Home » பொது » தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிலம்பம் ஒரு பார்வை!!!
தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிலம்பம் ஒரு பார்வை!!!

தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிலம்பம் ஒரு பார்வை!!!

தமிழர்களின் தற்காப்பு கலை சிலம்பம்:

மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும். உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன.

ஆதி மனிதன் கொடுரமான மிருகங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள அவற்றின் செயல்பாடுகளை ஒத்தே தனது பாதுகாப்பு முறைகளை உருவாக்கினான் . பிறகு கற்காலத்திலும் ( stone age ) உலோக காலத்திலும் ( iron age ) வெவ்வேறு
ஆயுதங்களை படைத்தான். தற்காப்பு கலை என்றாலே நமக்கு சீனாவோ , ஜப்பானோ தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள பழைய தொன்மையான தற்காப்பு கலைகள் எல்லாம் தமிழ் பேசுபவர்களால் உருவாக்கப்பட்டது. ஆச்சிரயமாக உள்ளதா ?

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தற்காப்பு கலையானது தமிழகத்திலும் , வடகிழக்கு இலங்கையிலும் , கேரளாவிலும் , ஆந்திராவின் தென் பகுதியிலும் பழக்கத்தில் இருந்தது. கி பி 3 நூற்றாண்டுக்கு முன்பு வரை இலங்கை முழுவதும் தமிழ் மொழியே பேசப்பட்டது. பின்பு வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்களால் இப்பொழுது பேசப்படுகிற சிங்கள மொழியானது உறுவானது. பின்பு வந்த சிங்களர்களும் தென் பகுதியிலும், மேற்கு பகுதிகளிலும் தான் குடி புகுந்தனர். ஆதலால் இலங்கையில் தமிழ் பேசப்பட்ட இடங்களிலே தற்காப்பு கலை இருந்தது என்பது தெளிவு.

இரண்டாவதாக கேரளாவில் உள்ள மலையாள மொழியானது கி பி 8 நூற்றாண்டுக்கு பிறகே தமிழிருந்து பிரிந்து சென்றது. அதற்கு முன்பு வரை இருவரும் பொதுவான மொழியாகிய தமிழையே பேசினார். ஆனால் மிகவும்
பழமையான கலையாக ( இரோப்பியர்களால் ) கூறப்படும் களரி கி பி 6 இம் நுற்றாண்டிலே பழக்கத்தில் இருந்ததாக தெரியப்படுகிறது.ஆகையால் இங்கும் தமிழ் மொழி பேசுபவர்களே உபயோகித்து வந்தனர்.

தெலுங்கு மொழி உருவாவதற்கு முன்பு வரை ஆந்திர மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் தமிழ் மொழியே புழக்கத்தில் இருந்தது வடபகுதி முழுவதும் Prakrit என்ற மொழியையே பேசினார்கள் .

பல கட்டுரைகளிலும், வலைப்பதிவுகளிலும் தற்காப்பு கலையானது சீனாவில் தரும போதிதர்மா என்பவரால் கற்று கொடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. இவர் தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே .கட்டுரையின்படி இவர்தான் மூச்சு பயிசியும், யோகாவும் கற்று கொடுத்தார் என்பதால் சீனர்களுக்கு முன்பே நாம் இக்கலையில் தேர்ந்திருந்தோம் என்பது உறுதி.

கி.பி 10 நுற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட பல்லவர்களின் இளவரசன் கண்டியன் என்பவன் தான் கம்போடியாவின் முதல் மன்னன் . கி பி 10 நுற்றாண்டில் உச்சத்தில் இருந்த சோழர்கள் தனது அதிகாரத்தை தெற்காசிய
முழுவதும் பரப்பினர். கி பி 12 நுற்றாண்டில் பல்லவர்களும், சோழர்களும் தெற்கசியர்களுடன் மிகவும் நெருங்கிய கடல் வாணிபத்தில் ஈடுபட்டனர். தமிழர்ஆட்சிக்கு கீழ் அடிக்கடி பல தெற்காசிய நாடுகள் கொண்டு வரபபட்டன.தமிழர்கள்
ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்களிருந்து அவர்களின் கலைத்திறமையை கண்டறியலாம். இக்கட்டுரையின்  மூலம் நான் கூற விரும்புவது என்னவென்றால் தமிழர்கள் தான் தற்காப்பு கலையை சீனாவுக்கும், தெற்காசியாவுக்கும் பரப்பியவர்கள். இதை இந்தோனேசியாவிலும், கம்போடியாவிலும் உள்ள கோவில்களின் மூலமும்
மேற்கூறிய சான்றுகளின் மூலமும் அறியலாம்.


தமிழர் தற்காப்பு கலைகளை பின்வருமாறு பிரிக்கலாம்

ஆயுதமில்லா தற்காப்பு

அடிதடி
குத்து வரிசை
மல்யுத்தம்
வர்மக்கலை

ஆயுதம் கொண்டு [b]தற்காப்பு [/b]

சிலம்பம்
வளரி
முச்சாண்
இரட்டை முழங்கோல்
இரட்டை வாள்
வாள்
வாள், கேடயம்
வெட்டரிவாள்
கத்தரி
பீச்சுவா
சுருள் பட்டை
சூலம்
மடுவு
சுருள் கொம்பு

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம்

ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற
பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’ ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார்
அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.

வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

தமிழர் தற்காப்புக் கலைகளுள் சிலம்பமும் ஒன்றாகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை.

சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். விழாக்கால நிகழ்ச்சிகளில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.

சிலம்பின் வரலாறு :

பழங்கால தமிழ் மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட தற்காப்பு முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு, சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.

ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’ ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பம் பற்றிய ஆய்வுகள்:

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

பெயர் தோற்றம்:

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது.

மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,
விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, “சிலம்பம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், “சிலம்பன்’ என்ற பெயருண்டு. கம்பு
சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு “சிலம்பம்’ என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் “சிலம்பரம்’ என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பத்தடி

சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற
மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.

சிலம்பின் பிரிவுகள் :

சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகள் பின்வருமாறு.

மெய்ப்பாடம் :

இது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம்.

உடற்கட்டுப்பாடம் :

குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும்.

மூச்சுப்பாடம் :

மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.

குத்துவரிசை :

சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.

தட்டுவரிசை :

ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.

பிடிவரிசை :

எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.

அடிவரிசை :

ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன.

சிலம்பாட்ட வகைகள்:

துடுக்காண்டம்

குறவஞ்சி

மறக்காணம்

அலங்காரச் சிலம்பம்

போர்ச் சிலம்பம்

பனையேறி மல்லு

நாகதாளி

நாகசீறல்

கள்ளன்கம்பு

சிலம்பாட்டத்தின் பயன்கள் :

இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சிலம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக்(தடியை) கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top