11. ஹேது பலாச்ரயாலம்பனை; ஸங்க்ருஹீதத்வா தேஷாமபாவே ததபாவ காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருட்கள் இவை ஒன்று கூடியிருப்பதால் இவையில்லாதபோது அதுவும் இல்லை. காரண காரியங்களால் ஆசை ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆசை தோன்றினால் அது விளைவை உண்டுபண்ணாமல் மறையாது. சித்தத்தில் எல்லா பழைய ஆசைகளும் சம்ஸ்காரங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை செயல்பட்டு ஓயும்வரை அழிவதில்லை. மேலும், புலன்கள் புறப் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதால், புதிய ஆசைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால், ஆசைக்கான காரணம், பலன், ஆதாரம், ... Read More »
Yearly Archives: 2016
ராஜ யோகம் பகுதி – 15
March 21, 2016
4. கைவல்ய பாதம் முக்தி 1. ஜன்மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய பிறவி, ரசாயன மருந்துகள், மந்திர ஆற்றல், தவம், சமாதி, இவற்றின் மூலம் சித்திகள் கிடைக்கின்றன. சிலவேளைகளில் ஒருவன் பிறக்கும்போதே சித்திகளுடன் பிறக்கலாம். இவை முற்பிறவிகளில் அடையப் பெற்றவை. அவற்றின் பயனை அனுபவிப்பதற்கேபோல் இந்த முறை அவர்கள் பிறக்கின்றனர். சாங்கியத் தத்துவத்தின் தந்தையாகிய கபிலமுனிவர் பிறவிச் சித்தர் என்று அழைக்கப்படுகிறார். சித்தர் என்ற சொல்லுக்கு வெற்றி அடைந்தவர் என்று பொருள். இந்தச் சித்திகளை ரசாயன ... Read More »
நன்றியுள்ளவர்கள் யார்?
March 21, 2016
ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார். அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது. வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’ அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் ... Read More »
March 21, 2016
ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார். அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது. வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’ அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் ... Read More »
ராஜ யோகம் பகுதி-14
March 21, 2016
31. கண்டகூபே க்ஷúத்பிபாஸா நிவ்ருத்தி தொண்டைக் குழிமீது சம்யமம் செய்தால் பசி மறைகிறது. ஒரு மனிதனுக்குப் பசி அதிகமிருந்தால், தொண்டைக் குழி மீது அவன் சம்யமம் செய்தால் பசி அடங்கிவிடுகிறது. 32. கூர்ம நாட்யாம் ஸ்தைர்யம் கூர்ம நாடிமீது சம்யமம் செய்தால் உடல் உறுதிபெறும். பயிற்சி வேளையில் உடல் அசைவற்று உறுதி நிலையில் இருக்கும். 33. மூர்த்த ஜ்யோதிக்ஷி ஸித்த தர்சனம் உச்சந்தலையில் எழுகின்ற ஜோதியின்மீது சம்யமம் செய்வதால், சித்தர்களது காட்சி கிடைக்கிறது. சித்தர்கள் என்பவர்கள் ஆவிகளுக்குச் ... Read More »
கிளியின் கதை!
March 21, 2016
“துறவி ஒருவர், அக்பருக்கு அழகான கிளி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதை மிகவும் மகழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அக்பர், நன்றியுள்ள வேலையாள் ஒருவனை அழைத்து, கிளியைக் கொடுத்து, ‘மிகவும் கவனத்தோடு, அதற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுத்து வளர்த்து வர வேண்டும்; கிளிநோய்வாய்ப்பட்டிருக்கிறது என்றோ அல்லது செத்துவிட்டது என்றோ என்னிடம் வந்து சொன்னால் உனக்கு மரணதண்டனை அளிப்பேன்” என்று கட்டளையிட்டார். கிளியை ஏற்றுக் கொண்ட வேலையாள், தினமும் அதைக் கவனத்தோடு வளர்த்துப் பாதுகாத்தான். சில மாதங்களுக்குப் பிறகு, கிளிநோய் ... Read More »
ராஜ யோகம் பகுதி -13
March 21, 2016
3. விபூதி பாதம் யோக சித்திகள் இந்த அத்தியாயத்தில் யோக சித்திகளைப்பற்றி விவரிக்கப்படுகிறது. 1. தேச பந்தச் சித்தஸ்ய தாரணா குறிப்பிட்ட பொருளில் மனத்தை நிறுத்திவைப்பது தாரணை உடலில் உள்ளேயோ வெளியேயோ உள்ள ஒரு பொருளின்மீது மனம் நிலைபெற்று அந்த நிலையிலேயே பொருந்தியிருப்பது தாரணை (ஒருமைப்பாடு) 2. தத்ர ப்ரத்யயைகதானதா த்யானம் அறிவு அந்தப் பொருளை நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வது தியானம். மனம் ஏதாவது ஒரு பொருளை நினைக்கவோ, உச்சி, இதயம் முதலிய குறிப்பிட்ட பகுதியில் ... Read More »
ராஜ யோகம் பகுதி-12
March 20, 2016
41. ஸத்வ சுத்தி ஸெளமனஸ்யைகாக்ர்யேந்த்ரிய ஜயாத்மதர்சன யோக்யத்வானி சத்வத் தூய்மை, மன உற்சாகம், மன ஒருமைப்பாடு, புலன்களை வெற்றி கொள்ளல், ஆன்ம அனுபூதிக்குத் தகுதி இவற்றை அடைகிறான். தூய்மையைப் பழகுவதால் சத்வப்பொருள் மேலோங்குகிறது. மனம் குவிந்து உற்சாகம் பெறுகிறது. நீங்கள் ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு முதல் அடையாளம் உற்சாகம் பெறுவதே. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது அஜீரணத்தின் விளைவாக இருக்கலாம். அது ஆன்மீகம் ஆகாது. சத்வத்தின் இயல்பே ஆனந்த உணர்ச்சிதான். சாத்வீக மனிதனுக்கு எல்லாமே இன்பம் ... Read More »
உதைத்த காலுக்கு முத்தம்!!!
March 20, 2016
ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். “நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்?” இதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது. பீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி ... Read More »
ராஜ யோகம் பகுதி -11
March 20, 2016
21. ததர்த்த ஏவ த்ருச்யஸ்யாத்மா காணப்படுவதன் இயல்பு அவனுக்காக அமைந்துள்ளது. பிரகிருதிக்குச் சுய ஒளி இல்லை. புருஷன் அதில் இருக்கும்வரை அது ஒளிபோல் தோன்றுகிறது. ஆனால் அந்த ஒளி கடன் வாங்கியது. சந்திரனின் ஒளிபோல் பிரதிபலிப்பு ஒளிதான். இயற்கையின் வெளிப்பாடுகள் எல்லாமே இயற்கை தனக்குத்தானே உண்டாக்கியவை. புருஷனைச் சுந்திரனாகச் செய்வதைத் தவிர இயற்கையின் இந்தச் செயலுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை என்று யோகிகள் கூறுகின்றனர். 22. க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்யநஷ்டம் ததன்ய ஸாதாரணத்வாத் குறிக்கோளை அடைந்தவர்களுக்கு அது ... Read More »