ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான். சில மாதங்கள் கழிந்த பின்னும் ... Read More »
Yearly Archives: 2016
உங்கள் காலம் திருடப்படுகிறதா?
November 22, 2016
வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம். காலத்தின் மதிப்பைக் குறிப்பிடும் போது ... Read More »
இன்று: நவம்பர் 22
November 22, 2016
அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். 1574 : சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1908 : அல்பேனிய அரிச்சுவடி அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 : எகிப்திய பாரோவின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. 1935 : பசுபிக் சமுத்திரத்தை தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப்புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் பிலிப்பைன்ஸின் மணிலாவை அடைந்தது.) 1940 ... Read More »
இந்தாப்பா உன் சந்தோஷம்!
November 21, 2016
ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல. சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்! சரி, இதை ... Read More »
காந்தியடிகள் சொல்லுகிறார்…
November 21, 2016
கையெழுத்தில் நான் அசட்டையாக இருந்து விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்தக் கருத்தே எனக்கு இருந்தது. பிறகு முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில் இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக ... Read More »
ஒரு மாபெரும் வெற்றிக்கதை
November 21, 2016
கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் ... Read More »
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 2
November 21, 2016
முக்கியமானதை முதலில் படியுங்கள்! வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். ”நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்” என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய ... Read More »
இன்று: நவம்பர் 21
November 21, 2016
1272 – மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான் 1783 – பாரிசில் Francois Pilatre de Rosier என்பவரும் Marquisd Arlandes என்பவரும் வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனில் முதன்முதலாக பறந்து காட்டினார்கள். 1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. 1791 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான். 1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் ... Read More »
கடவுளுடன் ஒரு பேட்டி!!!
November 20, 2016
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன். கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். ... Read More »
பயத்தை வெல்வது எப்படி?
November 20, 2016
பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர். பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு ... Read More »