Home » 2016 (page 176)

Yearly Archives: 2016

ஜனவரி 23:இன்று நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம்!!!

ஜனவரி 23:இன்று நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம்!!!

கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார். மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,”ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !” என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை ... Read More »

சபாஷ் ‘சுபாஷ்’

சபாஷ் ‘சுபாஷ்’

இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள். முகம்மது ஜியாவுதீன், ஓர்லாண்டோ மசோட்டா, கிளாசி மாலங், பகவான்ஜி, கும்நாமி பாபா,  சவுல்மரி, இச்சிரோ உக்குடா போன்ற பல பெயர்களில் உலகின் பல பகுதிகளில் நேதாஜி உலவியிருக்கிறார். ... Read More »

‘வழுக்கைக்கு குட் பை!’

‘வழுக்கைக்கு குட் பை!’

ஆரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது! அந்த வகையில், ஆண் – பெண் இருவருக்குமே ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு! ஆண்களுக்கு ‘வழுக்கை விழுவதும்’ பெண்களுக்கு ‘முடி உதிர்வதும்’ தீராத தலைவலி! விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான ஷாம்பூ வகைகளைத் தேடிப் பிடித்து வாங்கித் தலையில் தேய்த்துக் கொள்வது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்வது… என்று முடிவில்லாமல் தொடர்கிறது ‘முடி’ப் பிரச்னை! ‘சாதாரணத் தலைமுடிப் பிரச்னைக்கு இந்தளவிற்கு யாராவது தலையைப் பிய்த்துக் ... Read More »

சூழ்நிலையால் தடுமாறாதே!

சூழ்நிலையால் தடுமாறாதே!

சிறுவன் நரேந்திரன் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். அப்போது அவனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அவன் தன் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு நாடக்குழுவை அமைத்தான். அதில் அவனும் அவனது நண்பர்களும் பல நாடகங்கள் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நரேந்திரன், தன் வீட்டு முற்றத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓர் உடற்பயிற்சி குழுவை அமைத்தான். பின்னர் நரேந்திரனும் அவனது நண்பர்களும், முறைப்படி உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எனவே அவர்கள், நவகோபால் மித்ரா என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சி நிலையத்தில் ... Read More »

துணிவும் வீரமும்!

துணிவும் வீரமும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள் -423 இதற்கு, எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார் என்று பாராமல் அந்தச் செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்பது பொருள். திருவள்ளுவரின் இந்தக் கருத்துக்கு, எடுத்துக்காட்டாக நரேந்திரன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது: சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். ... Read More »

வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ... Read More »

கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை போராடுவேன்!!!

கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை போராடுவேன்!!!

ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான். அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும் விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்” ஆவார். ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் தனது ஆத்மார்த்த குருவாக இவரையே தன் நெஞ்சில் ஏற்றுக்கொண்டாதாக நம் வரலாறு பெருமைப்பட்டுகொள்ளுகிறது. யார் இந்த நேதாஜி…. அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ... Read More »

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்!!!

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்!!!

1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்நேதாஜி . நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் ... Read More »

துணிவு மிக்க சிறுவன்!

துணிவு மிக்க சிறுவன்!

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் ... Read More »

கங்கை ஜாடியின் கதை!

கங்கை ஜாடியின் கதை!

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர். சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ... Read More »

Scroll To Top