Home » 2016 » December (page 13)

Monthly Archives: December 2016

அவர் அதையும் நமக்காகச் செய்கிறார்!

அவர் அதையும் நமக்காகச் செய்கிறார்!

”சேவை செய்ய வேணாம்னு நான் உங்களைச் சொல்லல்லை. ஆனா நம்ம பிஸினஸிலே கூடுதல் கவனம் தந்தா, நம்ம பொருளாதார நிலை வளருமில்லே?” என்று நீலா ஹரிஹரனிடம் கேட்டாள். களைத்து வந்திருந்த ஹரிஹரன் மனைவியை நோக்கினார்.  ‘செய்து வந்த சேவையைப் பார்த்துத் தான் இவள் என்னை விரும்பி மணந்தாள்; இன்று இப்படி மாறிவிட்டாளே!’ என எண்ணியபடி உண்ண ஆரம்பித்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நாயகன் ஹரிஹரன். நடுத்தரமான சிந்தனைகள் உடையவள் நீலா. ”நீலா, இன்னைக்கு மட்டும் ஒரு பத்துப் ... Read More »

இன்று: டிசம்பர் 8

இன்று: டிசம்பர் 8

நிகழ்வுகள் 1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும். 1864 – இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. 1881 – ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர். 1912 – அல்பேனியாவின் “கோர்சே” நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர். 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர். 1941 ... Read More »

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். – சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். – நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும். – தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி ... Read More »

விவேகானந்தர் – குழந்தைப்பாடல்

விவேகானந்தர் – குழந்தைப்பாடல்

காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்! கட்டான உடலழகர் விவேகானந்தர்! . நாவினிய சொல் படைத்தார் விவேகானந்தர்! நல்ல மனம் கொண்டவராம் விவேகானந்தர்! . இந்துக்களின் பெருமை சொன்ன விவேகானந்தர்! இந்தியாவைச் சுற்றியவர் விவேகானந்தர்! . குரு பெயரால் மடம் அமைத்தார் விவேகானந்தர்! குன்றாத மணிவிளக்கு விவேகானந்தர்! . நேரான பார்வை கொண்ட விவேகானந்தர்! நேசித்தார் அனைவரையும் விவேகானந்தர்! . வீரத்தை வேண்டியவர் விவேகானந்தர்! விழிகளிலே அருள் மிளிரும் விவேகானந்தர்! . சிறப்பான செயல் புரிந்தார் விவேகானந்தர்! சிறுமை கண்டு ... Read More »

இன்று: டிசம்பர் 7

இன்று: டிசம்பர் 7

நிகழ்வுகள் கிமு 43 – ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. 1787 – டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. 1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1900 – மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் ... Read More »

மீன்

மீன்

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ... Read More »

சிவ சிவ சுவாமிஜி!

சிவ சிவ சுவாமிஜி!

திருக்கைலாயம்.  தியானத்தில் கைலாசபதி வீற்றிருக்கிறார். சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூத, சிவ கணங்கள். ஸ்ரீருத்ர சமகம் பாராயணம் ஒலிக்கிறது. பிரணவ ஜபம் கைலாசத்தையே ஆனந்தமாக அதிரச் செய்கிறது. சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கித் தமது எல்லையற்ற மகிமையில் மக்னமாகியுள்ளார். அப்போது ஒரு தேவவாணி கேட்டது: ஏழைகளிடமும், பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன் தான் – உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனின் பூஜை, ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரே ஓர் ஏழைக்காவது, ... Read More »

குழந்தை வளர்ப்பு 10 கட்டளைகள்

குழந்தை வளர்ப்பு 10 கட்டளைகள்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போலச் செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர். குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க முடியும். அதற்கு முக்கியமான கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் உற்று நோக்கவேண்டும். 1) பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரி யாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும். ... Read More »

இன்று: டிசம்பர் 6

இன்று: டிசம்பர் 6

1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். 1240 – உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது. 1865 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது. 1877 – வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. 1884 – வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. ... Read More »

அதிர்ஷ்டமான மனிதன்

அதிர்ஷ்டமான மனிதன்

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர். முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா. காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த ... Read More »

Scroll To Top