Home » 2016 (page 139)

Yearly Archives: 2016

குருவை மிஞ்ச முடியுமா?

குருவை மிஞ்ச முடியுமா?

ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த குருவுக்கு பிரதான சீடன் இருந்தான். குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்கு செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூடசெய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது. ஒருநாள், குருவிடமே தனதுஎண்ணத்தைச் சொல்லி விட்டான். குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னார். அவனும் எடுத்து வந்தான். “”இதில் என்ன இருக்கிறது?” என சீடனிடம் கேட்டார். அவன் “தண்ணீர் இருக்கிறது’ என பதில் சொன்னான். “”இப்போது தண்ணீரை கொட்டிவிட்டு வா!” என்றார் அவனிடம். அவனும் அப்படியே செய்தான். “”இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!” என குரு ... Read More »

அரக்கனிடம் இரக்கம்!!!

அரக்கனிடம் இரக்கம்!!!

அரக்கன் ஒருவன் தினமும் ஒருவரைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தான். ஒருமுறை, ஒரு அந்தணரின் குடும்பத்தினர் அவனிடம் சிக்கிக் கொண்டனர். அரக்கன்அவர்களிடம், “”உங்களில் ஒருவர் எனக்கு இரையாக வேண்டும்,” என்றான். அந்தணர் அவனிடம், “”என் மனைவி நோயாளி. அவளைத் தின்றால் அவளது நோய் உன்னையும் பற்றும். நான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். மூத்த மகன் மேல் எனக்கு பாசம். இளையவன் மேல் என் மனைவிக்கு பாசம். அதனால், நடுவிலுள்ள மகனை எடுத்துக் கொள்,” என்றார். அரக்கனும் சம்மதித்தான். அந்த மகனை அவன் தன்னருகே இழுத்த போது, அவன் ... Read More »

கிடைத்தது புண்ணியம்

கிடைத்தது புண்ணியம்

ராமாயணத்தில் பரசுராமரும், ராமரும் மோதிக் கொள்வது போல ஒரு காட்சிவருகிறது. இதை படிப்பவர்கள் தெய்வங்களே மோதிக் கொள்ளலாமா? என்று கேள்விஎழுப்புகிறார்கள். காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. ராமன் சீதாவை இழந்து தவிக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்தவர் பரசுராமர். ஏற்கனவே, சிவதனுசுவை ஒடித்து சீதாவைக் கல்யாணம் செய்து கொண்ட ராமனிடம், “”நீ ஏற்கனவே பலரால் இழுக்கப்பட்டும், வளைக்கப்பட்டும் இற்றுப்போன சிவதனுசுவை ஒடித்ததில் ஆச்சரியமில்லை. இதோ என் கையில் இருக்கும் விஷ்ணு தனுசுவை தூக்கி நாணேற்று பார்க்கலாம்,” என்றார். ராமனும் எளிதாக அதைச் செய்து விட்டு, இப்போது இதில் நான் தொடுத்துள்ள பாணத்திற்கு இலக்கு யார்?” என்றார். உடனே ... Read More »

மரம் நன்மை செய்யுது மனுஷன்!

மரம் நன்மை செய்யுது மனுஷன்!

ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக் கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது. கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள். “மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்?’ என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார். நடுங்கியபடி அவள் மன்னர் ... Read More »

ஜென் தத்துவங்கள் : குருகுலக்கல்வி

ஜென் தத்துவங்கள் : குருகுலக்கல்வி

மன்னர் ஒருவர் குருகுலக்கல்வி கற்கும் தன் மகனைப் பார்க்க வந்தார். உடனே குரு ” மன்னரின் மகனை அழைத்து இந்த மூன்றாண்டுகளில் தியானத்தின்போது உன் காதில் என்னென்ன ஓசைகள் விழுந்தது?” எனக் கேட்டார். இடியோசை, அருவியின் இரைச்சல், யானையின் பிளிறல், சிங்கத்தின் கர்ச்சனை,புலியின் உறுமல்!” என்று மன்னரின் மகன் கூற, அரசரிடம், ” இன்னும் மூன்றாண்டுகள்கழித்து வாருங்கள் ” என்றார் ஞானி. அடுத்த மூன்றாண்டு முடிந்து மன்னர் வர, இளவரசனை அழைத்தார் ஞானி. இப்போது,பறவை ஒலி, ஆடு மாடுகளின்குரல்! கேட்டதாக அவன் சொல்ல, அரசனை மேலும் மூன்றாண்டுகள் கழித்து வரச் சொன்னார் ஞானி. அடுத்த முறை, “வண்டுகளின் ... Read More »

அவரால் முடியும்! உங்களால்….!

அவரால் முடியும்! உங்களால்….!

சிறுவன் ஒருவன் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருந்து வந்தான். முற்பிறவியின் பக்தி சிந்தனை இப்போதும் தொடர்ந்தது. ஒருநாள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த மன்னன்,சிறுவனின் முகத்தில் அலாதியான பிரகாசம் தென்படுவதைக் கண்டான். அவன் உடம்பில் புழுதி ஒட்டியிருந்ததைக் கண்டு, “”தம்பி! ஏன் இப்படி மண்ணில் விளையாடுகிறாய்?” என்றான். சிறுவனும் தத்துவமாகவே விளக்கம் அளித்தான். “”இந்த உடலே மண்ணால் ஆனது தானே! என்றாவது ஒருநாள் மண்ணில் சேரத் தான் போகிறது. அதனால் இப்போதே புழுதியானால் என்ன?” என்றான். சிறுவனின் பேச்சைக் ... Read More »

இதுவல்லவா இல்லறம்!

இதுவல்லவா இல்லறம்!

ஒரு அரசன், “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என ஒரு துறவியிடம் கேட்டான். “”நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே” என்று அவர் பதில் கூறினார். அரசனுக்கு புரியவில்லை. “”வா! என் கருத்தை விளக்குகிறேன்,” என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, “”எனக்கேது குடும்ப வாழ்வு,” என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார். ... Read More »

ஏன் இத்தனை கடவுள்!

ஏன் இத்தனை கடவுள்!

கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், “”ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்” என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார். “”ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?” பேச்சாளர் கேட்டார். “”உன் வயதென்னப்பா?” “”ஏழு” “”உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா….?” “”என் அம்மா; அக்கா; அது என் அப்பா…” பேச்சாளர் ... Read More »

வீரமான நடைபோடு!

வீரமான நடைபோடு!

மாவீரன் நெப்போலியனிடம் ஓடிவந்தான் அந்த வீரன். “”அரசே! தங்களுக்கு மகிழ்ச்சிதரத்தக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா?” என்றான். நெப்போலியன் சிரித்தான். “”வீரனே! நான் துன்பப்படும்படியாக ஏதேனும் செய்தி இருந்தால் முதலில் அதைச் சொல், மகிழ்ச்சி தரும் செய்தியை அடுத்ததாக கேட்கிறேன்,” என்றான். அப்போது, ஒரு வீரன் பணிவுடன்,””தாங்கள் இப்படி சொல்வதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். “”வீரர்களே! வாழ்க்கை என்ற போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். இன்பத்தை தரும் செய்திகள் தற்காலிக சுகத்தைத் தான் கொடுக்கும். துன்பப்படும்படியான செய்திகள் தான் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். வீரமாக நடை ... Read More »

ஜென் கதை : புத்தரின் மடாலயத்தில் நிகழ்ந்த சம்பவம்

ஜென் கதை : புத்தரின் மடாலயத்தில் நிகழ்ந்த சம்பவம்

அமைதியாக அமர்ந்திருந்த துறவியிடம் அரசன் கேட்டான். ”இறந்தபின் நமது புனிதமான ஆத்மாஎன்ன ஆகும்?” ”அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ” ”நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே” ”உண்மைதான்.. ஆனால் நான் இன்னும்சாகவில்லையே” என்றார் துறவி புன்னகையோடு. அருமையான ஜென் கதை ஒன்று… புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படைசந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தைமக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும்சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. ... Read More »

Scroll To Top