கவியோகி சுத்தானந்த பாரதியாரின் (1897 – 1990) ஆன்மிகப் பயணத்தில் அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாடு 1910-லேயே தொடங்கிவிட்டது. சிவகங்கை ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகானந்த சங்கத்தில் அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாடு தோற்றம் கொண்டது. 28.1.1985-இல் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட பின்வரும் கருத்து, அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாட்டை விளக்க வல்லது. சிவகங்கை ராமகிருஷ்ண மடம் எனது தவ நிலையமாயிருந்தது – (1910-1914). அங்கே உபநிஷத்துப் பாராயணம், காலை – மாலை முறையாக ... Read More »
Yearly Archives: 2016
அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு….
December 12, 2016
ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் ... Read More »
வலிமையே வாழ்வு… பலவீனமே மரணம்!
December 11, 2016
சிறு வயதில் இருந்தே சுவாமி விவேகானந்தர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தைரியசாலியாக விளங்கினார். அதை அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்வோம். தீராத விளையாட்டுப் பிள்ளை! நரேனின் நண்பன் வீட்டின் அருகே பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று இருந்தது. நரேனும் அவனது நண்பர்கள் அனைவரும் அம்மரத்தில் ஏறி கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு விளையாடுவார்கள். நரேன் மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கி முன்னும் பின்னும் ஆடி கடைசியில் முன்னும் பின்னும் தொங்கிக் குதித்து மகிழ்ச்சியாக ... Read More »
கற்றாழை
December 11, 2016
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகாது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப் பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறிய வைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக் கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் ... Read More »
கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்…
December 11, 2016
ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன் ? என ஒரு சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன் ? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு ... Read More »
இந்தியாவின் ஆன்மிகத் தூதர்
December 11, 2016
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்டலத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத் திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத்தோடு விரைந்தெழும் இயக்கங்கள் – இது சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் உபயோகிப்பதற்கு என்று ஒதுக்கியிருந்த அறைகளில் ஒன்றில், நான் சுவாமி விவேகானந்தரைப் பார்த்தபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணமாகும். அவர் ஒரு வீரத்துறவி. ஆம், அவரிடம் நான் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன். ... Read More »
இன்று: டிசம்பர் 11
December 11, 2016
நிகழ்வுகள் 1282 – வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டான். 1789 – ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான். 1816 – இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது. 1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது. 1917 – பிரித்தானியப் படைகள் ... Read More »
துணிச்சல் கொள்! பயப்படாதே!
December 10, 2016
இன்றைய நவீன உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை குறைவான உழைப்பில் நிறைவான செல்வம் பெற நினைக்கிறோம். இந்தச் சூழலில் எந்த ஒரு மனிதனும் சிறிய தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மன தைரியம் இல்லாதவராய் இருக்கின்றனர். பணத்தால் மட்டுமே பலமானவன் என்று நினைப்பது தவறாகும். மனத்தாலும் பலமானவன் என்பதே உண்மையான பலமாகும். மனதில் பலமில்லாமல், கோழைத்தனமான மனதுடன் பலவீனமாக இருப்பதால் தான் தற்கொலைகள் என்ற நச்சுக் காற்று வேகமாக வீசி வருகிறது. ஆதலால் பலத்தால் வாழ்க்கை ... Read More »
முடக்கத்தான் கீரை
December 10, 2016
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் ... Read More »
எல்லோரும் சோம்பேறிகள்….
December 10, 2016
சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று. ... Read More »