பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம் வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்! வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்! தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்த்திரு நாமமும் ... Read More »
Yearly Archives: 2016
தெனாலிராமன் குதிரை!!!
April 16, 2016
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ... Read More »
பிடித்த பொருள்களை எடுத்துச் செல்லலாம்!!!
April 16, 2016
சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல ... Read More »
புதுமைப் பெண்!!!
April 16, 2016
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண் சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலோளி தோற்றி நின்றனை பாரத நாடைலே; துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1 மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே ... Read More »
நாய்வாலை நேராக்கிய கதை!!!
April 15, 2016
ஒருநாள் அரசவையில் ”நாய் வாலை நேராக்க முடியுமா?” என்பது பற்றி சர்ச்சை ஏற்பட்டது. நாய் வாலை நேராக்க முடியாது என்று சிலரும் நாய் வாலை முறையான பயிற்சியின் மூலம் நேராக்கி விடலாம் என்று சிலரும் கூறினர். அதையும் சோதித்துப் பார்க்க மன்னர் விரும்பினார்.சிலருக்கு நாய்கள் கொடுக்கப்பட்டன. தெனாலிராமனும் ஒரு நாயைப் பெற்றுச் சென்றான். அவைகளைப் பராமரிக்க பணமும் கொடுக்கப்பட்டது. அவரவர்களுக்கு ஏற்பட்ட யோசனைப்படி நாய்வாலை நேராக்க முயற்சித்தனர். ஒருவர் நாய்வாலில் கனமான இரும்புத் துண்டைத் தட்டி விட்டார். ... Read More »
எங்கள் நாடு!!!
April 15, 2016
ராகம் – பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே பார் மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் ... Read More »
காலை வெட்டிய வீரம்!!!
April 15, 2016
ஒரு நாள் மாலை நேரம் அரண்மனை தோட்டத்தில் அரசரும் பெரிய தனவந்தர்களும் படைத் தளபதிகளும் கூடி இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீர தீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது தெனாலி ராமனும் அங்கு இருந்தான் . அவர்கள் பேச்சையும் கேட்டுக் கொண்டு இருந்தான் . அவர்கள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை. போங்கள் அய்யா , நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள் . நானும் போர்களம் சென்று இருக்கிறேன் ... Read More »
குளிரில் நின்றால் பரிசு!!!
April 15, 2016
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து ” பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் ... Read More »
சங்க நாதம்!!!
April 15, 2016
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! ... Read More »
பெண்கள் விடுதலைக் கும்பி!!!
April 14, 2016
காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம்பாடக் கண்களி லேயொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே. 1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் ... Read More »