Home » 2016 (page 17)

Yearly Archives: 2016

இன்று: நவம்பர் 30

இன்று: நவம்பர் 30

1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர். 1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர். 1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான். 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ... Read More »

எண்ணங்கள் பிரம்மாக்கள் !!!

எண்ணங்கள் பிரம்மாக்கள் !!!

எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் ... Read More »

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?

இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி ... Read More »

போலியான சந்தோஷம்!. நமக்குத் தேவையா?

போலியான சந்தோஷம்!. நமக்குத் தேவையா?

போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா? அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது சந்தோஷமே அல்ல. போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷ்ரீ என்ற அறிஞர். ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்). அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் ... Read More »

ஜனக மகராஜாவின் நேர்மை!!!

ஜனக மகராஜாவின் நேர்மை!!!

முன் ஒரு காலத்தில் விதர்ப தேசத்தில் நிர்மால்ய ரிஷி என்றொரு ரிஷி இருந்தார். அவர் வனத்தில் தங்கி இருந்தார். அந்த கால ராஜா மகாராஜாக்கள் அவரிடம் தமது பிள்ளைகளை அனுப்பி குருகுல வாசம் செய்ய வைத்து அதன் பின்னரே ஆட்சி பீடத்தில் அவர்களை அமர்த்துவார்களாம். அதற்குக் காரணம் ஆச்சாரங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது அல்ல, அந்த குருகுலத்தில் வளரும் பிள்ளைகள் மனதில் ஒழுக்கமும் பக்தி நெறியும் நிறைந்து இருக்கும்போது அவர்கள் மனதில் தூய்மையான எண்ணங்கள் மட்டுமே நிறைந்து ... Read More »

எழுதத் தெரிந்த புலி!!!

எழுதத் தெரிந்த புலி!!!

காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கபட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் தெரியவில்லை. ஒரு நாள் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த நத்தையொன்று புலிக்கூண்டின் மீது உட்கார்ந்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தது. புலி ஒய்வில்லாமல் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதைக்கண்டு எதற்காக இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு புலி பதில் சொல்லவில்லை. உடனே நத்தை கூண்டிற்குள் ... Read More »

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 10

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 10

கடவுள் காப்பாற்றுவாரா? ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான். வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக ... Read More »

இன்று: நவம்பர் 29

இன்று: நவம்பர் 29

1945: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. 1950: கொரிய யுத்தத்தில் ஐ.நா. படைகளை வடகொரிய, சீனப் படைகள் வட கொரியாவிலிருந்து பின்வாங்கச் செய்தன. 1963: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொல்லப்பட்டமை பற்றி விசாரிப்பதற்கு வாரென் ஆணைக்குழுவை ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் நியமித்தார். 1963: கனேடிய விமானமொன்று மொன்றீயலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி. 1983: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற வேண்டுமென ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. 1987: தாய்லாந்து- பர்மா எல்லையில் கொரிய ... Read More »

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்

மன்னன் திருதராஷ்டிரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். எதிரே இருந்த துரோணாச்சாரியாரிடம் பூடகமாக பேசத் தொடங்கினான். “துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்’. “கேளுங்கள் மன்னா!’ “சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்?’ “ஆம் மன்னா! அதில் சந்தேகமேயில்லை’. “தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம்’ “மன்னா!’ திடுக்கிட்டார் துரோணர். தன் மீதே மன்னர் சந்தேகப்படுவார் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. “துரோணரே! பாண்டவர்களையும் எனதருமை பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் ... Read More »

திறமையான குள்ளன்!!

திறமையான குள்ளன்!!

ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். மனைவி அவனிடம், “நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள். “நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு ... Read More »

Scroll To Top