1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா
நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா
நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா
நண்பர் 2: ?????
2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் …
காதலி : ????
3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி
அப்பா : ?????
4) மேனேஜர் : எங்க பேங்க் ‘ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
மேனேஜர் : ?????
5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?
மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்
பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல,
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் …
பிரின்சிபல் : ?????
6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வாரம்?
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
கடவுள் : ?????
7) அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை “போருக்கு” அழைக்கிறார்.
மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் “பாருக்கு” வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்
அமைச்சர் :?????
8) காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி : (பேச வில்லை)
காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
காதலி : (பேச வில்லை)
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
காதலி : பேசாம இரு கவுன்ட்(கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
காதலன் : ?????
9) கணவன் : என் கண்ணை பார்… அதுல என்ன தெரியுது
மனைவி : உங்களுடைய உண்மையான லவ்
கணவன் : நாசமா போச்சு… கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி
மனைவி : ????
10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா??
நர்ஸ் : இல்ல
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : உயிரே இல்ல அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?
11 ) நண்பன்1 … மச்சி, இதுக்கு மேல நாம +2ல பாஸ் ஆவோம்ன்னு நம்பிக்கை இல்லடா.. நாம ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கலாமா…?
நண்பன் 2… அறிவு இருக்காடா உனக்கு..? கிறுக்கு தனமா முடிவு பண்ற… செத்துட்டா, திரும்ப பொறந்து வருவோம், அப்புறம் மறுபடி LKGல இருந்து படிக்க சொல்லுவாங்க…அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை மச்சி…
12 ) அடுத்த அப்துல்கலாம்…!!!
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
“தம்பி … உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?”ன்னு கேட்டேன் நான்.
“சொல்லுங்க அங்கிள் … தெரிஞ்சிக்கிறேன்”
“தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க …” “ம்ம்ம்ம்” “முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்”
“ம்ம்ம்” “இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்” “ம்ம்ம்” “அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்” “ம்ம்ம்” “கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் …
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு”
“ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு”
“என்ன?” . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
“மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??” (நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ)
13 ) “எதுக்கு!.. நீங்க இன்னொரு கல்யாணம்
பண்ணிக்கட்டுமான்னு கேட்கறீங்க?”…
“நீதானே நம் மருமகளை என் ஒருத்தியால
சமாளிக்க முடியலன்னு சொன்னே”!…
14 ) மருமகன்கள்..
அவளுக்கு தன்
மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க
ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப்
பிரயாணம் போனாள்..
நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல
விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம்
புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில்
ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ”
மாமியாரின் அன்புப் பரிசு..”
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த
சோதனை நடந்தது.. அவரும்
ஒரு மாருதி கார் வென்றார்..”
மாமியாரின் அன்புப் பரிசாக..”.
மூன்றாவது மருமகனுக்கும் இந்த
சோதனை நடந்தது.. அவர் கடைசி…….
வரை…….. காப்பாத்தவே ……இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’
உட்டப்ப சொன்னான்.. “போய்த்
தொலை..பண்டாரம் … எனக்கு காரே….
வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல
போயிக்கிறேன்..பொண்ணா…..
வளர்த்து வச்சிருக்க..நீயி…. ?” மாமியார்
செத்துட்டுது..
மறுநாள் அவன்
வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின்
கார் நின்னுச்சு.. ” மாமனாரின் அன்புப்
பரிசு” என்ற அட்டையோட…!
15 ) மனைவி : ஏங்க.. ஒருநாள்
ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப்
படறாங்களே.. இந்த வாக்காளர் எல்லாம்
பாவம்தானே..?
கணவன் : அடப் போம்மா..
அஞ்சு நிமிஷத்துல தாலியக்
கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற
ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!