தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! ... Read More »
Yearly Archives: 2016
பாரதியார் படைப்புகள்
April 14, 2016
காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன் வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த் தீயினிலே வளர் சோதியே – என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) Read More »
வாதுக்கு வந்த பண்டிதர்!!!
April 14, 2016
பெயர் பெற்ற ஒரிய நாட்டுப் பண்டிதர் ஒருநாள் “திடுதிடுப்” பென்று விஜயநகரம் வந்து சேர்ந்தார். நேரே அரண்மனைக்குச் சென்றார். அரண்மனை முன்வாசலில் கட்டியிருந்த அந்தப் பெரிய வெண்கல மணியை அடிக்கத் தொடங்கினார். விஜயநகரப் பேரரசின் பண்டிதர்களை வாதுக்கு இழுக்கும் அறிகுறி அல்லவா அது! அந்த மணி ஓசை கேட்டு அரசர் கிருஷ்ணதேவராயர் திடுக்கிட்டார். உடனே ஒரிய நாட்டுப் பண்டிதரை வாதுக்கு இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! அப்பொழுது அரண்மனைப் பண்டிதர்களுக்கு ஆள் அனுப்பினார். அவர்களை உடனே அந்த ... Read More »
பாரத மாதா நவரத்தின மாலை!!!
April 14, 2016
(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) (காப்பு) வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே – சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா) திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு – பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் கண்ணொத்த பேருரைத்தக் கால். (கட்டளை கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் ... Read More »
தமிழறிவோம்!!!
April 13, 2016
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ —–> எட்டு ஆ —–> பசு ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி உ —–> சிவன் ஊ —–> தசை, இறைச்சி ஏ —–> அம்பு ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ —–> வினா, மதகு – ... Read More »
இந்திரனுக்கும்,கிளிக்கும் நடந்த உரையாடல் :
April 13, 2016
பீஷ்மர் இந்திரனுக்கும்,கிளிக்கும் நடந்த உரையாடல் ஒன்றை கதையாக தருமருக்கு உரைத்தார்.. ‘தருமா! காசி தேசத்தில் ஒரு வேடன் விஷம் தோய்ந்த அம்பையும்,வில்லையும் எடுத்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான். மான் கூட்டம் நிறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற்சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் சென்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பானதால் அந்த மரம் பட்டுப் போனது. மரம் அப்படியான போதும் அந்த மரத்தின் பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி ... Read More »
காவிரிபூம்பட்டினம்!!!
April 13, 2016
பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம் ! “காவிரிப்பூம்பட்டினம்” – கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் ... Read More »
தமிழரின் சாதனைத் தேடல்……….!!!
April 13, 2016
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்” எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் !!! தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு,கழுத்து,தலை,மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு,நாக்கு,பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது,அங்காத்தல் ( வாய் ... Read More »
இறைவனைக் காண்பது எப்படி?
April 13, 2016
* புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி, நிற்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னால் தட்டுத்தடுமாறிப் பலமுறை கீழே விழுவதுபோல, இறையருளைப் பெறுவதில் வெற்றி காண்பதற்கு முன் அநேக தவறுகள் பலமுறை நேரும். * எறும்பு விடாமுயற்சியுடன் இரை இருக்குமிடத்தை அடைந்து, அதைக் கவ்விக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று உண்ணுகிறது. அதுபோல பக்தர்களும் இறைவனை விடாமுயற்சியுடன் வணங்கி, அவன் அருளைப் பெற வேண்டும். * பாலில் வெண்ணெய் இருக்கிறது என்று கத்தினால் வெண்ணெய் கிடைக்காது. அதை தயிராக்கிக் கடைய வேண்டும். ... Read More »
பங்குனி உத்திரம் வரலாறு….!
April 13, 2016
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி ... Read More »