Home » 2016 (page 134)

Yearly Archives: 2016

கர்ணணின்….. கருணை!!!!

கர்ணணின்….. கருணை!!!!

ஒருநாள் கர்ணன் எண்ணைக்குளியல் எடுத்துக்கொண்டிருந்தான்: . அந்த நேரத்தில் வந்த ஒரு வறியவரை, வாயிற்காப்போனும் தடுக்காமல் உள்ளே அனுப்பிவைக்க ….அவ்வறியவரும், தங்கக் கிண்ணத்தில் எண்ணையோடு வேலையாட்கள் எண்ணை தேய்த்து விட்டுக்கொண்டிருக்க …. எந்த ஒரு ஆபரணமும் பூணாத நிலையில், இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்தவாறிருந்த கர்ணனை கண்டு இரு கரங்களையும் கூப்பினார் : . . கர்ணனும் புன்முறுவலுடன் , ” வாருங்கள் ….வாருங்கள் …..என்ன வேண்டும் தங்களுக்கு ?” என்றான் உடம்பில் அணிகலன்கள் ஏதுமின்றி ... Read More »

நமது பலம்!!! நமது பலவீனம்!!!

நமது பலம்!!! நமது பலவீனம்!!!

ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு கேட்டார். உடனே தரகர், “நானே பத்திரிகையில விளம்பரம் செய்து வித்துத் தரேன் சார்” என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டின் சொந்தக் காரருக்கு ... Read More »

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . … உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் . இராவணன் உபதேசித்தான் …….. 1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர். 2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை ... Read More »

பயம்.. எப்பொழுது வரும்..?

பயம்.. எப்பொழுது வரும்..?

ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான். இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள ... Read More »

திறமை இருந்தும் தோல்வி ஏன்?

திறமை இருந்தும் தோல்வி ஏன்?

நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப் பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம். அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும் வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை நமக்கு ... Read More »

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது. அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது. குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல்,நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது. உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும். பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கலாம். தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் ... Read More »

மனதைத் தொட்ட உண்மைக் கதை!!!

மனதைத் தொட்ட உண்மைக் கதை!!!

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர். ரெடி, ஸ்டிடி, கோ விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர். ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர். அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து ... Read More »

இதை விடப் பகை எது ?

இதை விடப் பகை எது ?

ஆபீஸை விட்டு வெளியே வரும் போது மழை சோ வெனப் பெய்யத் தொடங்கியது. ஏற்கனவே பாஸிடம் திட்டு வாங்கியதில் மூடு-அவுட் ஆகியிருந்த மாறன் இன்னும்எரிச்சலடைந்தான். இன்றைக்கு பார்த்து குடை கொண்டுவர மறந்து விட்டான்.நனைந்து ஈரமாகி விட்ட உடம்பை வேகமாக வீசிய குளிர் காற்று நடுங்க வைத்தது.எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தேங்கியிருந்த சேற்றை வாரி தலை முதல் கால் வரை இறைத்து விட்டுப் போய் விட்டது. ஆட்டோக் காரனை திட்டிக் கொண்டேகோபத்தின் உச்சத்தில் வீட்டிற்குள் நுழைந்தான். ஏங்க குடையை எடுத்து ... Read More »

சும்மா இருப்பது எப்படி?

சும்மா இருப்பது எப்படி?

ஒரு மடத்தில் “சும்மா இருப்பது எப்படி?” என செய்முறை விளக்கம் தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார். எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். சிலர் பேசாமலும், சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள். இன்னும் சிலர் மலைகள், காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த ... Read More »

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………

அவள் ஒரு கிராமத்து அம்மா…… நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்…… என்னிடம் வந்தாள்…..” ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதியபோன்…” நான் சொன்னேன்:” அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்…..சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்…. அதற்கு அந்த அம்மா:_” இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது…..” எவ்வளவு பெருமிதம்……. அந்த அம்மா முகத்தில்…… என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்……மாசம் ஒரு தடவை பேசுவான்……… இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை….. அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு ... Read More »

Scroll To Top