விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் “சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் ... Read More »
Yearly Archives: 2016
பாப்பாப் பாட்டு!!!
March 23, 2016
ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! 1 சின்னஞ் சிறுகுருவி போலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2 கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா! 3 பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது மனிதர்க்கு தோழனடி பாப்பா! 4 வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் ... Read More »
ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்!!!
March 23, 2016
மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று.. தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் ... Read More »
பீர்பாலும் அக்பரும்!!!
March 23, 2016
டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான ... Read More »
கண்ணன் – என் குழந்தை!!!
March 23, 2016
(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் – பைரவி) (தாளம் – ரூபகம்) ஸ ஸ ஸ – ஸா ஸா-பபப தநீத – பதப – பா பபப – பதப – பமா – கரிஸா ரிகம – ரிகரி – ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக. 1. சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே – ... Read More »
தெனாலி ராமன் கதைகள் – காளியிடம் வரம் பெற்ற கதை!!!
March 23, 2016
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் ... Read More »
கண்ணால் காண்பது பொய்யா?
March 22, 2016
அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து ‘கண்ணால் கண்டது பொய் ஆகுமா?” என்று வினவினார். ‘பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்” என்றார் பீர்பால். ”இதற்கு என்ன ஆதாரம்?” எனக் கேட்டார் அக்பர். சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால். ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால். அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார். அடுத்து, படுக்கை ... Read More »
மதத்தின் தேவை ( பகுதி -2)
March 22, 2016
இவ்வாறு மிக உன்னதமானதொரு கருத்தை எல்லா மதங்களும் வெளியிடுகின்றன. மனித மனம் சிலவேளைகளில் புலன்களின் எல்லைகளை மட்டுமல்லாமல், பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் கடந்து செல்கிறது என்பதுதான் அந்தக் கருத்து, அந்த நேரங்களில், புலன்களின் மூலமாகவோ ஆராய்ச்சி மூலமாகவோ உணர முடியாத பல பேருண்மைகளை மனித மனம் நேருக்குநேர் காண்கிறது. இந்த உண்மைகளே உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. இந்த உண்மைகளை மறுத்துக் கூறவும், இவற்றைப் பகுத்தறிவின் மூலம் சோதிக்கவும் நமக்கு உரிமை உண்டு. மனித மனத்திற்குப் புலன்களையும் ... Read More »
மேலும் கீழும் உள்ள கை!!
March 22, 2016
அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார். அமைச்சர்களைப் பார்த்து, ”யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை மேலாகவும் வாங்குபவர் கை அதற்குக் கீழாகவும் இருக்கிறது. ஆனால், வேறு விதமாக, அதாவது வாங்குவோர் கை மேலாகவும் கொடுப்பவர் கை கீழாகவும் எப்பொழுது இருக்கும் என்பதைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா?” என்று கேள்வியைக் கேட்டார். சபையோர் குழப்பத்தோடு பார்த்தனர். ”ஒரு போதும் அப்படி இருக்காது” என்று கூறி விட்டனர். அக்பர் பீர்பாலைப் பார்த்து, ”உம்முடைய ... Read More »
மதத்தின் தேவை (பகுதி -1)
March 22, 2016
மனித இனத்தின் விதியை உருவாக்குவதற்காக செயலாற்றி வந்துள்ள, இன்னும் செயலாற்றி வருகின்ற சக்திகள் பலவாகும். இவற்றுள் மதம் என்று நாம் சொல்கிறோமோ, அந்த சக்தியை விட வலிமை வாய்ந்தது வேறொன்றுமில்லை. எல்லா சமூக இயக்கங்களும், பின்னால் இங்கே நின்று அவை இயங்க காரணமான இருப்பது மதம் என்ற இந்த தனிப்பட்ட சக்தியே. மனிதர்களை எல்லாம் ஒன்றாக இணைந்து வாழச்செய் உணர்வை தோற்றுவிக்கின்ற சக்திகளுள் மகத்தான சக்தி மதம் என்பதிலிருந்தே தோன்றியுள்ளது. இனம், தட்பவெப்பநிலை, ஏன், பாரம்பரியம் இவற்றின் ... Read More »