Home » உடல் நலக் குறிப்புகள் » ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?
ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?

இதற்கான சிகிச்சையை, எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும்?

ரத்தப் புற்றுநோய், எல்லா தரப்பினரையும் பாதிக்கக் கூடியது. சிறுவர்களுக்கு வரும் நோயை, கீமோதெரபி கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். பெரியவர்களுக்கு, (20 முதல், 50 வயது வரையுள்ளோர்) புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். முதியோருக்கு, (55 முதல், 60 வயது) இந்நோய் வந்தால், 15 முதல், 20 சதவீதம்

பேருக்கு, ‘கீமோதெரபி’ மூலம் குணப்படுத்தலாம். ‘பல்லியேட்டிவ் ஹீதெரபி’ அல்லது ‘டிசீஸ் மாடிபிங் ஏஜென்ட்’ போன்ற மருந்துகளால், நோய் தன்மையை குறைத்து, வாழ்வை நீடிக்க இயலும். அதனால், முதியோருக்கு நோயின் தன்மை மற்றும் (கோ மார்பிடிட்டி) பிறநோய்களின் தன்மையைப் பொறுத்தும், சிகிச்சை நிர்ணயிக்கப்படுகிறது.


வயது அதிகமாக இருந்தாலும் கூட, கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை (உடல் வலுவாக இருந்தால்) மாற்று அறுவை சிகிச்சை மூலம், ஒரு சிலரை குணப்படுத்தலாம்.


பெரும்பாலும், 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு, கீமோதெரபி அல்லாத முறையிலோ அல்லது குறைந்த அளவு கீமோதெரபி மூலமோ, சிகிச்சை அளிக்கப்படுகிறது.


ரத்தப்புற்று நோயின், தீவிர தன்மையை கண்டறிவது எவ்வாறு?

முன்னரே கூறியவாறு, கீமோதெரபி மட்டும் போதுமா அல்லது ஸ்டெம்செல் சிகிச்சை தேவையா என்பதை, கண்டறிய வேண்டும். இவ்வாறு கண்டறிந்து, ஓரிரு மாதங்களுக்குள் எந்த விதமான சிகிச்சை தேவைப்படும் என்பதை, முடிவு செய்ய வேண்டும்.


ஒரு, ‘டிரான்ஸ்பிளான்ட்’ மூலம், குணப்படுத்தக் கூடிய நோய்க்கு, வெறுமனே, கீமோதெரபி மட்டும் கொடுப்பதால் நேரமும், பணமும்தான் விரயமாகிறது. இதனால், கண்டிப்பாக நோயின் தீவிர தன்மையை முன்னரே கண்டறிவது முக்கியம்.


இது, எவ்வாறு அறியப்படுகிறது என்றால், அவருக்கு பண்ணப்படும் குரோமோசோம் மற்றும் மூலக்கூறு டெஸ்ட் மூலம், நோய் தன்மை அறியப்படுகிறது.


பின், அது, கீமோதெரபியால் குணப்படுத்த கூடிய நோயா அல்லது டிரான்ஸ்பிளான்டால் குணப்படுத்த கூடிய நோயா என்று அறியப்படுகிறது.


மேலும், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது, அந்த நோய், எவ்வளவு வேகமாக குறைகிறது என்பதை, அறியும் வாய்ப்பு உள்ளது. இதற்கு, எம்.ஆர்.டி., (மினிமல் ரெசிடுயல் டிசீஸ்) என்று பெயர். எம்.ஆர்.டி., பரிசோதனை முறை, இந்தியாவிலேயே ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது நோயின் தன்மையை பொறுத்து தான், சிகிச்சை எவ்வளவு நாள் பெற வேண்டும் என்பது உள்ளது. பெரும்பாலும், ஏ.எல்.எல்., – ஏ.எம்.எல்., என, இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.


அதற்குள், சிறு பிரிவுகளும் உண்டு. ஏ.எல்.எல்., என்பது, முதல் நான்கு வாரங்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.


அதன்பிறகு, வெளிநோயாளியாகவே சிகிச்சை மேற்கொள்ளலாம். ஏ.எம்.எல்., என்ற நோய்க்கு, பெரும்பாலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


டாக்டர் ஆர்.சுதந்திர கண்ணன்,
கோவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top