புவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் வைத்த நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் நிலைத்தது. அதுவும் சுருங்கி, நரேன் என்ற பெயர் தான் நிலைத்தது. குழந்தை நரேனுக்கு ஐந்து வயது எட்டிவிட்டது. அந்த சமயத்தில் அவன் செய்த சேஷ்டைகள் அதிகம். சேஷ்டை என்றால் சாதாரணமான சேஷ்டை அல்ல…வெறித்தனமான சேஷ்டை. அவன் செய்யும் சேஷ்டையில் புவனேஸ்வரி மட்டுமல்ல, பொறுமை மிக்க சகோதரிகள் இருவரும் ... Read More »
Yearly Archives: 2016
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 2
January 28, 2016
விஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் எங்கெங்கோ அலைந்து, விதிவசமாக கல்கத்தாவுக்கே வந்து சேர்ந்தார். ஆனால், வீட்டுக்குப் போகவில்லை. தன் நண்பரின் வீட்டுக்குப் போய் சேர்ந்தார். பழைய நண்பர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை, துர்காசரணரின் வீட்டுக்கு சொல்லி அனுப்பிவிட்டார் அந்த நண்பர். அவ்வளவுதான். உறவுக்காரர்கள் குவிந்து விட்டனர்.துர்கா! நீர் இப்படி செய்தது முறைதானா? உம் மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது? மனைவி கிடக்கட்டும். ... Read More »
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 1
January 28, 2016
ஓம் காளி… ஜெய் காளி… என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் சின்னமாக பாவித்து வணங்குவர் அந்நகரத்து மக்கள். ஆம்… கல்கத்தா…அது காளியின் நகரம். அந்நகரத்தின் வடக்கே இருந்த சிம்லா என்ற பகுதியில் அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் இருந்து மங்கள வாத்தியங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. புதுப்பெண் புவனேஸ்வரி சர்வ அலங்காரங்களுடன் ஒரு சாரட்டில் அழைத்து வரப்பட்டாள். ... Read More »
இரத்த தானம்
January 27, 2016
இரத்த தானம் குறித்த சில முக்கிய தகவல்கள் :- இரத்த தானம் செய்வது எப்படி? யார் யார் கொடுக்கலாம்? யார் யார் கொடுக்கக் கூடாது? யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்? « A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத் தான் கொடுக்க வேண்டும். « B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும். « AB குரூப்: இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம். « O குரூப்: இவர்களுக்கு O குரூப் இரத்தம் ... Read More »
(PAN Card) என்றால் என்ன?
January 27, 2016
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம். 1. PAN CARD என்றால் என்ன? Permanent Account Number என்பதின் சுருக்கமே. 2. அதன் முக்கியதுவம் என்ன? வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை ... Read More »
எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?
January 27, 2016
காலையில் கண் விழிக்கும்போது மலர்ந்த புன்னகையுடன், “இறைவனே உன்னை வணங்குகிறேன்! இன்று முழுவதும் நான் செய்யும் செயல்கள் யாவும் உனக்கே அர்ப்பணம்” என மனதாரச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்! மகாத்மா காந்தி சொன்னார், “உங்கள் முகத்தில் புன்னகை இல்லையென்றால் நீங்கள் முழுவதும் ஆடை அணிந்ததாக ஆகாது, ஆகவே புன்னகை புரியுங்கள்!” என்று. புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்! ஒரு நாளைக்கு ... Read More »
சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!
January 27, 2016
ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது. மறைத்து வைப்பவை, மறைந்திருப்பவை அனைத்தும் இரகசியமே! இரத்தினமே! இரத்தினத்தின் திறமையை, இலட்சிய நோக்கோடு, வெளியிட்டால் சிகரத்தை உன் சிறு பையில் அடக்கி விடலாம். உன் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தும் முதல் நபர், நிச்சயம் நீயாகாத்தான் இருக்க முடியும். உன்னை உனக்குள் தேடு. நீ யார்? எனக் கேட்டுக் கொள். மனம் சொல்லும் கேட்டுச் சொல். ... Read More »
தந்தையே உன்னை போற்றுகிறோம்…!
January 27, 2016
தந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்.. கருவறை மட்டும்தான் உனக்கில்லை தாயென்று சொல்ல உன்னை.. உன்னை மறந்தாய் உறக்கம் தொலைத்தாய் உழைத்தாய் கலைத்தாய் வேர்வையில் குளித்தாய் நாங்கள் வாழவே நலமாய்… வலிகள் எம்மைத்தாக்கினால் வலிப்பதென்னவோ உனக்கல்லவா.. துயரங்களால் எம் விழி நனைந்தால் துடைப்பது உன் விரல்களல்லவா.. சோதனையானாலும் வேதனையானாலும் தோல் கொடுக்கும் தோழன் நீயல்லவா… உன்னைப்போற்ற ஓர் நாள் மட்டும் போதுமா… அனுதினமும் போற்றப்படவேண்டும் உன் புகழ் பூவுலகம் வாழும் காலம் வரை…! Read More »
மனசு தான் காரணம்
January 27, 2016
கபீர்தாசர் ஒருநாள் தன் மகனுடன் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் கல் இயந்திரமான “திருகை’யில் கோதுமை அரைத்துக் கொண்டிருந்தாள். அதை ஆர்வத்துடன் கண்டான் மகன். அவனிடம் கபீர்,”” இதன் பெயர் திருகை. மேலும் கீழுமாக இரு வட்டக்கற்கள் இருக்கும். மேல் கல்லில் இருக்கும் ஓட்டை வழியே கோதுமையைப் போட்டால் அது கீழ் கல்லில் விழுந்து விடும். நீட்டியிருக்கும் முளைக்குச்சியைச் சுற்றினால் தானியம் அரைபடும்,” என்று விளக்கம் தந்தார் கபீர். அவர்கள் ... Read More »
கால் வலி போக்கும் கல்தாமரை
January 26, 2016
முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. ச ராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் ... Read More »