நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும். இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது. குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் ... Read More »
Yearly Archives: 2016
தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
January 20, 2016
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான், இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் ... Read More »
எது சிறந்த வழி!
January 19, 2016
ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிது கூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதல் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே. கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் ... Read More »
கல்வியும் சமுதாயமும்!
January 19, 2016
மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா?இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை.எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும். மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், ... Read More »
சுதந்திரப் பள்ளு!!!
January 19, 2016
ராகம்-வராளி தாளம்-ஆதி பல்லவி ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடுவோமே) சரணங்கள் 1. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே) 2. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே) 3. எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற ... Read More »
விடுதலை! விடுதலை! விடுதலை!
January 19, 2016
ராகம்-பிலகரி விடுதலை! விடுதலை! விடுதலை! 1. பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை; பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுலை; திறமை கொண்ட தீமை யற்ற தொழில்பு ரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை) 2. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே ... Read More »
ஓய்வின்றி வேலை செய்க!
January 19, 2016
* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள். * நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள். * ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். * சாகின்ற நிலையிலும் கூட நாம், ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்று கேள்வி கேட்காமல் உதவி செய்வது தான் கர்மயோகம். * சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி ... Read More »
மின்னல் வேக மாற்றம்!
January 18, 2016
* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம். * மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில். * உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. “நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய். * கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் ... Read More »
பாரத தேசம்!!!
January 18, 2016
ராகம்–புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத) 2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்; சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத) 3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் ... Read More »
தமிழ்மொழி
January 18, 2016
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். 1 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் ... Read More »