சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும் சொல்லத் தோன்றும். உண்மையில்,சேவையின் தரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம். ஏனென்றால்உற்பத்தியான பொருள், வாடிக்கையாளரைச் சென்று சேர்வதற்கு முன்பாக“பரிசோதனை இடைவெளி” உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியில் குறையிருந்தால்,அந்த பொருளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து வெளியே அனுப்பவாய்ப்புண்டு. ஆனால், சேவைத் துறை அப்படியல்ல. சேவை, வாடிக்கையாளர் முன்புதான்வெளிப்படுகிறது. வெளிப்படும் கணமே வாடிக்கையாளரைச் சென்றடைகிறது. எனவே,சேவையின் தரத்தைக் கட்டிக் ... Read More »
Yearly Archives: 2016
சில பாட்டி வைத்தியம்-1
March 29, 2016
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். ———————————————————————————– வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். ———————————————————————————- உணவு சாப்பிடுவதற்கு அரை மணி ... Read More »
முயன்றால் தான் முடியும்…அட ஆமாயில்ல!
March 29, 2016
பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப் போல் தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் அவன் இவ்வுலகில் மனிதனைப் போல நடக்க மட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. – டாக்டர் ராதாகிருஷ்ணன் நீங்கள் எவ்வளவு புயல்களை சமாளித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டப் போவதில்லை. கப்பலைப் பத்திரமாக துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பதைத் தான் உலகம் அறிய விரும்புகிறது. -வில்லியம் மெக்ஃபி கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது. – நார்மன் வின்செண்ட் ... Read More »
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை எளிதில் போக்க சில டிப்ஸ் :-
March 29, 2016
கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருப்பான வட்டங்களைத் தான் கருவளையங்கள் என்று சொல்கின்றனர். இந்த கருவளையங்கள் என்பது இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை இல்லை. மேலும் மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் ஒன்றும் மிகப்பெரிய பிரச்சனை இல்லை. உருளைக்கிழங்கு :- உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து ... Read More »
பொதுவாச் சொல்றேன்!!!
March 29, 2016
யாராவது நல்ல குணங்களோட இருக்கார்னு வைச்சுக்குங்க, “பழக்கம்னா அப்படிப்பழகணும்பா” அப்படீன்னு பாராட்டிச் சொல்றது பழக்கம். இல்லீங்களா! நான் பொதுவாச் சொல்றேன், நல்லதா ஒண்ணைக் கத்துக்கணும்னா அதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு. இப்ப, மேலை நாடுகளிலே ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காங்க. என்ன தெரியுங்களா? ஒரு பழக்கம் நம்மகிட்டே படியணும்னா குறைஞ்சது 21 நாட்கள் ஆகும் அப்படீங்கிறாங்க.உதாரணமா, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பறாங்க இல்லியா? அப்போ, முதலிலேஎரிபொருள் அதிகம் செலவாகுது. ஆனா போகப்போக அவ்வளவு ஆகறதில்லே. அதாவது ஒரு காலகட்டத்துக்குப் பிறகு எரிபொருளைக் குறைவா பயன்படுத்தினா போதும்ங்கிற பழக்கம் ராக்கெட்டுக்கு ஏற்படுது. மனிதர்களும், ஒரு நல்ல பழக்கத்தைப் பழகணும்னா அதுக்குன்னு கொஞ்சம் பயிற்சி ... Read More »
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை :-
March 29, 2016
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். ... Read More »
மூலிகைகளும், தீரும் நோய்களும்…
March 29, 2016
1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் 2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் 3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு 4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு 5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் 6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம் 7. முடக்கத்தான்: மூட்டுப் ... Read More »
மோதல்களை முடித்து வையுங்கள்
March 29, 2016
தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்து மோதல்கள்பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கிநகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. பலரும், கருத்து மோதல்களைத் தனிப்பட்ட பகையாக வளர்த்துக்கொண்டு வாழ்க்கைமுழுக்க சிரமப்படுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. நிறுவனத்துக்கு உள்ளேயோ வெளியிலோ ஏற்படும் மோதல்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பதுதான் புத்திசாலித்தனமான நிர்வாக உத்தி. மற்றொரு கோணத்தில் பாருங்கள்: பொதுவாகவே ஒரு சிக்கலுக்கு இரண்டு கோணங்கள்தான் இருக்கமுடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று, நம்முடைய கோணம். இன்னொன்றுஎதிராளியின் கோணம், இரண்டையும் தாண்டி, நடுநிலையான ... Read More »
வீட்டு வைத்திய குறிப்புகள்:-
March 29, 2016
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை. 1.சுக்கு,மிளகு,திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு ... Read More »
தோல்வியாளர்கள்!! வெற்றியாளர்கள்!! :நாலு வித்தியாசங்கள்
March 29, 2016
தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒருகட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும்இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர்,இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா? தோல்வியாளர்கள் இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது. சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படிமுயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வைவளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க ... Read More »