Home » பொது » இன்று: டிசம்பர் 22
இன்று: டிசம்பர் 22

இன்று: டிசம்பர் 22

நிகழ்வுகள்

1790 – துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
1807 – வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.
1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1849 – ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1915 – மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1937 – லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1963 – லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1989 – கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த “பிராண்டன்பேர்க் கதவு” 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990 – மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.

பிறப்புக்கள்

1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708)
1853 – அன்னை சாரதா தேவி, (இ. 1920)
1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
1887 – இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

இறப்புகள்

1995 – ஜேம்ஸ் மீட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)
2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் (பி. 1910)
2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top