ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக ... Read More »
Yearly Archives: 2016
தாய்லாந்தில் தமிழ்!!!
March 28, 2016
கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ————————————————- 1. தங்கம் -> தொங்கம் 2. கப்பல் -> கம்பன் 3. ... Read More »
மகரிஷியின் வாழ்க்கை வரலாறிலிருந்து….
March 28, 2016
18.1.1946-ல் ஆபீசில் ஒரு நிகழ்ச்சி. நிதிக் காப்பாளர் லீவு எடுத்துக்கொண்டு போய் விட்டார்…. ”அறிவினால் சிருட்டி செய்த அதிகாரப் பிரயோகத்தின் நெறியினை உண்ரா மாந்த்ர் நிர்வாகம் செய்யும் போது முறிவிலா முறைப் பழக்கி முன் விதி நினைந்து மக்கள் கறியிலா உண்வைக் கொள்ளும் கருத்தொக்க வாழ்கின்றாரே!” என்று எழுதிக் கொடுத்தேன். அதிகாரச் சட்டங்கள் அறிவாளிகளால் வகுக்க்ப் பெறுகின்றன. அவற்றை முட்டாள்கள் அமுல் நடத்தும்போது அந்த ஆளுகைக்கு உட்பட்டவர்கள், வருந்தத்தான் நேரும். உறவை முறித்துக்கொண்டு போனால் வாழ்வது எப்படி? ... Read More »
நிர்வாகம் என்பது !!!!
March 28, 2016
சிந்திக்க தெரிந்த உணர்வாளர்கள் நிலை எப்போதும் எக்காலத்தும் அந்தோ பரிதாபம்தான். ஏசு, புத்தர், டார்வின், சாக்ரடீஸ், கலீலியோ முதல் இன்றைய ஸ்டீபன் ஹாக்கிங் வரை எத்தனை எத்தனை விஞ்ஞானிகள், ஞானிகள்? மனித குலத்திற்கு தொண்டாற்ற தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள், சிந்தனையாற்றல் அற்ற மற்றும் சுயநலப்போக்குள்ள மக்களால் பட்ட துன்பங்களுக்கு எல்லையே இல்லை. ஏனெனில் நிர்வாகமும், அதிகாரமும் பல சமயங்களில் சிந்தனையாற்றல் அற்ற சுயநலமிகளிடம் சென்றுவிடுகின்றன. இந்த சுயநல ஒட்டுண்ணிகள் நிர்வாகம் என்பதே பிறரை அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதுதான் என்ற ... Read More »
வெற்றியின் ரகசியம்!!!!!
March 27, 2016
முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி ” முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?” என்று கேட்டார். ” உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது,ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது ... Read More »
மகான் யோகி ராம்சுரத்குமார்
March 27, 2016
பகவான் யோகிராம் சுரத் குமார் கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி நாம ஜபமே என்று கூறி, ராம நாம ஜபத்தின் மூலமே ஆன்மிகத்தின் மிக உயரிய நிலையை எட்டியவர் பகவான் யோகி ராம்சுரத் குமார். கங்கைக் கரையை ஒட்டியுள்ள நர்தரா எனும் கிராமத்தில், ராம்தத் குன்வர் – குசுமா தேவி தம்பதியினருக்கு 1918ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1 மகவாகத் தோன்றினார் யோகி ராம் சுரத் குமார். கங்கைக்கரைக்கு அடிக்கடி சாதுக்கள் பலர் வருவார்கள். அவர்களுடன் ... Read More »
கடுகின் மருத்துவ குணங்கள்:-
March 26, 2016
கடுகில் இரண்டு வகை உண்டு. 1) கருங்கடுகு 2) வெண்கடுகு இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம். இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும். செரிமானத்தைத் தூண்ட செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் ... Read More »
நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்
March 26, 2016
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் ... Read More »
மாபெரும் சபையினில் நீ நடந்தால்…
March 26, 2016
சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது. நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பானமனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்துகோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரைகுத்திவிடுகிறார்கள். மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொருதனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டுஎல்லாம் வேண்டுமென்றால் நாமே ... Read More »
பழங்களின் மருத்துவ குணங்கள்:-
March 26, 2016
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த ... Read More »