ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தின் அடியில், அவ்வழியே சென்ற நரி இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதைச் சுவைத்த நரி, “ஆஹா! பழம் தித்திப்பாக இருக்கிறதே!’ என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் தொங்கின. மேலும் சில பழங்களைச்சுவைக்க ஆசை எழுந்தது. மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. காகத்தை பார்த்து, “”தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல ... Read More »
Yearly Archives: 2016
வாக்குறுதியை மீறலாமா?
March 29, 2016
கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டு, அவர்களது மகள்களை அழைத்துச் சென்றார். அவர்களில் ஒருத்தியான அம்பை, சாலுவ தேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை,தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள். அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் ... Read More »
மாற்றி சிந்தித்து வெற்றியை அடையலாம் !
March 29, 2016
உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் “ஆம்” அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும். ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்திற்கும் காரணம். எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்தநல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும் நல்லவையாக இருக்கும். கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும் கெட்டவையாக இருக்கும். மனது என்பது ஒளி நாடாவை போன்றது. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து திருப்பி சொல்லும். ஆழ்மனது என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது. உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும். ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும். அதனால் தோல்விகரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள் ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும். இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும். ... Read More »
குடை தானம்!!
March 29, 2016
தானங்களில் உயர்ந்தது கல்விதானம், அடுத்து அன்னதானம். இதையடுத்து குடை,காலணி தானம் என்கிறது ஒரு கதை. பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது,கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வர தாமதமாயிற்று. “”ஏன் தாமதமாக வந்தாய் தேவி?” என்றார் ஜமதக்னி. “”நாதா! சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன்காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன்,” என்றாள். ஜமதக்னிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் ... Read More »
இவர் குற்றமற்றவர்!!!
March 29, 2016
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். ... Read More »
அர்ஜுனா அப்படியா?
March 29, 2016
கண்ணன் அர்ஜுனனிடம் “அப்படியா!’ என்றான். ஏன் இப்படி கேட்டான்? எங்கே கேட்டான்? குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்றுவில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத்தாக்கிய அம்பு, அதை முப்பது ... Read More »
இன்னும் ஒரே ஒரு நாள்…
March 29, 2016
ஆசைகளைப் பற்றி நமது வேதங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ! ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று – அடிப்படையான ஆசைகள், ஆதாவது,குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது – அவ்வப்போது வரும் ஆசைகள். அதாவது, என்பது என்ன ? இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம் ! டி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம் ! இதெல்லாம்தான் டாபிக்கல் ஆசைகள் ! அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை ! இதில்மூன்று ஆசைகள் அடக்கம். இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்றுதெரிந்தால், இன்னும் ஒரே ... Read More »
புதுமைக்குத் தேவை சவால்!!!
March 29, 2016
நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை, எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர் ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப் போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்! டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய ... Read More »
நிம்மதியே நிஜமான செல்வம்!
March 29, 2016
துறவி ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். பணக்காரன் ஒருவன் அவரிடம் ஆசி வாங்கினால் தனக்கு மேலும் பணம் பெருகும் என்ற எண்ணத்தில் அவரை சந்திக்கசென்றான். துறவியின் பாதத்தில் விழுந்து வணங்கினான். “”அன்பனே! எழுந்திரு! உனக்கு என்னப்பா குறை!” என்று கேட்டார். “”ஐயா! உங்கள் நல்லாசியுடன் நான் இன்னும் பணம் சேர்க்க வேண்டும் என்றுவாழ்த்துங்கள்,” என்று கூறினான். துறவி அவனிடம், “”செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. பொருளாசைக்கு எல்லையே கிடையாது. மனம் என்னும் குரங்கு தாவிக் கொண்டே தான் திரியும். நாம் தான் மனதை ஒருமுகப்படுத்தி நிலைநிறுத்தவேண்டும். இல்லாதவர்களுக்கு ... Read More »
நான் விரும்பும் மனிதன்!!!
March 29, 2016
மாற்றங்கள் அவன் சிக்னலிற்காகக் காரில் காத்திருந்தான். அவனுக்கு முன்னாலிருந்த காரில் ஒரு பெண் ஏதோ பேப்பரைப் படித்துக்கொண்டிருந்தாள் சிக்னல் பச்சைக்கு மாறியது. ஆனாலும் அந்தப் பெண் காரைக் கிளப்புவதாகக் காணோம். அவள் சிக்னல் மாறியதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. மறுபடியும் பச்சை சிவப்பாகியது. பின்னால் காத்திருந்தவனோ கோபத்தால் சிவந்திருந்தான். பல கெட்ட வார்த்தைகளைச் சொல்லி உறுமி, ஸ்டியரிங் வீலைக் கைகளால் குத்தி, தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த போலிஸ்காரர் அவனை எச்சரித்தார். அதற்கு அவன், நான் “என் காருக்குள் இருந்து கத்துகிறேன். அதற்கு நீங்கள் தடைபோட எந்த சட்டமும் இல்லை’ என்று கோபமாகக் ... Read More »