பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும். மனிதன் முடிவில்லாத பிரம்மாண்டமான ஒரு வட்டம் போன்றவன். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை. ஆனால் அந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது கடவுள் பிரம்மாணண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது. ஆனால் அந்த வட்டத்தின் மையம், எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இதுதான். ... Read More »
Home » 2016 (page 185)
Yearly Archives: 2016
போஜராஜன்!!!
January 1, 2016
போஜராஜாவுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது. காளிதாசன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் காலமான பிறகு ஒரு சரம சுலோகம் எழுதுவான் அல்லவா? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக் கேட்க முடியும்? என்ற எண்ணம் வந்துவிட்டது. உடனே காளிதாசரை அழைத்து வரச் சொன்னான். சரம சுலோகத்தை நான் இப்போதே கேட்க வேண்டும் என்றான். என் வாக்கினாலே ஒன்று பாடினால் அப்படியே நடந்துவிடும். அதனால் நான் சரம சுலோகம் பாட முடியாது. ... Read More »