Home » 2016 (page 141)

Yearly Archives: 2016

இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

சவுபரி என்ற முனிவருக்கு உலகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மெய்யானஇறைவனைக் காண வேண்டும் என, கடலுக்கடியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டார். பத்தாயிரம் வருடத்திற்கு ஒருமுறை வெளியே வந்து, பழங்கள்,கிழங்குகளை சாப்பிட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் போய்விடுவார். ஒருமுறை,அவர் கண் விழித்த போது, பெரியதும், சிறியதுமாக 200 மீன்கள் கொண்ட கூட்டம் அவர்இருந்த இடத்தைக் கடந்தது. உடனே சவுபரிக்கு, “”ஆகா! இந்த மீன்கள் குடும்பமாக செல்லும் அழகே அழகு. நாமும் இல்லறத்தில் இருந்திருந்தால், மனைவி, குழந்தை, பேரன், பேத்திகள் என சந்தோஷமாக இருந்திருக்கலாமே!” என எண்ணினார். கடலை விட்டு வெளியே வந்து,மாந்தாதா என்ற மன்னனிடம் போய் பெண் கேட்டார். அந்த மன்னனுக்கு 50 பெண்கள். வயதான அவருக்கு ... Read More »

நம்பிக்கை தத்துவங்கள்

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது! ———————————————————————————– செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை . அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது. ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் . பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது. ———————————————————————————– வாழ்வு காலத்தில் நன்மையை செய்… தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்! ———————————————————————————– நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும். ———————————————————————————– நல்ல நண்பனை ... Read More »

வெற்றியின் படிமுறைகள்

நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும். இது ஏன்? என்ன காரணத்தினால் ?. அதீக நம்பிக்கை சோம்பல்த்தனம் அலட்ச்சியப்போக்கு சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம். மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்) பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம் மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில்பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறுஅட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள் இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு ... Read More »

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில முக்கியமான தத்துவ சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்- புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான் கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்-கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம். நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான ... Read More »

“இந்நிலையும் மாறிவிடும்.”

“இந்நிலையும் மாறிவிடும்.”

தியான வகுப்பு ஒன்றில் புதிதாய் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னுடைய தியானம் மிகக் கடுமையாயிருக்கிறது. இதனால் என் மனநிலையே மாறிப்போகிறது. கால்கள் மிகவும் வலியெடுக்கின்றன. மேலும் தொடர்ந்து நான் தூக்கத்தையே உணர்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை. பயங்கரமாக இருக்கிறது, முன்னெப்போதும் இப்படி உணர்ந்ததில்லை,” என்றான். குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” ஒரு வாரம் கழித்து, அதே மாணவன் மீண்டும் ஆசிரியரிடம் சென்று சொன்னான், “என்னுடைய தியானம் மிகவும் அருமையாயிருக்கிறது. இதனால் நான் அமைதியாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னையே நான் உணர்கிறேன்,” என்றான் குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” Read More »

வில்லியன் ஹென்றி பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்

வில்லியன் ஹென்றி பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்

பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயேகம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், பள்ளியில் கம்ப்யூட்டர்களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு. இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு புரோக்ராம் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அந்த காண்ட்ராக்ட்டை கேட்ஸின் நண்பர்கள் குழு ... Read More »

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் இல்லாமல் எப்படி வாழலாம் என்பதற்கு வீட்டுப்பிராணி பூனையேமிகச்சரியான முன்னுதாரனமாகும்.அதனுடைய செயற்பாடுகளை நன்கு கவனித்துப்பார்த்தால் எப்படி ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் வாழுது என்பதுநன்றாக விளங்கும்.(நண்பனின் அநுபவம்) மனிதனுக்கு ஏற்படும் துன்பத்துக்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் சில முக்கியமானவைகள் … ஆசையே துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் – கௌதம புத்தர் ஆசையினை கையாளும் முறைகளை அநுபவரீதியாக உலகிற்கு வழங்கியுள்ளார். மூடநம்பிக்கை – அன்றாட வாழ்வில் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம். முடிவெடுப்பதில் அவசரம்– சற்று பொறுமையாக ஆராய்ந்து முடிவெடுத்தல். நம்பிக்கை– எந்தவொரு விசயத்தையும் நம்ப முதல் ‘ஏன்?’,’எப்படி?’ என்ற கேள்விகளை மனதினுல் கேட்டு ... Read More »

சமயோசித ஆளுமையும் ஏற்படுத்தும் மாற்றங்களும்

சமயோசித ஆளுமையும் ஏற்படுத்தும் மாற்றங்களும்

ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால்,சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். அறிவுக் கூர்மையால் கூட சில காரியங்களை சாதிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சமயோசித பண்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவுக் கூர்மை 20 சதவீதம் மட்டுமே அணுசரனையாகஇருக்கிறது, சமயோசித ஆளுமையோ 80 சதவீதம் துணைபுரிகிறது என்று பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் கல்லுரிகள் மற்றும் பல கல்வி நிறுவனங்கள், அறிவுக் கூர்மை மட்டுமேஒரு மாணவனின் முன்னேற்றத்துக்கு முக்கியம் என்று கருதி அதன் அடிப்படையில்கல்வியைக் கற்றுக் கொடுக்கின்றன. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் சட்டம், மருத்துவம், ஆசிரியர் கல்வி, வியாபாரம் ... Read More »

வேண்டும் சகிப்புதன்மை!

வேண்டும் சகிப்புதன்மை!

சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம். நெருக்கடி மிகுந்த விட்ட இந்தக் காலத்தில், பஸ்சில் செல்லும் போது, ஒருவன் தெரியாமல் நம்மை மிதித்து விட்டால் கடுமையாக வலிக்கத்தான் செய்கிறது. அதை அவனிடம் இதமாகச் சொல்லலாமேதவிர, அவன் மீது கை நீட்டினால், பிரச்னை பெரிதாகத்தான் செய்யும். ஒரு இளைஞன், குரு ஒருவரிடம் வந்து, “”ஐயனே! தாங்கள் எனக்கு கடவுளைப் பற்றி உபதேசிக்க வேண்டும்,” என்றான். “”சீடனே! இதுபற்றிய உபதேசம் பெற வேண்டுமானால், நான் சொல்லும் விதிமுறைகளின்படி, கடுமையான விரதம் இருக்க வேண்டும். அந்த விரதத்தை நீ சரியாகப் பூர்த்தி செய்து விட்டதாக நான் கருதினால், உபதேசம் செய்வேன்,” என்றார். இளைஞனும் சம்மதித்தான். ... Read More »

எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு

* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும். * ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். * இந்த உலகில் உள்ள எல்லாம் இறைவனனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் கொடுப்பதை அனுபவியுங்கள். அதைத் தவிர அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆவலில் அலையாதீர்கள். * பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை,முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் ... Read More »

Scroll To Top