Home » 2016 (page 140)

Yearly Archives: 2016

அன்பால் வெற்றி கொள்!

* எதை எதிர்பார்க்கிறாயோ, அதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு. * சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால், சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும். * சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம். * தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும். * ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ... Read More »

முட்டாள் யார்?

முட்டாள் யார்?

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்றுமுல்லா மறு மொழி அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால்தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது. தம்மை வரச் சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது ... Read More »

மனம் புண்படலாமா?

மனம் புண்படலாமா?

பொதுவாக, கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறதுசமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள், “”இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!”என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து,சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார். ... Read More »

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the ... Read More »

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.  மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்துஅமுக்கினார்.அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியேஅமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் ... Read More »

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்,அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது  என இப்போது தான் தெரிந்தது.கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள்இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்தஅலைகளை ஈர்க்கும் சக்தியினை  (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு,திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாகவரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால்ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது எனஇப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. இவ்வளவு தானா… இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்றபெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”,அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்ததானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்துவிடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்குபெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள்பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும்எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்”ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால்நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல்காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதைவிட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்துவருகின்றன!!  பிரமிப்பு !!! இதை எல்லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழிதான்  நினைவுக்கு வருகின்றது. Read More »

இரண்டும் உண்டு பூமியிலே!

இரண்டும் உண்டு பூமியிலே!

ஒரு குருவும், சீடனும் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஓரிடத்தில், பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தனர். சீடன், குருவிடம் கேட்டான். “”குருவே! ஆண்டவன் தானே உலகத்தைப் படைத்தார். எல்லோரையுமே நல்லவர்களாகவே படைத்திருந்தால்…. உலகத்தில் பிரச்னையே இருந்திருக்காதே….?” குரு அதைக் கேட்டு சிரித்தார். “”அப்பனே! நீ எத்தனை நாள் உயிர் வாழ்வாய்?” என்றார். “”தெரியவில்லை! அநேகமாய் எழுபது ஆண்டு வரை இருக்க ஆசை…” “”ஏனப்பா! சாகாவரம் பெற ஆசையில்லையா? “”எப்படி முடியும் குருவே! பிறந்தவன் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும்…” குரு ... Read More »

கர்வமுள்ள மனது!

கர்வமுள்ள மனது!

ஒருஇளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன்ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தைசொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும்படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான். ஆனால், கடவுள் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். “இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு தரிசனம் கிடைக்கவில்லையே’ என்று நினைத்தான். சிலகாலம் அமைதியாக இருந்தான். ஒருசமயம், ஒரு மகானிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான். தான், படித்த மேதாவியாக இருந்தும் கடவுள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்றும் ஆணவமாகப் பேசினான். அவனது கர்வத்தைக் கவனித்த மகான்,””தம்பி! ... Read More »

ஆசையா போகவே போகாது!

ஆசையா போகவே போகாது!

வளமாக வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், காலப்போக்கில் பல பிரச்னைகளில் சிக்கி பணத்தை இழந்தார். அமைதி வேண்டி ஒரு துறவியிடம் முறையிட்டார். “”சுவாமி! பணக்காரனாக இருந்து ஏழையாகி விட்டேன். எல்லா துன்பத்திற்கும் காரணம் ஆசையே என்று உணர்ந்து விட்டேன். இவ்வளவு அடிபட்ட பிறகும்,ஆசையைக் குறைக்கும் வழி தெரியவில்லை. அதிலிருந்து அடியோடு விடுபடுவது எப்படி?” என்று கேட்டார். புன்னகைத்த துறவி,””அப்பனே! எத்தனை வேளை சாப்பிடுகிறாய்?” என்று கேட்டார். “”பணக்காரனாக இருந்தபோது, நினைத்த போதெல்லாம் சாப்பிட்டேன். இப்போது மூன்று வேளை சாப்பிடுகிறேன்….” என்றார். “”சரி! ஒருவேளை உணவை மறந்து விடு,” என பதிலளித்தார். துறவியின் பேச்சைக் கேட்டு ... Read More »

முயற்சியை தீவிரமாக்குங்கள்!!!

முயற்சியை தீவிரமாக்குங்கள்!!!

* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதும் செல்லரித்துப் போகும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும். * உணவு உடனே ஜீரணமாக வேண்டும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்றநல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை. * சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலை முடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரை மனதுடன் இறங்கக்கூடாது. இது ஆபத்தானது. * கிணற்றுக்கோ, ஏரிக்கோ அல்லது பரந்த சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும், நம் கையில் ... Read More »

Scroll To Top