இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். “தம்பி ஆஸ்பத்திரி போகணும்” “நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்”. “என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா” என்றார் அப்பெண்மணி. “நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்” என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் ... Read More »
Daily Archives: December 18, 2016
80/20 விதி
December 18, 2016
ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானி. ஏனென்றால் ஆராயும் போதே வாழ்க்கை ஆழமாகின்றது. சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமாகிறது. அப்படி ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி. இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 ல் ... Read More »
வெற்றிக்குணங்கள் 13
December 18, 2016
ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி ... Read More »
கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல
December 18, 2016
பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ... Read More »
இன்று: டிசம்பர் 18
December 18, 2016
நிகழ்வுகள் 1271 – குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது. 1505 – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான். 1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார். 1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது. 1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார். 1926 – ... Read More »
பித்தம் தெளிய மருந்து
December 18, 2016
பைத்தியங்களுக்கென்றே தனியாக ஒரு வைத்தியசாலை வைத்து நடத்தும் டாக்டர் குருநாதனைப் பற்றிப் பொதுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. பைத்தியங்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். டாக்டருக்கு ஐம்பது வயதுக்குமேல் ஆகிவிட்டது. என்றாலும் அவரிடம் இளமை, உற்சாகம், உழைப்புத்திறன், நேர்மை இவ்வளவும் இருந்தன. மேல்நாட்டு வைத்தியம், சித்தம், ஆயுர்வேதம், யுனானி, மனோதத்துவம் இப்படிப் பலதுறைகளிலும் உள்ளவர்கள் எப்படிப் பைத்தியங்களுக்குச் சிகிச்சை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, நோயாளிகளுக்கு ஏற்ற முறையில் வைத்தியம் செய்து, வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் அவர். ... Read More »