சலிப்படைந்தால் சாதனை இல்லை! ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ... Read More »
Yearly Archives: 2016
முல்லா, ஏன் அழுகிறாய்?
November 28, 2016
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் ... Read More »
இன்று: நவம்பர் 28
November 28, 2016
1987 : தென்னாபிரிக்காவின் விமானமொன்று இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததில் 159 பேர் பலி. 1520 : தென் அமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன்,சுபிக் சமுத்திரத்தை அடைந்தார். இவரே அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசுபிக் சமுத்திரத்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். 1729 : அமெரிக்காவின் மிசிசிப்பியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இன மக்களை நட்சே இந்தியர்கள் கொன்றனர். 1821 : ஸ்பெய்னிடம் இருந்து பனாமா பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. ... Read More »
புதையல்!!!
November 27, 2016
திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. ஒரு நாள்— வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே ... Read More »
அடைந்ததை அழித்தல்!!??
November 27, 2016
ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அந்தமரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்து வந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல்மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப்பார்த்து, ‘‘நீஎன்விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத்தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலைசாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்த பின் தன் வீட்டுக்குத்திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல் மரத்தின் நிழலையடைந்து ... Read More »
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 8
November 27, 2016
சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்! அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு ... Read More »
இன்று: நவம்பர் 27
November 27, 2016
1989: கொலம்பிய விமானத்தில்குண்டுவெடிப்பு 1703 : இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது. 1807: நெப்போலியனின் படைகளிடமிருந்து தப்புவதற்காக போர்த்துக்கல் அரச குடும்பத்தினர் தலைநகர் லிஸ்பனிலிருந்து தப்பிச் சென்றனர். 1895 : பாரிஸில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார். 1935 : இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசிலிருந்து (தற்போதைய சென்னை) வந்திறங்கியது. 1940 ... Read More »
சிந்திக்க வைத்த சிந்தனைகள் …
November 27, 2016
* துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வாழ்வில் முந்திச் சென்றாலோ, வெற்றியைப் படைத்தாலோ அதற்குக் காரணம் விதியோ, அதிர்ஷ்டமோ அல்ல. அவனது உழைப்புத்தான் காரணம். * பசி, வறுமை ஆகிய கொடிய நோய்களுக்கு உழைப்பு, வியர்வை ஆகியவைகளே மிகச் சிறந்த மருந்துகள். * எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்று அர்த்தம். * வேற்றுமை பாராட்டாமல் மனித இனத்திற்கு உழைக்கும் உணர்ச்சி ... Read More »
நயவஞ்சகர்களை நம்பலாமா?
November 26, 2016
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, ... Read More »
ஒரு நிமிடக் கதை – சிரிப்பொலி!!!
November 26, 2016
நல்ல மழை. வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது. கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது. ‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான். சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு ... Read More »