாசும் கலந்த நாடு. ஒரு மெக்ஸிக்கோவினுள் பல மெக்ஸிக்கோக்கள். தொழில் மற்றும் குடும்ப விடுமுறைக் ... Read More »

வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!

வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ... Read More »

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: வரலாற்று புகழ் மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகம் பன்மொழிக் களஞ்சியமாக விளங்குகிறது. தஞ்சை மாமன்னர் சரபோஜி, சத்திரம் உள்ளிட்ட புதிய நிர்வாகங்களை உருவாக்கி, அவற்றை நிர்வகித்தவர். ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில், தீர்க்கதரிசியாக திகழ்ந்தவர். உலகில் அனைவரும், படித்து பயன்பெறும் விதத்தில், தஞ்சையில் சரஸ்வதி மகால் நூலகத்தை உருவாக்கினார். உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து “சரஸ்வதி பண்டாரம்” ... Read More »

கவிஞர் கண்ணதாசன்!!!

கவிஞர் கண்ணதாசன்!!!

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர். தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் ... Read More »

உலக உணவு நாள்!!!

உலக உணவு நாள்!!!

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. “விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: “உலக உணவு உற்பத்திக்கு வழி’ என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ... Read More »

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

உத்தமபுரம் சமஸ்தானத்தை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சந்திரன். அவன் ஒரு பேராசை பிடித்தவன். உலகத்தில் உள்ள அவ்வளவு செல்வமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான். ஒருபோதும் அவன் குடி மக்களின் நன்மையைப் பற்றி கவலைப் பட்டவனே இல்லை. அவர்களும் அவன்மீது பிரியம் இல்லாமலே இருந்தனர். மொத்தத்தில் அவன் ஒரு கொடுங் கோலனாகவே இருந்தான். கொடுங்கோல் மன்னனை யார் விரும்புவார்கள்? அவனுக்கும் மக்களின் வெறுப்பு புரிந்தே இருந்தது. அவன் என்றாவது ... Read More »

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலக சமாதான தினம் – ஜனவரி 1 உலக சுற்றுபுறசூழல் தினம் – ஜனவரி 5 உலக சிரிப்பு தினம் – ஜனவரி 10 உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26    உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30    உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2  உலக புற்று நோய் ஒழிப்பு தினம் – பெப்ரவரி 4 உலக நோயாளர்கள் தினம் – பெப்ரவரி 12 அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ-பெப்ரவரி 21 உலக சமாதான மற்றும் புரிந்துணர்வு தினம் – பெப்ரவரி 23    ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8 உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13    உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15    உலக வன நாள்-மார்ச் 21    உலக செய்யுள் நாள் – யுனெஸ்கோ-மார்ச் 21 ... Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண ... Read More »

அக்பர்!!!

அக்பர்!!!

இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்களுள் அக்பரும் தலை சிறந்த மன்னனாகக் கொள்ளப்படுகிறார். மொகாலய பேரரசினை நிறுவுவதில் அக்பரின் பங்களிப்பானது அளப்பரியதாகும். தமது பெருமுயற்சியால் ஒரு பேரரசினை நிறுவி, அதனை ஐம்பது ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். இவரது நிருவாகம், அரசியல் நடவடிக்கைகள், சமயக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, சமூக மற்றும் பொருளாதார ரீதியான பங்களிப்பு, கலைத்துறைசார் பங்களிப்பு என இவரது ஆட்சி பல முக்கியத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.   அக்பர் சிந்து மாவட்ட அமரர் கோட்டம் ... Read More »

காய்கறிகளும் அதன் பயன்களும்!!!

காய்கறிகளும் அதன் பயன்களும்!!!

இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள். உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்: 1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் ... Read More »

Scroll To Top